இதுவரை இவ்விழிவு பற்றி யாராவது கவலை எடுத்துக் கொண்டதுண்டா? எத்தனையோ ரி´கள், எத்தனையோ நாயன்மார்கள், எத்தனையோ குருமூர்த்திகள், எத்தனையோ ஆச்சாரியர்கள் தோன்றிய நாடுதானே இது. இவர்களுள் எத்தனை பேர் இவ்விழிவு நீங்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்? தெய்வீகப் பக்தியுள்ள சிலர் ஜாதிப் பிரிவினையை எதிர்த்தனர் என்றாலும் ஆரியம் அதற்கு அடிபணியவில்லையே? மூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்களை நாஸ்தீகர் என்று கூறி, மக்கள் அவர்களைப் பின்பற்றாமற்படி செய்து விட்டதே? ஜீவஹிம்சை கூடாது என்று கூறிய பெளத்தர்களையும், சமணர்களையும் கழுவிலேற்றி விட்டதே? வர்ணாஸ்ரமத்தைப் பாதுகாக்கத் தானே இவ்வளவும் செய்யப்பட்டது.
அதுவும் அந்த வர்ணாஸ்ரமதர்மத்தில் ஆரியத்தின் பிழைப்புச் சிக்கிக் கொண்டதால் தானே அவ்வளவும் செய்யப்பட்டது.
- குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக