ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

திராவிடன்! ஆந்திரன்!


 திராவிடன் என்கிற பெயரைப் போலவே ஆந்திரன் என்ற பெயரும் மனு தர்மத்தில் காணப்படுகிறது.  அதாவது காட்டிற்குச் சென்று மிருகங்களைக் கொன்று நாட்டில் கொண்டு வந்து விற்பவன் ஆந்திரன் என்று கூறப்பட்டிருக்கிறது.

(அத்தியாயம் 10 - ஸ்லோகம் 48)

சூத்திரர் கழகம்


 பார்ப்பனர்கள் "பிராமண சமாஜம்' "பிராமண மகாசபை' என்றெல்லாம் வைத்து வெளிப்படையாக நாம் பெற்ற எல்லா உரிமைகளையும் எதிர்த்துப் பலவற்றை ஒழித்துக் கட்டிவிட்டார்கள்.  பார்ப்பனன் தன்னை மேல்ஜாதி என்றும், தன்னை பிராமணன் என்றும் அழைத்துக் கொள்ளுவதிலும்;  நாமும்
அவனைப் பிராமணன் என்று சொல்லுவதிலும் அவனுக்குப் பெருமையுண்டு.  ஆனால், நம்மை அவன் சூத்திரன் என்றழைப்பதிலும், சாஸ்திரமும் சட்டமும் நம்மைச் சூத்திரர் என்றே குறித்து வைத்துள்ளதிலும் நமக்கு எவ்வளவு இழிவும், வாழ்வுக்கேடும், முன்னேற்றத் தடையுமிருக்கின்றன.  நாம் திராவிடன் அல்லது தமிழன் என்ற பெயரை வைத்துக் கொள்ளாமல் வேறு பெயரை வைத்துக்கொள்ள வேண்டுமென்றால் Š "சூத்திரர் கழகம்' என்று தானே வைத்துக் கொள்ள வேண்டும்?

- விடுதலை, சொற்பொழிவு, 08.01.1959

ஜாதி தர்மத்தை அனுசரிக்காதவர்களுக்குப் பிறந்தவர்கள் திராவிடர்கள் என்ற பெயர்!

  (மனுதர்ம சாஸ்திரத்தில் 10Šவது அத்தியாயத்தில் சங்கர ஜாதி என்ற தலைப்பில்)

மனித சமுதாயம் ஒன்றாக

“மனித சமுதாயம் ஒன்றாக வேண்டுமானால்
மதம் ஒழிய வேண்டும்.
பொருளாதாரம் ஒன்றாக வேண்டுமானால்
கடவுள் ஒழிய வேண்டும்.”

- தந்தை பெரியார்
விடுதலை, 10-03-1945


மனிதன் வயிறு வளர்க்க


 மக்களின் சுயமரியாதைக்காகத்தான் மக்கள் மானத்தோடு வாழ்வதற்காகத்தான் அரசாங்கமும் தேசியமும் வேண்டுமே ஒழிய மற்றபடி கேவலம் இவை மனிதன் வயிறு வளர்க்க மாத்திரம் வேண்டியது என்றால், அதற்காக எந்த அரசாங்கமும், அரசியலும், தேசியமும் கண்டிப்பாய் வேண்டியதில்லை என்றே சொல்லுவோம்.”

-தந்தை பெரியார்
விடுதலை, 17Š02Š1929

தீண்டாமை


“தீண்டாமை என்பது ஏணி மரப்படிபோல்.  இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும்
 பிடித்திருக்கின்றது.  தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்று பேசும் இந்திய தலைவர்கள் வருணாசிரமத்தருமத்தை ஒழிக்க ஒருப்படுவதில்லை.”

- குடிஅரசு, தலையங்கம், 12.04.1931

எனது ஆசை


“மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்.  மற்ற உயிர்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெற வேண்டும். மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம்
ஏற்படுவதற்கு இடமில்லாத சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இதுதான் எனது ஆசை.”

தந்தை பெரியார்
விடுதலை, 7Š8Š1938

இன்னும் எத்தனைக் காலத்துக்கு!


 “இன்னும் எத்தனைக் காலத்துக்கு நாம் இந்த உலகத்தில் சூத்திரர்களாக இருப்பது?  நம் பின்சந்ததிகளையும் சூத்திரர்களாக இருக்க விடுவது?  இந்தத் தலைமுறையிலாவது, இந்த விஞ்ஞான சுதந்திர
காலத்திலாவது நமது இழிவு நீங்கி, நாம் மனிதத் தன்மை பெற ஏதாவது செய்ய வேண்டாமா?  இதைவிட மேலான காரியம் நமக்கு இருக்க முடியுமா? அதனால்தான் எனது வாழ்நாள் முழுவதையும் இதற்கென்றே நான் அர்ப்பணித்து வருகிறேனே ஒழிய முட்டாள்தனமல்ல.  துவேசமுமல்ல.”

- தந்தை பெரியார் - விடுதலை, 17Š11Š1957

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...