ஒரு தந்தையின் குமுறல் மனிதநேயர்களின் நெஞ்சங்களில் எல்லாம் எதிரொலிக்கிறது. மும்பையில் பத்து வெறியர்களால் அடித்துக் கொல்லப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியான தாம்தேவின் தந்தையின் குமுறல்தான் அது.
கடந்த மாதம் 26ஆம் தேதி (அக்டோபர்)
ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த அந்தத் தொழிலாளி மராட்டிய மொழி வெறியர்கள் 10 பேர் கொண்ட குழுவால் அடித்தே கொல்லப்பட்டார்.
மகாராட்டிர மாநிலத்தில் அந்நியருக்கு இடம் இல்லை. வேறு மாநிலத்தவர்களே வெளியேறுங்கள் என்ற ஒரு முழக்கத்தைக் கொடுத்து வரும் கட்சிதான் பால்தாக்கரேயின் சிவசேனா கட்சி. அந்தக் கார்ட்டூனிஸ்டின் மருமகன்தான் ராஜ்தாக்கரே! சிவசேனா கட்சிக்கு அடுத்த வாரிசு யார் என்ற சண்டை குடும்பத்துக்குள் குத்துவெட்டு!
மகன் உத்தவ் தாக்கரேயா? மருமகன் ராஜ்தாக்கரேயா? இந்தக் குடுமிப்பிடியில் வெளியேறி புதுக் கட்சியைத் தொடங்கினார்
மராட்டிய நவ நிர்மாண் சேனா என்று அதற்குப் பெயர்.
வெறியைக் கிளப்புவதில் யாருக்கு முதல் பரிசு என்பது தான் அங்கு போட்டி. அதன் விளைவுதான் அந்த அமைப் பைச் சேர்ந்த பத்து பேர்கள் சேர்ந்து, உ.பி.யைச் சேர்ந்த ஒரு தொழிலாளியை பல பேர் முன்னிலையிலே அடித்துக் கொன்றதாகும். மகனைப் பறிகொடுத்த குடும்பத்துக்கு ரூ.2
லட்சம் அளிப்பதாக மகாராட்டிய மாநில அரசு அறிவித்தது.
தன்மானமுள்ள அத்தோழரின் தந்தையான ராம் நரேன் எனக்கு எதற்கு இந்த இரண்டு லட்சம் ரூபாய்? நான்
20 லட்சம் ரூபாய் தருகிறேன்
இழந்த என் மகனை உயி ரோடு தருவீர்களா? என்று எதிர் வினா தொடுத்துள்ளார்.
தரம்தேவ் ஒரு கும்பலால் கொல்லப்பட்டார் என்ற தகவலால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகளைவிட அத்தொழிலாளர்த் தோழரின் தந்தையார் கொடுத்த தன்மானக் குரல் அதிகமான அதிர்வுகளை மக்கள் மத்தியிலே எழுப்பி விட்டது.
தரம்தேவ் ஒரு ஆசிரிய ராம்;
மகனை இழந்து துயரத்தின் ஆழமான மடியில் படுத்துப் புரளும் இவரின் வினாவுக்கு யார்தான் பதில் கூற முடியும்? எந்த உதவிதான் அவருக்கு ஆறுதலாகவும் அமைய முடியும்?
வெறியர்களின் உணர்ச்சிக்குக் காரணமான அந்தச் சிவ(சேனா)த்தின் ஆணி வேரை வெட்டி, கொல்லப்பட்ட தோழரின் உடல் புதைக்கப்பட்ட இடத்தில் மலர் வளையமாக வைக்கப்படட்டும்!
2.11.2008 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக