ஞாயிறு, 16 ஜூலை, 2017

எங்கே பிராமணன்?


எங்கே பிராமணன் எங்கே பிராமணன்? என்று திருவாளர் சோ ராமசாமி அடிக்கடி கேட்டுக் கொண்டே இருக்கிறார். துக்ளக்கில் எழுதி ஒரு புத்தகமாகவும் போட்டு விட்டார். ஜெயா தொலைக்காட்சியிலும் தோன்றி விளக்கங்களை விஸ்தாரமாக அள்ளியும் கொட்டினார்.

அதற்கெல்லாம் பெரிய விளக்கங்கள் தேவைப்படாது எங்கே பிராமணன் என்ற அவரின் கேள்விக்கு முகவரியுடன் மிக எளிமையாகப் பதில் சொல்லிவிடலாம்.

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கே மச்சேஸ்வரர் மச்சேஸ்வரர் என்று ஒரு கோயில் இருக்கிறது. அந்தக் கோயிலில் தேவநாதன்  தேவநாதன் என்று அர்ச்சகன் இருக்கிறான்அவன்தான் பிராமணன். அந்த முகவரியைத் தேடி இப்பொழுது அலைய வேண்டாம் சோ. அவன் மச்சேஸ்வரன் கோயில் கர்ப்பக்கிரகத்திலேயே பல பெண்களைக் கெடுத்திருக்கிறான். கிருஷ்ண பகவானின் காமலீலைகளை நடத்தியிருக்கிறான்.

இப்பொழுது அந்த ஆசாமி வேலூர் ஜெயிலில் இருக்கிறான். இனி நீதிமன்றத்துக்கும் அவனால் வரவே முடியாது. காரணம் நீதிமன்றம் வந்தால்  அந்த அர்ச்சகப் பார்ப்பானைப் பார்த்த மாத்திரத்திலேயே தமிழச்சிகள் கையில் செருப்பையும், துடைப்பத்தையும் எடுத்துக் கொண்டு கிளம்புகிறார்கள். அதனால் அவன் இருக்கும் வேலூர் ஜெயிலுக்கு திருவாளர் சோ ராமசாமி மனுப் போட்டுப் பார்க்கலாம்; பட்சணங்களையும் கொண்டு போய் கொடுக்கலாம். இன்னொரு கொசுரு பேஷா இருக்கிறது  அந்தத் தேவநாதனின் தோப்பனார் ஒன்று சொல்லியிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே வேத சாஸ்திரம், ஸ்மிருதிகளையெல்லாம் சொல்லிக் கொடுத்து வளர்த்தேனே  அவனா இப்படி ஆகி விட்டான் என்ற கண்ணீர் வடித்திருக்கிறார்.

பிரச்சினையே அதுதான். வேதங்களும், உபநிஷத்துகளும் இந்தச் சமாச்சாரங்களைத் தானே சொல்லிக் கொடுக்கின்றன.

உடம்பு முழுவதும் நெய்யைத் தடவிக் கொண்டு ஒரு பெண்ணானவள் யாருடன் புணர்ந்தாலும் விபச்சார தோஷம் இல்லை என்று யாக்ஞவல்யர் எழுதி வைத்து விட்டுப் போயிருக்கிறாரே (நூல்: சுவாமி தயானந்த சரஸ்வதியின்  ஞானசூரியன்)

ஓர் அழகிய பெண்ணின் குறியைப் பார்த்துக் கொண்டு பத்தாயிரம் மந்திர செபம் பண்ணுகிறவன் தேவகுருவுக்குச் சமமானவன் (நூல்: ஞானசூரியன்).

தேவகுரு என்றாலும் தேவநாதன் என்றாலும் (என்னே பெயர் பொருத்தம்!) ஒன்றுதானே! இவற்றையெல்லாம் தன்மகன் தேவநாதனுக்குச் சிறு வயதிலேயே சொல்லிக் கொடுத்தால் அவன் இப்படித் தானே நடந்து கொள்வான்?

20.12.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...