ஞாயிறு, 16 ஜூலை, 2017

பிராமணன் என்ற தகுதி


ஆச்சாரியார் அப்பட்டமான பார்ப்பன ஜாதி வெறியர் _ என்பதற்கு இன்னுமொரு ஆதாரப்பூர்வமான தகவல் உண்டு _ சுயவிமர்சனம்கூட.!
Infact, in one occasion Rajaji Proudly said that he valued his Brahmin hood more than his chief Minister ship (CARAVAN -- APRIL (1) 1978 Gandhiji’s carusade against Casteism) முதலமைச்சர் என்ற பதவியைவிட பிராமணன் என்ற தகுதியையே நான் அதிகமாக மதிக்கிறேன் என்று ராஜாஜி கூறினார். என்றால், அவர் என்ன பெரிய மனிதர் பண்பாளர் _ பொதுநலத் தலைவர்?
ராஜாஜியின் இந்த ஜாதி உணர்வை நேரிடையாக அறிந்தவர் என்ற முறையில்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை பெரியார் மீது போடப்பட்ட நீதிமன்ற அவதூறு வழக்கில், கீழ்க்கண்ட கருத்துகளையும், தகவல்களையும் தந்தை பெரியார் பதிவு செய்தார்.

பார்ப்பான் நீதிபதியாய், ஆட்சியாளராய் இருக்கும் நாடு கடும்புலி வாழும் காடேயாகும். ஆதலால், நாங்கள் புலிவேட்டை ஆடுகிறோம். புலி மேலே பாய்ந்ததில் ஒருவர் இருவர் கடிபட வேண்டியதுதான். எல்லா பார்ப்பனர்களும் அப்படித்தானா? என்று கனம் ஜட்ஜுகள் சிந்தித்து நான் சொல்லுவதைத் தவறு என்று கருதலாம். நம் நாட்டில் இன்றைய தினம் உள்ள பார்ப்பனர்களில் ஆச்சாரிய புருஷர்களாய் இருக்கிறவர்களைத் தள்ளிவிட்டு, எல்லோரையும் ஒன்றுபோல் பாவித்து பொதுஜன நன்மைக்காகப் பாடுபடுகிற பார்ப்பனர்கள் என்று எண்ணியிருக்கின்ற தன்மையில், உயர்ந்த சீர்திருத்தக்காரர் _ நாட்டின் விடுதலைக்காக பெரிய தியாகங்களைச் செய்தவர்கள் என்ற தன்மையில், இதுவரையில் எந்த இந்தியனும் வகித்திராத உயர்ந்த பதவி வகித்தவர்கள் என்கிற தன்மையில், முதல் வரிசையில் முதல்வராக இருக்கும் மாஜி கவர்னர் ஜெனரல் உயர்திரு. சி. ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் சொல்லுகிறார்கள்: நான் வேத, சாஸ்திர, புராண, இதிகாச, உபநிஷத் தர்மங்களில் முழு நம்பிக்கை உடையவன்; ஜாதிப்பிரிவில் அதாவது, வர்ணாஸ்சிரம தர்மத்தில் மிக்க நம்பிக்கையும் கவலையும் உடையவன்; அவைகளைப் பரப்பவும். நிலை நிறுத்தவுமே நான் பாடுபடுகிறேன்; இனியும் அதற்காகவே பாடுபடுவேன் என்று சொல்லுகிறார்: எழுதுகிறார்: அதற்கு வேண்டி காரியங்களையும் செய்கிறார் என்றால், இனி யாரை மனதில் வைத்துக்கொண்டு எல்லா பார்ப்பனர்களும் இப்படித்தான் இருப்பார்களா? என்று நினைப்பது? வாயில் _ நாக்கில் _ குற்றம் இருந்தாலொழிய வேம்பு இனிக்காது; தேன் கசக்காது. பிறவியில் மாறுதல் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது; ஆடு மனிதனைத் தின்னாது. அதுபோல வாக்கும் நம் பார்ப்பனர்கள் தன்மை  என்று உயர்நீதிமன்ற வரலாற்றில் இதற்கு முன் யாரும் பதிவு செய்திராத அரிய கருத்துரையை வரலாற்றுச் செப்பு சாசனமாக ஆதாரப் பூர்வமாகப் பதிவு செய்துவிட்டாரே தந்தை பெரியார்.

(நூல்: நீதி கெட்டது யாரால்?)

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...