ஞாயிறு, 16 ஜூலை, 2017

மோடி வைக்கிறார்



உலகில் பயங்கரவாதம் தலையெடுக்கிறது  அதற்கு மகாத்மா காந்தியின் அகிம்சா வழிதான் சிறந்த தீர்வு; அந்த வழியை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டும் என்று காந்தியார் பிறந்த போர்ப்பந்தரில், காந்தியார் அவர்களின் 140 ஆம் ஆண்டு பிறந்த நாளான நேற்று திருவாய் மலர்ந்தருளியுள்ளவர் வேறு யாருமல்லர்  அகிம்சையின் சொரூபமான(?) குஜராத் மாநில முதலமைச்சர் சாட் சாத் நரேந்திர மோடிதான்! ஆம்! ஓநாய்கள் சைவ மாநாடு கூட்டி இந்த உத்தமமான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றி உலகப் பந்துக்கு அறிவித்துவிட்டன.

மான்களும், சிறுத்தைகளும், சிங்கங்களும் இனி காடுகளை விட்டு வெளியே வந்து, நாட்டு மக்களுடன் நெருங்கிப் பழகி கைகுலுக்கிக் குசாலா செய்யப் போகின்றன. எலிகளும், பூனைகளும் இணைந்து பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கப் போகின்றன. கசாப்புக் கடைக்காரர்கள் நாளைமுதல் காய் கறி வியாபாரத்துக்கு மாறப் போகிறார்கள். அய்யர், அய்யங்கார் வீடுகளில் நமது அமாவாசைக்கும் முனியனுக்கும் தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கேள்வி!

அனந்தாச்சாரியார் வீட்டில் ரம்ஜான் கொண்டாடுவதுபற்றியும், அப்துல்காதர் வீட்டில் அமாவாசை விரதம் இருப்பதுபற்றியும் கூடிப் பேசிக்கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் கசிந்து கொண்டு இருக்கின்றன.

என்ன செய்வது! இவற்றையெல்லாம் நம்பித்தான் தொலைக்கவேண்டும்.

காந்தியாரின் உடலை இந்துத்துவா குண்டால் துளைத்துக் குருதியைக் குடித்து, அதில் ஸ்நானம் செய்த கோட்சேயின் கூட்டத்தாரால் வெட்கம் சிறிதுமின்றி இப்படியெல்லாம் எப்படித்தான் பேச முடிகிறதோ!

இவற்றையெல்லாம்விட மிக மிகப்பெரிய செய்தி  2000 முசுலிம்கள் பட்டப் பகலில் படுகொலை செய்யப்படுவதற்கு மூலப் புருஷராகயிருந் தவர், கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாகவும் போட்டுக்கொண்டு நிர்வாணக் குதியாட்டம் போட்டவர்கள் எல்லாம் அகிம்சை பேசுகிறார்கள் என்றால் சாதாரணமா?

சங்பரிவார்க் கும்பல் எவ்வளவு அறிவு நாணயம் கெட்டதுகள் என்பதற்கு  மோடியின் இந்த மலைப் பிரசங்கமே முதல் பரிசு பெறத் தகுந்ததாகும்!

3.10.2008 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...