திங்கள், 17 ஜூலை, 2017

கப்-சிப்


சிறைவாசம் அனுப வித்த நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்ய வில்லை அவரை ஆன் மிகப் பணி செய்யக் கூடாது என்று யாரும் கருத்து சொல்ல முடி யாது (தினமலர் 11.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3 பக்கம் 8) என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளவர் வேறு யாருமல்லர்  இந்து முன்னணி இராம. கோபாலன்தான் அவர். ஆசிரமத்தில் நடிகையுடன் கொக்கோக லீலைகளில் ஈடுபட்ட நித்யானந்தா சொன்ன அதே வார்த்தையை இராம கோபாலனும் கையாண்டுள்ளதை கண்டிப்பாக யாரும் கவனிக்கத் தவறக் கூடாது.

சட்டப்படி நான் எந்தத் தவறையும் செய்ய-வில்லை என்று கூறி-னார் கில்லாடி நித்யானந்தா.
இராம. கோபால அக்-கிரகாரக் குஞ்சும் அதையே தான் கூறியிருக்கிறது.

நித்யானந்தர் மீண்டும் ஆன்மிகப் பணி தொடர எந்தச் சட்டமும் தடை செய்யவில்லை என்று சொல்லுகிறார்.

ஆக இவர்களின் ஒழுக்கக் கேடுகள் எல்லாம் சட்ட ரீதியாக சாங்கோ பாங்கோமாக நடந்து வருகின்றன என்று சொல்ல வருவதைக் கவனிக்கத் தவறக் கூடாது.

ஒன்றைச் சொல்ல மறந்து விட்டார்கள்; அதையும் சேர்த்து நீங்கள் படித்துக் கொள்ளலாம்.

அவர்களின் திருப்பணிகள் ஆன்மிக ரீதி யாகவும் நடக்கின்றன; சட்ட ரீதியாகவும் நடக் கின்றன. நம் நாட்டு ஆன்மிகமும் சட்டமும் எந்தக் கெதியில் வீறுநடை போடுகின்றன என்பதை எளிதாகவே புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா!

இன்னொன்றும் முக்கியம். நித்யானந்தா மீண்டும் ஆன்மிகப் பணியைத் தொடர வேண்டுமாம்  சொல்லுகிறார் இந்து முன்னணித் தலைவர்.

இனியும் அந்தப் பணிகள் என்றால்.. ஒரு ரஞ்சிதா போனால் என்ன? எத்தனை குஞ்சிதாக்கள் கிடைப்பார்கள்? அனுபவிக்க வேண்டியதுதானேஅறுபதினாயிரம் கோபிகாக்களுடன் கிருஷ்ண பகவான் கும்மாளம் அடிக்கவில்லையா? கொஞ்சி விளையாடவில்லையா? கேட்டால் ஒரு வரியில் பதில் சொல்லி விடலாமே! எல்லாம் பகவான் கிருஷ்ணன் காட்டிய வழி என்று சொல்லி விட்டால், கேட்டவர்கள் கப்சிப் ஆக மாட்டார்களா?

11.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...