வியாழன், 3 ஆகஸ்ட், 2017

கார்ட்டூன்



இனமலர் ஏடான தினமலர் இன்று ஒரு கார்ட்டூனை வெளியிட்டுள்ளது. கருத்துப்படம் என்று தமிழில் சொல்லி அதன் யோக்கியதையை உயர்த்த விரும்பவில்லை.

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி; இந்தியா முழுவதும் ஒரு ரூபாய்க்கு போன் பேசும் வசதி போல, ஒரு மணி நேரம் மின் வெட்டு நம் சாதனை லிஸ்ட் இடம் பெறுமா தலைவரே...? என்று திராவிடர் கழகத் தலைவர், முதல் அமைச்சர் கலைஞர் அவர்களிடம் கேட்பது போல - ஒரு கார்ட்டூன்.

என்னதான் ஆரியக் குரங்கு சேட்டை செய்தாலும், ஓர் உண்மையைத் தன்னை அறியாமலேயே ஒப்புக் கொண்டு விட்டது தி(இ)னமலர்.

இந்தியாவிலேயே ரூபாய் ஒன்றுக்கு ஒரு கிலோ அரிசியைக் கொடுப்பது மானமிகு கலைஞர் அவர்களின் தலைமையிலான தி.மு.க. அரசு மட்டுமே; அதுபோலவே இந்தியா முழுவதும் ஒரு ரூபாயில் போன் பேசலாம் என்ற மலிவுப் பதிப்பைச் சாதித்துக் காட்டியவர் ஆ.இராசா என்பதையும் தினமலர் ஒப்புக் கொண்டதை இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டும்.

என்னதான் தி.மு.க. மீது காழ்ப்பு நெருப்பைப் பார்ப்பனர்கள் அள்ளிக் கொட்டினாலும் தி.மு.க. ஆட்சியின் சாதனை - அந்தப் பார்ப்பன வட்டாரத்தாலேயே ஒதுக்கித் தள்ளப்பட முடியாது எனும் ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டதே!

அடுத்து அவாளுக்கே உரித்தான சில்லுண்டித்தனம் - ஒரு மணி நேர மின்வெட்டும் தி.மு.க. ஆட்சியின் சாதனைதான் எனும் சேட்டை.

தமிழ் நாட்டிலே மட்டுமல்ல; இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த நிலைதான். பக்கத்து மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் பெற முடியாத நிலை - காரணம், அங்கும் மின்வெட்டே! மத்தியத் தொகுப்பிலிருந்து பெறுவதற்கோ தேர்தல் ஆணையத் தடை!

இந்த உண்மையெல்லாம் தினமலர் வகையறாக்களுக்குத் தெரியாதா? தெரியும் . . . ஆனாலும் சூத்திர அரசை நடத்திக் கொண்டிருக்கும் கலைஞரின் விலாவில் குத்த வேண்டுமே - அந்த அரிப்பு இருக்கும் வரை ரத்தம் கொட்டினாலும் பரவாயில்லை; சொரிந்து தானே தீரவேண்டும்!

5 ஆண்டுகளுக்கு முன் அவாள் ஆத்து அம்மையார் ஆட்சியில் இருந்தபோது மின் உற்பத்திக்குச் செய்த ஏற்பாடு என்ன? சுழி தானே! அந்த முற்பகல் விளைவைத்தானே இந்தப் பிற்பகலில் அனுபவித்துக் கொண்டிருக்கிறது நாடு. அதே நேரத்தில் தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தித் திட்டங்கள் பற்றி எழுத, தினமலர் பேனா ஸ்டிரைக் செய்வது ஏன்? எல்லாம் பூணூல் பாசம்தான்!

தினமலர் கார்ட்டூனில் மானமிகு வீரமணி ஏன் இணைக்கப்பட்டுள்ளார் தெரியுமா? தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் இந்த உண்மைகளை வெளிப்படுத்தியவர் அவர்தானே. அந்த ஆத்திரம்தான்....



25.4.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...