வியாழன், 17 ஆகஸ்ட், 2017

நாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை



""வகுப்புவாதம், மதவாதம், ஜாதிவாதம் பேசி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கேட்பவர்களால் தேசத்தின் விடுதலை கெட்டுப் போகின்றது'' என்று திப்பிலி, தேசாவரம், சதகுப்பைகளெல்லாம் பேசவும், எழுதவும் தொடங்கிவிட்டதைக் கண்டு நாம் சிறிதும் லட்சியம் செய்யவில்லை.

அந்தப்படி எழுதும் பேசும் யோக்கியர்களில் 100Šக்கு அரைப்பேராவது தங்கள் மதத்தையும் உள்மதத்தையும் ஜாதியையும் உள் ஜாதியையும் வகுப்பையும் உள் வகுப்பையும் விட்டு விட்டவர்கள் உண்டா என்று பந்தயம் கட்டி கேட்கின்றோம்.



-  குடிஅரசு, தலையங்கம், 08.11.1931

புதன், 16 ஆகஸ்ட், 2017

ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தி!


 என்னை வகுப்புத்துவேசி´ என்கிறாயே பூசணிக்காய் அளவு எழுத்தில் ""பிராமணன் ஹோட்டல்'' என்று போர்டு போட்டுக் கொள்கிறானே அதை ஏன் அனுமதிக்கிறாய்?  ஜாதி பேதம் பாராட்டுவதில்லை என்று பெருமையடித்துக் கொள்ளும் தேசியத் தோழனே!  உன் சுதந்திர ராஜ்ஜியத்தில், நடைமுறையில் இருந்துவரும் ஹிந்துலாவில் ஜாதிக்கோர் நீதி ஏன் கூறப்பட்டிருக்கிறது?  

ஹிந்துலா சட்டப் புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே போடப்பட்டிருக்கிறது.  இச்சட்டம் மனுதர்ம சாஸ்திரம் மற்றுமுள்ள ஹிந்துமத சாஸ்திரங்கள் இவற்றை அடிப்படை ஆதாரமாகக் கொண்டு செய்யப்பட்டிருக்கிறது.  இச்சட்டத்தில் ஏதாவது சந்தேகம் வருமானால் நீதிபதிதானாக முடிவுகட்டக் கூடாது.  இச்சாஸ்திரங்களில் வல்லவர்களான சாஸ்திரிகளைக் கொண்டுதான் முடிவு கட்ட வேண்டும் என்று எழுதியிருக்கிறதே.'' ஜாதிபேதம் பாராட்டாத சாஸ்திரிகளை எங்காவது நீங்கள் பார்த்ததுண்டா?  அந்தச் சட்டத்தை இன்னும் புரட்டிப் பார்த்தல் ஒரு சூத்திரனுக்கு ஒரு பார்ப்பனத்தியிடம் பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்குச் சூத்திரனுடைய சொத்தில் பங்குரிமை இருக்குமென்றும், அதேபோல் ஒரு பார்ப்பனுக்கு ஒரு சூத்திரச்சியினிடம் ஒரு பிள்ளை பிறக்குமானால், அப்பிள்ளைக்கு பார்ப்பனன் சொத்தில் பங்குரிமை இருக்காதென்றும் கூறப்பட்டிருக்கிறதே.  இது உன் கண்களுக்கு ஏன் படாமற் போகிறது?  இந்த ஒரு குலத்துக்கொரு நீதியை அனுமதிக்கும் சட்டத்தை மாற்ற உனக்கு ஏன் கவலையில்லை?


-  குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

இது நியாயமா?



பாடுபடும் எங்களுக்கெல்லாம் இழிவான வேலைகள்.  நாங்கள் எவ்வளவுதான் பாடுபட்டாலும் எவ்வளவுதான் உங்களுக்கு வாரிக் கொடுத்தாலும், எவ்வளவுதான் சுத்தமாய் இருந்தாலும், எவ்வளவுதான் ஒழுக்கமாய் நடந்து கொண்டாலும் நாங்கள் சூத்திரர்கள், பஞ்சமர்களா?  நீங்கள் எவ்வளவுதான் பாடுபடாத சோம்பேறி வாழ்வு நடத்தினாலும், எவ்வளவோ எங்களை மோசம் செய்து எங்களிடம் பிச்சை எடுத்துப் பிழைத்தாலும், நீங்கள் எவ்வளவுதான் அழுக்குப் பிடித்து, சொறி பிடித்துக் குஷ்டரோகியாகக் கிடந்தாலும், எவ்வளவு ஒழுக்க ஈனர்களாகத், திருடர்களாக, கொலைக்காரர்களாக, கொள்ளைக் காரர்களாக, தூது செல்பவர்களாக இருந்தாலும் நீங்கள் உயர்  ஜாதிப் பார்ப்பனர்களா?  இது நியாயமா?  


- குடிஅரசு, சொற்பொழிவு, 05.06.1948

மனித தர்மமாகுமா?



மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் சம சுதந்திரம் அடைவதோடல்லாமல் உயர்ந்த நிலைமையையும் அடைய ஆசைப்படுவது ஒவ்வொரு ஜீவனின் சுபாவமாகும்.  அப்படியிருக்க, உன்னுடைய சமத்துவத்திற்கு நானும் பிரயத்தனப்படமாட்டேன்.  நீ பிரயத்தனப்பட்டால் அதையும் ஒழிப்பதற்கு நான் பிரயத்தனப்படுவேன் என்று சொல்வது சமத்துவ மனித தர்மமாகுமா?

-  குடிஅரசு, தலையங்கம், 13.12.1925

எந்தக் காரியம் கெட்டுப் போகும்?



பிராமண துவே­த்தால் பிராமண தத்துவத்திற்கு கெடுதி வரும் போலிருக்கின்றது என்று மிக்க துக்கப்படுகிறார்.
பிராமணத்துவம் என்றால் என்ன?  ஊரை ஏமாற்றுவதா?  உத்தியோகங்களெல்லாம் எந்த வேலை செய்தாவது தாங்களே பார்க்க வேண்டுமென்பதா?  தங்கள் சுயநலத்துக்காக நாட்டைக் காட்டிக் கொடுப்பதா?  அரசாங்கத்துக்கு உளவாய் வேலை செய்வதா?  போலீசு வேலை பார்ப்பதா?
லஞ்சம் வாங்குவதா?  அதிகாரிகளின் தயவுக்காக இழிதொழிலில் இறங்குவதா?  எல்லாவித அயோக்கியத்தனங்களையும் இழி தொழிலையும் செய்து கொண்டும் உடம்பினால் ஒரு தொழிலும் செய்யாமல் பிச்சையயடுத்து வயிறு வளர்த்துக் கொண்டும் சோம்பேறி வர்க்கமாய்த் திரிந்து கொண்டும் பிராமணன் உயர்ந்தவன் என்று சொல்லுவதா?  பார்ப்பனரல்லாதாரைத் தலையயடுக்கவொட்டாமல் மதத்தின் பேராலும் சாமி பேராலும் அரசியலின் பேராலும் அழுத்தி வைத்திருப்பதா? இவற்றில் எந்தக் காரியம் கெட்டுப் போகும் என்று திரு. அய்யங்கார் வருத்தப்படுகிறார் என்பது நமக்கு விளங்கவில்லை.
  
-  குடிஅரசு, தலையங்கம், 05.08.1928


ஏமாறுகிறவன், ஏமாற்றுபவன்


தொழிலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்?  முதலாளி என்று ஒரு கூட்டம் ஏன் இருக்க வேண்டும்?  இது யாருடையக் கட்டளை?  என்ன அவசியத்தைப் பொறுத்தது?  என்று அவர்களை நாம் முதலில் கேட்கிறோம்.

பிறகு பாடுபடுபவன், சோம்பேறி, கஷ்டப்படுபவன், சுகப்படுபவன், வேலை செய்பவன், வேலையின் பயனை அனுபவிப்பவன், ஏமாறுகிறவன்,  ஏமாற்றுபவன் என்பன போன்ற பிரிவுகள் மனித வாழ்க்கையில் இருக்கும் படியாகவே வாழ்க்கைத் திட்டத்தை வகுக்க வேண்டும் என்பதற்கு ஏதாவது அவசியமும் ஆதாரமுமுண்டா?  என்பது நமது  கேள்வியாகும்.

-  குடிஅரசு, தலையங்கம், 14.12.1930

அடித்து அனுபவித்த அந்த மணியை...



பர்ப்பானெல்லாம் இப்போது சம்பந்தி போஜனம் கூட செய்கிறார்களாம்,  ஜாதி பாராட்டாமல்.  எங்கள் வீட்டுச் சோறு ருசியாயிருந்தால் எந்தப் பார்ப்பானும்தான் சாப்பிடுவான்.  உண்மையில் எத்தனை பிராமணர்கள் தங்கள் வீட்டில் ஒரு பறையனையோ சக்கிலியையோ தம்முடனிருந்து சாப்பிட அனுமதிப்பார்கள்?  நீ சாப்பிடுவதைக் கூட நாங்கள், பார்க்கக் கூடாது என்கிறாயே.  அதுதான் போகட்டும் என்றாலும், நான் வெட்டிய குளத்துத் தண்ணீரானாலும், அதையும் திரைபோட்டு மறைத்துக் கொண்டுதானே குடிக்கிறாய்.

ஆலயப் பிரவேசம் உண்மையென்றால் அவனும் மணியை அடிக்கச் செய்!
பஞ்சமனைக் கோயிலில் கூட அனுமதித்து விட்டார்களாம்.  அவனும் முடிச்சவிழ்க்க வேண்டுமென்று விட்டாயா?  அல்லது மோட்சத்திற்குப் போகட்டுமென்று விட்டாயா?  மோட்சத்திற்குப் போவதற்காகவே விட்டிருந்தால், இத்தனை நாள் அடித்து அனுபவித்த அந்த மணியைக் கொஞ்சம் அவனிடம் கொடேன்?  அவனும் ஆசைதீர அடிக்கட்டுமே!  செய்வையா!  செய்தால் சாமி ஓடிப் போகுமே!  அல்லது செத்துப் போகுமே?  அப்புறம் உன்னை யார் காப்பாற்றுவார்கள்?

இந்த அக்கிரமமல்லாம் செய்ய உனக்கு உரிமையுண்டு.  நான் ஏன் சூத்திரன் என்று கேட்பதற்குக் கூட எனக்கு உரிமை இல்லையா?  கேட்டால் கலகம் செய்கிறேன் என்பதா?  உனக்குப் பழக்கமாகி விட்டது.  உன் புத்தி அடிமைத்தனத்தால் சின்னப் புத்தியாகி விட்டது.  ஆகவே பொறுத்துக் கொண்டிருக்கிறோம்.  மானமுள்ள, அறிவுள்ள, வேறு எவன் இவ்விழிவைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும்?  வேறு எந்த நாட்டிலாவது சூத்திரனும் பஞ்சமனும் உண்டா?  இந்த உயர்வு தாழ்வு இருக்கும் வரைக்கும் இது ஒரு ஞானபூமியாகவும் ஆக முடியுமா?

- குடிஅரசு, சொற்பொழிவு 08.05.1948

என்ன சமத்துவம்?


சுதந்திரத்தின் பயனாய் இனிமேல் நமது நாட்டில் பார்ப்பனனும் பறையனும் இருக்க மாட்டானா?  என்று கேட்கின்றேன்.  பறையன் உள்ளே விடப்படாத கோவில்கள் இடிபடுமா?  என்று கேட்கின்றேன்.  சாமிகளின் பேரால் நடைபெறும் வீண் செலவுகள் ஒழிக்கப்படுமா?  என்று கேட்கிறேன்.  இன்றைய தினம் ஜாதிகளின் பேரால் இருந்து வரும் கொடுமையும் இழிவும் கொள்ளையும் ஒழிக்கப்படுமா?  என்று கேட்கின்றேன்.  குடும்பத்துடன் பாடுபட்டும் பட்டினி கிடப்பவனும், பாடுபடாமல் இருந்து கொண்டு குடும்பத்தோடு மேன்மையாய் வாழுபவனும் இருக்க மாட்டானா?  என்றும் கேட்கின்றேன்.  ஜமீன்தாரன் என்பவனும் குடியானவன் என்பவனும் இல்லாமல் போய்விடுவார்களா?  என்றும் கேட்கின்றேன்.  இவைகளை ஒழிக்காத சமத்துவம் என்ன சமத்துவமாகும்?

-  குடிஅரசு, சொற்பொழிவு, 06.09.1937

பிராமணன் புத்திசாலி; மற்றவன் மடையன்!



திவான்பகதூர் ஆர்.வி. கிருஷ்ணய்யர் போன்றவர்களே ""பிராமண புத்திசாலி. மற்றவன்  மடையன்'' என்பது ஆக பேசத் துணிந்த பிறகு,  இனி மற்ற பார்ப்பனனிடம் யோக்கியமான எண்ணத்தையோ, நடத்தையையோ காண முடியுமா?  என்று கேட்கின்றோம்.  உலகத்தில் பார்ப்பனர்கள் இல்லாத நாடெல்லாம் பாழடைந்துவிட்டதாக இவருடைய எண்ணமா?


-  குடிஅரசு, தலையங்கம், 27.01.1945

உத்தியோகங்களில் பங்குதா!


நாம் நம் வரும்படியை செலவு செய்து நமது வீட்டை விற்று, நம் சொத்தை விற்று நம் மக்களைப் படிக்க வைக்கிறோம்.  ஆகையால், சர்க்கார் உத்தியோகங்களில் எங்களுக்கும் பங்குதா என்றால், அது தேசத் துரோகமா?  மாடு மேய்க்கிறவனுக்கும் பஞ்சாங்கம் பார்க்கிறவனுக்கும் நாம் உத்தியோகம் கொடு என்று கேட்கிறோமா?

-  குடிஅரசு, சொற்பொழிவு, 18.18.1936

விரல் உரல் ஆனால் உரல் என்னவாகும்?


இவ்வளவு அக்கிரமம் நீங்கள் செய்து கொண்டு, ""புல்லேந்தும் கை வாளேந்தும்'' என்று கூறுகிறீர்களே, அடுக்குமா, இந்த ஆணவம் உங்களுக்கு?

வாங்கோ!  தம்பிகளே வெளியில் இப்படி நீங்கள் நேரில் வெளிவர வேண்டும் என்றுதானே இவ்வளவு காலம் பொறுத்திருந்தோம்.  எவ்வளவு சீக்கிரம் வெளி வருகிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு நலமாயிற்றே!  அவ்வளவு சீக்கிரத்தில் எங்கள் இழிவும் ஒழிந்து போகுமே.  நீங்கள் இருப்பது 100க்கு 3 பேர்.  நாங்கள் இருப்பது 100க்கு 97 பேர் எங்களில் ஒரு ஆள் உங்களில் ஒரு ஆளைக்கூடவா வெற்றிக் கொள்ள மாட்டான்?  நாங்கள் 97க்கு 3 பேர் அழிந்தால் பரவாயில்லை.  மிச்சம் இருக்கும் 94 பேராவது இழிவு நீங்கி மனிதர்களாய் வாழ்வார்கள்.  உங்களில் 3க்கு 3பேர் மாண்டால் அப்புறம் சைபர்தான் இருக்கும்.  புல்லேந்தியவர் வாளேந்தினால் வாளேந்தியவர் என்ன ஏந்துவார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.  விரல் உரல் ஆனால் உரல் என்னவாகும் அப்புறம் உங்கள் கதி என்ன ஆகும்?

-  குடிஅரசு, 29.05.1948

இராமலிங்க அடிகளார் எந்த விதத்தில் தாழ்ந்தவர்?..............

பல்லாயிரக்கணக்கான பெண்களைக் கெடுத்த காமாந்தகாரனான கிருஷ்ணன் ஏன் கடவுளாக்கப்பட்டான்? அவனது உளறல் மொழிகள் அடங்கிய கீதை ஏன் நித்திய பாராயணமாக்கப்பட்டு விட்டது? மகா ஒழுக்க சீலரான திருவள்ளுவர் ஏன் கடவுளாக்கப்படவில்லை? அவரது பொய்யா மொழிகள் அடங்கிய குறள்ஏன் பாராயணமாக்கப்படவில்லை? இவற்றை நீ சிந்தித்துப் பார்த்ததுண்டா?
கிருஷ்ணனும் கீதையும் வர்ணாஸ்ரம தர்மத்தை (ஜாதிப்பிரிவினையை) ஆதரிப்பதுதான். ஆரியத்தின் போற்றுதலுக்குக் காரணம் என்பதை நீ இன்றாயினும் உணருவாயா?
உன் திருவள்ளுவரும் திருக்குறளும் ஆரியத்தால் போற்றப்படாமைக்குக் காரணம் ""பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய் தொழில் வேற்றுமையான்'' என்ற கூற்றுத்தான் என்பதை உணர்வாயா? இன்றாயினும் உணர்வு பெற்று கிருஷ்ணனையும் கீதையையும் தூக்கியயறிந்து விட்டு உண்மைத் திராவிடனான வள்ளுவனையும், அவன் குறளையும் அத்திட்டத்தில் வைப்பாயா?
ராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப் பார். உன் இராமலிங்கம் எந்த விதத்தில் அவரை விடத் தாழ்ந்தவர். அவரை எந்த வடநாட்டானாவது போற்றக் கண்டுள்ளாயா? உன்னுடைய ஒரு நாயன்மாரையாவது வடநாட்டானுக்குத் தெரியுமா?
கபிலன் கூறியதென்னவென்று நீ அறிவாயா? ஏன் தம்பி உனக்கு இவ்வளவு வடநாட்டு ஆரியப்பற்று?
இனியேனும் இன உணர்வு கொண்டெழு தம்பி! உன் இனத்தான் எந்த விதத்திலும் அறிவிலோ, ஆற்றலிலோ தாழ்ந்தவன் அல்ல என்பதை இன்றே உணர்வாய்!
- பெரியார்
- குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

மூலஸ்தானத்திற்குள் போய் விடு!


ஆரியன் எது?  சூத்திரன் ஏது?  என்று நம்மைக் கேட்கிறார்கள் சில அப்பாவி மக்கள்.  சூத்திரன், பிராமணன் இல்லையயன்றால், கோயிலில் மணியடிக்கும் தொழில் ஒரே ஜாதிக்காரன் வசமே இருக்கக் காரணமென்ன?  கோயில் அர்ச்சகர்கள் யார்?  அவர்கள் ஏன் சமஸ்கிருதம் ஓதுகிறார்கள்?  

சமஸ்கிருதம்தான் தேவபாஷை, மற்றவை மிலேச்ச பாஷை, நீச்ச பாஷை என்று ஆரிய சாஸ்திரம் கூறியிருப்பதை நீ அறிவாயா?  திடுதிடுவென்று நாலு ஜாதியாரும் கோயிலுக்குள் போவோம்.  சற்றிருங்கள் என்று கூறி பிராமணத் தோழன் உங்களைத் தாண்டிக் கொண்டு மூலஸ்தானத்திற்குள் போய் விடுகிறானா இல்லையா பாருங்களேன்?  இதைப் பார்த்த பிறகும் எந்தத் தோழனாவது பிராமணன் சூத்திரன் இல்லை என்று கூறுவானாயின் அவன் அறிவு மலையேறி விட்டது என்றுதானே கூற வேண்டும்.  ஏன் இந்த உயர்வு தாழ்வுக் கொடுமையை இன்னும் மூடி வைக்கப் பார்க்கிறீர்கள்?  உள்ளதை மூடிவைத்தால் அதுபுரை ஓட ஆரம்பித்துவிடும் என்பதை நீங்கள் அறியீரோ!

-  குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

அது எப்படி திட்டுவதாகும்?



100க்கு 3 பேராயிருக்கும் பார்ப்பனர்களில் 100க்கு 50 பேர் மோசடி செய்திருக்கிறார்கள்.  திருடியிருக்கிறார்கள்.  அயோக்கியத்தனம் செய்திருக்கிறார்கள் .இப்படியயல்லாம் நடந்திருக்கிறார்கள்.  அப்படியிருந்தும், 100க்கு 10, 20 பேர் குற்றம் செய்தார்கள் என்பதற்காக ஒரு ஜாதியையே குற்ற பரம்பரையினர் என்று சொல்லுவது சரியா?  நீதியா?  என்பது போலத்தானே பார்ப்பனர்களின் யோக்கியதையை வெளிப்படுத்தியிருக்கிறோம்.

 அது எப்படிப் பார்ப்பனரைத் திட்டுவதாகும்?  மறுக்க முடியாத வகையில் அயோக்கியன் என்று முடிவு கட்டப்பட்ட ஒருவனை, அவனைத் தெரிந்து கொள்ளாத மற்றவர்களிடம், இவன் இப்படி யயல்லாம் அயோக்கியன் என்று முடிவு செய்யப்பட்டவன்.  முடியுமானால் பழகாதீர்கள்.  இல்லாவிட்டால் ஜாக்கிரதையாய்ப் பழகுங்கள்' என்று கூறுவதா அயோக்கியனைத் திட்டுவதாகும்?

-  குடிஅரசு, தலையங்கம், 14.05.1949

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

முதலில் இவைகளைச் செய்!


பாடுபடும் நான் ஏன் சூத்திரன்?  பாடுபடாத சோம்பேறிப் பார்ப்பான் ஏன் பிராமணன் என்றால் மட்டும் உனக்குப் பொத்துக் கொண்டு வர வேண்டுமோ கோபம்?  சிந்திக்கும் அறிவு உனக்குச் சற்றேனும் இருக்குமானால், என்னை வகுப்புத் துவேஷி´ என்று கூற உனக்கு நாக்கு நீளுமா?  ஏன் இந்தப் பித்தலாட்டம்?  நாலு ஜாதியென்று பிரித்துக் கூறும் சாஸ்திரங்களை ஏன் அனுமதிக்கிறாய்?  ஜாதி பிரிவினை பற்றிக் கூறும் பகுதிகளைச் சாஸ்திரங்களிலிருந்து எடுத்து விட்டாயா?  சாஸ்திரங்களை யெல்லாம் கொளுத்திவிடு!  ஜாதிப்பிரிவினை பற்றிக் கூறும் சகலத்தையும் அழி!  கோயிலில் மணியடிக்கச் சகல ஜாதிக்கும் உரிமையு ண்டு என்று சட்டம் செய்!  பிறகு நான் வகுப்புப் பற்றிப் பேசினால் வாயேன் சண்டைக்கு?  அதுவரை பொறுத்துக் கொண்டிரு தம்பி!  இன்றேல் உன் வண்டவாளமெல்லாம் அம்பலமாகிவிடப் போகிறது.

- குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

ஈன ஜாதி


நவீன நந்தனாரில் பிராமணர்களைத் தாக்கிப் பேசப்படுவது உண்மையயன்றே வைத்துக் கொள்ளலாம்.  ஆனால், புராதன நந்தனாரில் (பக்த நந்தனாரில்) பிராமணரல்லாதாரைத் தாக்கிப் பேசப்படுவதும், இழித்து, பழித்து, பறையா?  மாடு தின்னும் புலையா?  தீண்டப்படாத சண்டாளா.  ஈன ஜாதியனே என்றெல்லாம் பேசப்படுவதும், இன்னும் அவன் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாதவன் என்று சொல்லப்படுவதும் ஆன பேச்சுக்கள் பறையனுக்கு திவான்பகதூர் பட்டம் கிடைத்தது போன்ற மகிழ்ச்சியாய் இருக்கும் என்று கிருஷ்ணய்யர் அவர்கள் கருதுகிறாரா?  என்று கேட்கிறோம்.

-  குடிஅரசு, தலையங்கம், 27.01.1945  

எப்படி உயர்ந்த பிறவி?


இந்த நாடு யாருடையது?  இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் யார்?  திவான் பகதூர் கிருஷ்ணய்யருக்கோ அவருடைய இனத்தாருக்கோ இந்த நாட்டில் சொந்தமென்ன?  அவருக்கு இந்த நாட்டில் அந்தஸ்து என்ன?  அவர் இந்த நாட்டாரானால் அவர் எப்படி பிராமணராவார்?  பறையனை விட "சூத்திரனை' விட இவர் எப்படி உயர்ந்த பிறவி ஆவார்?  இவர் தன்னை உயர்ந்த ஜாதி என்றும், புத்திசாலி ஜாதி என்றும் சொல்லிக் கொள்ள அவருக்கு உரிமை எப்படி வந்தது?

- குடிஅரசு, தலையங்கம், 27.01.1945

எது அயோக்கியத்தனம்?


எப்பொழுது ஒருவனுக்கு அவனுக்கு என்று தனி மதம், தனி ஜாதி, தனி வகுப்பு என்பதாக பிரிக்கப்பட்ட பின்பு அவன் தனது மதம், தனது ஜாதி, தனது வகுப்புக்கு என்ற ஒரு உரிமை கேட்பதில் என்ன தப்பிதமோ, அயோக்கியத்தனமோ இருக்க முடியும்?

-  குடிஅரசு, தலையங்கம், 08.11.1931

பணக்காரத் தன்மை


ஏழைத் தன்மை, பணக்காரத் தன்மை என்கின்ற இரண்டு தன்மையும் உலகில் இருக்கக் கூடாது என்று அவைகளை அடியோடு அழீப்பது நல்ல வேலையா?  அல்லது அத்தன்மைகள் எந்த ரூபத்திலாவது என்றும் இருக்கும்படி சீர்திருத்தம் செய்வது நல்ல வேலையா?

- குடிஅரசு, சொற்பொழிவு, 05.02.1933

வியாதியைப் போக்க!



திரு. விஜயராகவாச்சாரியார் அவர்கள் ""தீண்டாமை எப்படி வந்தது என்பதைப் பற்றி யோசிப்பதோ, அல்லது இந்து மதத்தின் பேரில் குறைகூறிக் கொண்டிருப்பதோ தீண்டாமையை விலக்குவதற்குரிய வழியாகாது'' என்று கூறியிருப்பது எவ்வளவு மோசமான அபிப்பிராயம் என்று யோசித்துப் பாருங்கள்.  ஒரு வியாதியைப் போக்க வேண்டுமானால் அது எவ்வாறு உண்டாயிற்று என்பதை முதலில் தெரிந்து கொண்டு அது தோன்றுவதற்குக் காரணமாயிருந்த தீமையை ஒழிப்பதன் மூலமாக அன்றோ எப்பொழுதும் அந்த வியாதியை வரவொட்டாமல் தடுக்க முடியும்?  இதை விட்டுவிட்டுத் தற்கால சாந்தியாகச் சில மருந்துகளைக் கொடுத்து அதன் தொந்தரவைத் தணித்துவிட்டால் போதுமா?  மறுபடியும் அடிக்கடி அவ்வியாதி உண்டாகித் துன்பப்படுத்தாதா?

- குடிஅரசு, தலையங்கம், 27.03.1932

சூடாக இட்லி!


நம்மவன் பெரிய முதலாளியாக இருந்தாலும் அவன் காப்பி கடை கதவன்டை போய் வெளியே நின்று கொண்டு சாமி!  சாமி!  என்று கையை ஏந்திக் கொண்டு ஆருத்திரா தரிசனத்தில் விபூதி வாங்குவதுபோல் கத்துகிறான்.  இந்த முதலாளியின்  டிரைவர் நேராக உள்ளே போய் சூடாக இட்லி தின்றுவிட்டு போகிறான்.  எப்பொழுது நம்முடைய நிலை உயர்வது?  எப்போது நம் சுயமரியாதை காப்பாற்றப்படுவது?  அவர்களுக்கு இந்த மாதிரி கஷ்டம் உண்டா?  ஆகவே பார்ப்பன சுயராஜ்ஜியமும், நம் சுயராஜ்ஜியமும் ஒன்றாய் இருக்க முடியுமா?

-  குடிஅரசு, சொற்பொழிவு, 18.10.1936

வயிறு பற்றி எறிகின்றது!


என்னுடைய நாட்டு மனிதன் ஒருவன் என்னை ஒரு மனிதனாய்க் கருத வேண்டும்.  அவன் என்னை பிறவியில் சமமாய் நினைக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகின்றேன்.  இந்த இழிவுத்தன்மையும் அவமானமும் தான் என்னை வருத்துகின்றது.  நினைத்தால் வயிறு பற்றி எறிகின்றது.  நெஞ்சம் குமுறுகின்றது. 

 இதற்கு ஏதாவது ஒரு மார்க்கம் ஏற்பட இன்றைய எந்த அரசியலாவது இடையூறாயிருந்தால் சொல்லுங்கள்.  அப்பொழுது அந்த அரசியலைப் பற்றி கவனிப்போம்.  அதை யொழிப்போம். 
 இல்லாவிட்டால் வேறு எது இடையூறோ, யார் இடையூறாயிருக்கின்றார்களோ அவற்றையொழிக்க ஒன்று சேரலாம் வாருங்கள்.  அதை விட்டு விட்டு இவ்வளவு பெரிய அக்கிரமத்தையும் கொடுமையையும் மூடி வைத்துக் கொண்டு "அரசியல் அரசியல்' என்றால் என்ன அர்த்தம்?  இது யாரை ஏமாற்றுவது?  இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படியே காலத்தைக் கடத்துவது?

-  குடிஅரசு, சொற்பொழிவு, 06.09.1931

மூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்கள்!



இதுவரை இவ்விழிவு பற்றி யாராவது கவலை எடுத்துக் கொண்டதுண்டா?  எத்தனையோ ரி´கள், எத்தனையோ நாயன்மார்கள், எத்தனையோ குருமூர்த்திகள், எத்தனையோ ஆச்சாரியர்கள் தோன்றிய நாடுதானே இது.  இவர்களுள் எத்தனை பேர் இவ்விழிவு நீங்க என்ன முயற்சி எடுத்துக் கொண்டார்கள்?  தெய்வீகப் பக்தியுள்ள சிலர் ஜாதிப் பிரிவினையை எதிர்த்தனர் என்றாலும் ஆரியம் அதற்கு அடிபணியவில்லையே?  மூட நம்பிக்கைகளை வெறுத்த சித்தர்களை நாஸ்தீகர் என்று கூறி, மக்கள் அவர்களைப் பின்பற்றாமற்படி செய்து விட்டதே?  ஜீவஹிம்சை கூடாது என்று கூறிய பெளத்தர்களையும், சமணர்களையும் கழுவிலேற்றி விட்டதே?  வர்ணாஸ்ரமத்தைப் பாதுகாக்கத் தானே இவ்வளவும் செய்யப்பட்டது. 

 அதுவும் அந்த வர்ணாஸ்ரமதர்மத்தில் ஆரியத்தின் பிழைப்புச் சிக்கிக் கொண்டதால் தானே அவ்வளவும் செய்யப்பட்டது.

- குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

1000 வருடமாகவா...?


1000 வருடமாகவா ஒரு சமுதாயத்து மக்கள் "தகுதி', "திறமை' இல்லாதவர்களாக இருப்பார்கள்.

 - விடுதலை, சொற்பொழிவு, 20.09.1952

நாம் எப்படி மனிதர்?



ஒரு காலத்தில் உலகத்திற்கே நாகரீகம் கற்பித்துக் கொடுத்த நாம் இன்று ஆரியர்களால் சின்னப்படுத்தப்பட்டிருக்கிறோம்.

நாம் சுதந்திரம், சுயேச்சை பெற்று விட்டால் போதுமா?  நாம் மனிதத் தன்மை பெற வேண்டாமா?  ஒருவன் உயர் ஜாதி மற்றொருவன் இழி ஜாதி என்ற பாகுபாடு இருக்கும் வரையிலும், நாம் எப்படி மனிதர்களாகி விட்டோம் என்று கூறிக் கொள்ள முடியும்?

- குடிஅரசு, சொற்பொழிவு, 08.05.1948

சீர்திருத்தம் கோரும் எவரும்

மகாநாட்டின் தலைவர் திரு.வி.வி. சீனிவாசையங்கார் அவர்களும் முன் பேசிய வரவேற்பு அக்கிராசனரைத் தழுவியே பேசியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.  அதில் அவர் கொஞ்சகாலத்திற்கு முன்பு இந்தியாவில் பிரமுகர்களும், பாமர ஜனங்களும் பிரிட்டிஷ் கவர்ன்மெண்டார் செய்திருக்கும் நன்மைகளைப் பாராட்டி இந்தியாவிற்குப் பிரிட்டிஷ் ராஜ்யத்தை அனுப்பியதற்காகக் கடவுளுக்கு நன்றி கூறுவது வழக்கம் என்றும், ஆனால் இப்போது சுயேச்சையடைய பிரதிநிதி ஸ்தலங்கள் வேண்டுமென்று கருதி, மேல்நாட்டு ஜனநாயக ஸ்தாபனங்களை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்களென்றும், இது பெரிய தவறு என்றும் அதைவிட ஆபத்தான காரியம் வேறொன்றும் இல்லை என்பதாகத்தான் நினைப்பதாகவும் சொல்லியிருக்கிறார்.

சீர்திருத்தம் கோரும் எவரும் ஜனங்களுடைய தன்மையையும் பழைய அனுபவங்களையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டுமென்றும் ஆதலால் நமக்குச் சீர்திருத்தம் கூடாதென்றும் சொல்லியிருப்பதோடு அதற்கு உதாரணமாக இப்பொழுது இதுவரை கிடைத்த சீர்திருத்தங்களில் பெருத்த அதிகார நிர்வாகம் மூன்றாந்தரமாக மனிதர்களிடம் போய் விட்டதென்றும், ஆதலால் அது கூடாதென்றும், இத்தேசத்திற்கு அருகதையில்லாத சீர்திருத்தம் கொடுக்கப்பட்டதால் இம்மாதிரி கஷ்டம் ஏற்பட்டதென்றும் சொல்லியிருக்கிறார்.  ஆகவே அதனாலும் பார்ப்பனர்களினுடைய சுயராஜ்ஜியம் என்ன என்பதும், எப்படியானால் அவர்களுக்குச் சுயராஜ்ஜியம் இஷ்டம் என்பதும், எப்படியானால் சுயராஜ்ஜியம் வேண்டாமென்பதும் இதனால் நன்றாய் விளங்கி விட்டது.  தவிர, பிராணர்களிடம் மற்றவர்கட்கு ஏற்பட்டது துவே­த்தினால் மதம், கடவுள் பல நூற்றாண்டுகளாக பிராமணர்கள் பாதுகாத்து வந்த கதைகள், பாரமார்த்தீக லட்சியங்கள் ஆகிய இவைகளுக்கு விரோதிகளாக பிராமணரல்லாதார் ஆகிவிட்டதாகவும் மிக்க வருந்துகிறார்.  ஆகையால் இவைகளைக் காப்பாற்றத் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்றும் ஆசைப்படுகிறார்.  அதோடு சுயமரியாதை இயக்கம் செய்யும் வேலைகளைப் பார்த்துக் கொண்டு இனித் தூங்கிக் கொண்டிருந்தால் காரியங் கெட்டுப் போகுமென்றும் மிக்க வருந்துகிறார்.  அதோடு ரு´யாவின் உதாரணத்தைப் பின்பற்றுகிறவர்களும் பலர் இருக்கிறார்களென்றும் மிக்க ஓலமிடுகிறார்.  ஆகவே பிராமண மகாநாடு என்பதும் பிராமனியம் என்பதும் வேதம்.  கலை, ஆத்மார்த்தம் என்பதும் பார்ப்பனர்களால் எதற்காகக் காப்பாற்றப்படுகிற தென்பதும் இப்போதாவது பொதுஜனங்கள் அறியலாமென்று நினைக்கின்றோம்.

இதை நம்மவர்களிலேயே உள்ள சில பண்டிதர்களும், அழுக்கு மூட்டைகளும், வெறுந்தலைப் பணக்காரர்களும் தெரிந்திருந்தாலும் அப்பார்ப்பனர்களுக்கு அஞ்சித் தங்கள் வயிறு வளர்ப்பதையும், போலி கெளரவத்தையும் உத்தேசித்து அவர்களோடு கூடவே அவர்கள் ஆட்டத்திற்குத் தகுந்த தாளம் போடுகிறார்கள்.  ஆதலால் மற்றவர்களாவது இந்த சூழ்ச்சியையறிந்து பார்ப்பன ஆயுதங்களுக்குக் கழுத்தைக் கொடுக்க மாட்டார்களென்று நம்புகிறோம்.  தவிர, பிராமணர்கள் தங்களுடைய பிராமனியத்தை விட்டு விட்டதினாலும் வேதம் படிக்காததினாலும், ஆத்மார்த்தத்தைக் கருதாததினாலும் தங்கட்கு இம்மாதிரி கஷ்டம் வந்திருப்பதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள்.  இந்த வி­யத்தில் நாம் சிறிதும் ஆட்சேபணையோ, தடங்கலோ செய்வதில்லை என்பதை நாம் உண்மையாகவே பார்ப்பனர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒவ்வொரு பார்ப்பனரும் இப்போது அவர்கள் செய்யும் தொழிலை விட்டுவிட்டு வேதம் படிக்கப் போவதையும், மூன்று வேளை குளித்து விட்டு, ஆறுகாலம் சந்நியாவந்தனம் செய்வதையும், காயத்ரியை ஜபிப்பதையும், பிராணாயாமம் பண்ணுவதையும் நாம் சிறிதும் ஆட்சேபிக்கப் போவதில்லை.  அது வி­யத்தில் நமக்கு எவ்வித நஷ்டமுமில்லை.  ஆனால், அதற்காக நம்மை வந்து காசு கேட்கக் கூடாதென்றும், இந்தக் காரியங்களுக்காக இவர்களுக்கு நமது மூடசிகாமணிகள் பிச்சைக் கொடுக்கக் கூடாதென்றும், வெட்டியில் சோறு போடக் கூடாதென்றும், பார்ப்பனரல்லாத மேற்படி மூடசிகாமணிகளை மாத்திரம் வேண்டிக்கொள்ளுகிறோம்.

-  குடிஅரசு, தலையங்கம், 08.06.1930

பிராமணரல்லாதாரியக்கம்

""பிராமணரல்லாதாரியக்கம் உத்தியோகத்திற்கு ஏற்பட்டது என்று எண்ணி கவலை இல்லாமல் இருந்து விட்டோம்.  அது குடிஅரசு இயக்கத்தில் சேர்ந்து கொண்டு (சுயமரியாதை) உரிமையை ஸ்தாபித்துக் கொள்வதற்கு என்று சொல்லிக் கொண்டு மத வி­யத்திலும் கோவில் வி­யத்திலும் புகுந்து நம்மை அடியோடு கவிழ்க்க ஆரம்பித்து ஆயிரக்கணக்கான வரு­ங்களாய் நாம் (பிராமணர்கள்) அனுபவித்து வந்த உரிமையை இப்போது பலாத்காரமாய் பிடுங்கிக் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.  உதாரணமாய், சுயமரியாதைக்காரர்கள் செய்து வரும் பிரச்சாரத்தின் கொடுமை ஊர்ஊராக சுற்றிப் பார்ப்பவர்களுக்குத் தான் தெரியும்'' என்பதாகச் சொல்லி இருக்கின்றார்.

இந்த வாக்கியங்களால் பார்ப்பனரல்லாதார் இயக்கத்தின் உண்மையும் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவமும் விளங்காமல் போகாது.  வெறும் உத்தியோகத்தைப் பற்றி பார்ப்பனரல்லாதார் இயக்கம் பாடுபடுவதாக பார்ப்பனர்கள் நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அவர்களுக்கு இதைப் பற்றி ஒரு சிறிதும் கவலை இருக்க நியாயமில்லை.  ஏனெனில் எவ்வளவு பிரயத்தனப்பட்டாலும் சர்க்கார் உத்தியோகங்களிலிருந்து பார்ப்பனர்களை சுலபத்தில் விரட்டிவிட முடியாது.  ஏன் எனில் வெள்ளைக்காரர்களிடமிருந்து உத்தியோகம் பெறும் யோக்கியதையும், சவுகரியமும் அவைகளுக்கேற்றபடி நடக்கும் தன்மையும் பார்ப்பனரல்லதார் களுக்கு இல்லை என்பது பார்ப்பனர்களுக்கு நன்றாய் தெரிந்த வி­யம்.  அன்றியும் பார்ப்பனரல்லாதாருக்கு விரோதமாய் எதிர்பிரச்சாரம் செய்ய பார்ப்பனரல்லாத பல கூலிகள் தங்களுக்குச் சுலபமாய் கிடைப்பார்கள் என்கின்ற தைரியமும் இருந்தது.  ஆதலால் அவர்கள் இதை லட்சியம் செய்யவில்லை.  ஆனால் இப்போது சுயமரியாதை இயக்கமானது பார்ப்பன சூழ்ச்சிகள் பலிக்க விடாமல் செய்வதோடு பார்ப்பனரல்லாத கூலிகளும் பார்ப்பனர்களோடு முன் போல அவ்வளவு தாராளமாய் சேருவதற்கில்லாமல் செய்வதால் இப்போது பார்ப்பனர்கள் பயந்து தீர வேண்டியதாய் விட்டது.

அன்றியும் சுயமரியாதைக் கொள்கைகள் பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஆதாரமானதும் ஆணி வேரானதுமான பார்ப்பன மதத்தையும் பார்ப்பன சாமி கோயில்களையும் கழுத்துப் பிடியாய் பிடித்துக் கொண்டதால் பார்ப்பனர்கள் திமிறுவதற்கு இடமில்லாமல் கண் பிதுங்க விழிக்கின்றார்கள்.  மேலும் இவ்வியக்கம் வெற்றி பெற்றது என்று சொல்லுவது, பார்ப்பனர்கள் ஆயிரக்கணக்காக அனுபவித்து வந்த தனி உரிமைகளைப் பிடுங்கி எல்லா மக்களையும் சமமாக்கித் தீரவேண்டியதாதலால் சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க முயற்சிக்க வேண்டியது பிராமண மகாசபையின் கடமையாகப் போய் விட்டது என்பதில் அதிசயமொன்றுமில்லை.

""கிராமங்களில் கூட இவ்வியக்கம் பரவி விட்டது'' என்று திரு ஆச்சாரியார் சொல்லுவதிலிருந்து நாம் சந்தோ­ப்பட வேண்டியதானாலும் அது பரவ வேண்டிய அளவுக்கு ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இன்னும் பரவவில்லை என்பது நமது கருத்தாகும்.

தவிர உபன்யாச முடிவில் ""சுயமரியாதை இயக்கம் பிராமணத் துவே­ இயக்கமானதால் அவ்வியக்கத்தால் பிராமணர்களுக்குக் கெடுதி ஏற்படாமல் தடுப்பதற்காக சைமன் கமி­னைத் தஞ்சமடைய வேண்டும்'' என்பதாக சொல்லி இருக்கின்றார்.

தாங்கள் மாத்திரம் எவ்வளவு இழிவானது அயோக்கியத் தனமானதுமான காரியங்களைச் செய்தாலும் பிராமணர்கள் என்பதும், தங்களைத் தவிர மற்றவர்கள் எவ்வளவு யோக்கியர்களானாலும் அவர்கள் தங்களது வைப்பாட்டி மக்கள் என்றும், சூத்திரர்கள் என்றும் சண்டாளர்கள் என்றும், தொடக் கூடாதவர்கள் என்றும் தெருவில் நடக்கக் கூடாதவர்கள் என்றும் பல மாதிரியான இழிவான வார்த்தைகளால் அழைப்பதும் கொடுமைப்படுத்தி வதைப்பதும், துவே­மாகாமல் போவதும், இம்மாதிரி செய்வது யோக்கியமானதல்ல வென்று நாம் சொல்லுவது மாத்திரம் துவே­மானதுமானால் இந்த துவே­ம் உலக முழுமையும் ஏற்பட வேண்டும் என்றே ஆவேசப்படுவதோடு இந்த துவே­மில்லாத தமிழ் மக்கள் சுயமரியாதை அற்றவர்கள் என்றே சொல்லுவோம்.



- குடிஅரசு, தலையங்கம், 26.08.1928

எல்லோரும்தான் இந்தப் பிராமணர்களைத் திட்டுகிறார்கள்



சில பிராமணரல்லாதாரும், அக்ராசனாதிபதியுந்தான் பிராமணர்களைத் திட்டுகிறார்களா?  அல்லது தேசமே அவர்களைத் திட்டுகிறதா வென்பதை இவர்கள் கவனிக்க வேண்டும்.  இந்தியாவிற்கே அருந்தனமாய் மதிக்கப்படுபவரும், உலகப் பெரியாருமான மகாத்மா காந்தி இந்தப் பிராமணர்களைப் பற்றி சொல்லும்போது இந்தியாவுக்கு பிரிட்டிஷார் செய்த அக்கிரமத்தை விட நமது பிராமணர்கள் செய்தது குறைந்ததல்ல வென்று சொல்லியிருக்கிறார்.  ஸ்வாமி விவேகாநந்தர், பிராமணர்கள் கக்கின வி­த்தால்தான் இந்தியா கெட்டதென்றும், அவர்கள் வி­த்தைத் திரும்ப அவர்களே தான் எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், அந்தப் பிராமண வி­ம் எடுபட்டாலல்லாது.  இந்தியாவுக்கு விடுதலையில்லையயன்றும், சொல்லியிருக்கிறார்.

பெரிய தியாகியும் தேசபக்தருமான தேசபந்து தாஸ் அவர்கள், தனக்கு அதிகாரமிருந்தால் பிராமண ஸ்திரிகளையயல்லாம் பிடித்து, தீண்டாதவர்களுக்கு ஒப்புவித்து விடுவேன் என்று தனக்கு அவர்கள் மீதுள்ள ஆத்திரத்தைக் காட்டியிருக்கிறார்.  இந்தியரி´யான ஸர்.பி.ஸி. ரே அவர்கள், இந்தியாவுக்கு சுயராஜ்யம் வேண்டுமானால், பிராமணர்களையயல்லாம் மூட்டையில் போட்டுக் கட்டி அத்லாந்திக் மகா சமுத்திரத்தில் போட்டுவிட வேண்டுமென்று சொல்லியிருக்கிறார்.  இவை யயல்லாம் புகழுரைகளா?  இன்னும் இந்தப் பிராமணர்களால் மதிக்கப்பட்டவர்களும், மதிக்கப்படுகிறவர்களுமான ஸ்ரீமான்கள் டாக்டர் வரதராஜலு நாயுடு ஈ.வெ. இராமசாமி நாயக்கர், வி. சர்க்கரைச் செட்டியார், சுரேந்திரநாத் ஆரியா, வி.ஓ. சிதம்பரம்பிள்ளை, தண்டபாணி பிள்ளை, எஸ். இராமநாதன், இராமச்சந்திரச் செட்டியார், சுப்பிரமணியநாயினார், இராமசாமி செட்டியார், இராமநுஜ செட்டியார், ஆதிகேசவலு நாயக்கர், சிங்காரவேலு செட்டியார், கந்தசாமி பிள்ளை, சுப்பையா, சாமிநாதஞ் செட்டியார், வெங்கிடகிருஷ்ண பிள்ளை, பவானி சிங், சொக்கலிங்கம் பிள்ளை, வயிசு, ­ண்முகம் செட்டியார், ராயசொக்கலிங்கம் செட்டியார், தியாகராஜ ஞானியார், சுந்தரம்பிள்ளை, ஹமீத்கான் ஆகிய தேசபக்தர்கள், தேசத்துக்காக ஒரு தடவை இரண்டு தடவை, மூன்று தடவை, நான்கு தடவை சிறைக்குச் சென்றவர்கள்.  ஒரு வருடம், இரண்டு வருடம், மூன்று வருடம், ஐந்து வருடம் தேசத்துக்காக ஜெயிலுக்குச் சென்றவர்கள், பி.ஏ., எம்.ஏ.பி.எல்., முதலிய பட்டதாரிகள், வைதீக ஒத்துழையாதார், நடுக்கட்சியார், சுயராஜ்யக் கட்சியார் தொழிலை விட்டவர்கள், தங்கள் வரும்படியை விட்டவர்கள் என்று சொல்லப்படும் இவர்களும் இன்னும் அநேக பெரியார்களும், இன்னும் சில ஜில்லா காங்கிரஸ் பிரசிடெண்டுகளும், தாலுகா காங்கிரஸ் தலைவர்களும், காரியதரிசிகளும், நிர்வாக மெம்பர்களும், மாகாண காங்கிரஸ் தலைவர்களும், காரியதரிசிகளும், நிர்வாக மெம்பர்களும், மாகாண ஜில்லா, தாலுகா மகாநாட்டுத் தலைவர்களும், எல்லாரும்தான் இந்தப் பிராமணர்களைத் திட்டுகிறார்கள்.

-  குடிஅரசு, 10.09.1949


அடங்கி விட்டதா அகங்காரம்?


கேள்வி - "பிராமணர்கள் தமிழகத்தில் விரும்பப்படவில்லை' என்ற துக்ளக் ஆசிரியர் சோவின் கருத்து பற்றி?

பதில் - பிராமணர்கள் உயர்ஜாதியினர் என்ற அகங்காரம் என்றோ மறைந்து விட்டது.  சமுதாய நீரோட்டத்தில் தங்களையும் அவர்கள் இணைத்துக் கொண்ட நிலையில், அவர்களை ஒதுக்குவதும், ஒடுக்குவதும் வெகுவாகக் குறைந்து போய்விட்டது.  இப்பொழுது தோன்றியிருப்பது சமுதாயத்தைப் பிரிக்கும் வேறுவித ஜாதிப்பிரிவினை ஆபத்து!

(கல்கி, 19.9.2010)

- இவ்வாறு "கல்கி' இதழில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

28.8.2010 "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் பக்கம் எட்டில் தலைப்புச் செய்தியாக.

Ignored by Political parties and Denied Welfare, Large Sections of a Traditionally Elite in Poverty.

Brahmins on the margins, Fight for survival எனும் தலைப்பில் வெளி வந்தது.

இதில் "சோ' ராமசாமியின் கருத்தும் கேட்கப்பட்டுள்ளது.  "Brahmins are not wanted in Tamilnadu, beyond that I do not want to comment'  என்று கூறியுள்ளார்.

ஆதங்கத்தோடோ, ஆத்திரத்தோடோதான் அய்யர்வாளின் வாயிலிருந்து இச்சொற்கள் கொப்பளித்துக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவர் எந்தக் கண்ணோட்டத்தில் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல பார்ப்பனர்கள் என்பவர்கள் எங்கும் தேவைப்டாதவர்கள்தான்.

- கவிஞர் கலி. பூங்குன்றன்
விடுதலை ஞாயிறு மலர், 26-9-2010

பிரிவினை யாரிடமிருந்து உண்டாயிற்று?



வகுப்பு வாதமும், வகுப்புத் துவே­மும் நம்மிடம் எங்கே இருக்கிறது?  பிராமணர் - பிராமணரல்லாதார் என்கிற பிரிவினை யாரிடமிருந்து உண்டாயிற்று?  கோவில்களிலும், தீர்த்தங்களிலும், நதிகளிலும், பள்ளிக்கூடங்களிலும், வாசம் செய்யும் தெருக்களிலும், ஓட்டல்களிலும், காப்பிக் கடைகளிலும் பிராமணர், பாகுபாடுகளும் பார்ப்பனரல்லாதாராகிய நம்மால் ஏற்பட்டதா?  நம்மை யாராவது வகுப்புத் துவே´ என்றோ வகுப்புவாதக்காரர் என்றோ சொல்ல முடியுமா?  பார்ப்பனர்கள் தங்கள் உயர்வையும் ஆதிக்கத்தையும் உண்டாக்கிக் கொள்வதும் நம்மைத் தாழ்ந்த நிலையிலும் இழி தன்மையிலும் இருக்கும்படி செய்வதும் கொஞ்சமாவது குற்றம் என்று அவர்கள் நினைப்பதில்லை.  ஆனால் நாம் அவர்களால் தாழ்மையாயும் இழிவாயும் கருதப்படாமல் சமத்துவமாக சுயமரியாதையுடன் நடத்தப்பட வேண்டுமென்று நினைப்பது மாத்திரம் குற்றமாய் விடுகிறது.

- குடிஅரசு - சொற்பொழிவு - 19.12.1926

யார் வகுப்புவாதிகள்?



கனம் ராஜகோபாலச்சாரியார் ஜஸ்டிஷ் கட்சியையும், முஸ்லீம் லீக்கையும் வகுப்புவாதக் கட்சி என்று சொல்லி அவைகளை ஒழிக்க வேண்டுமென்கின்றாரே, இன்று அவரது மந்திரி சபையில் வகுப்புவாத மில்லையா என்று பாருங்கள்.  இன்று பத்து மந்திரிகளில் அவர்கள் விகிதாச்சாரத்துக்கு மேல் ஒன்றுக்கு அய்ந்துவீதம் மந்திரிகளாக வந்திருக்கிறார்களே.  இது வகுப்புவாதமில்லையா?

அதுமட்டுமல்ல.  கீழ்சபைக்கு இரண்டு தலைவர்களும் பார்ப்பனர்களாகவே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்புவாத மில்லையா?  மேல்சபைத் தலைவருக்கும், பார்ப்பனரையே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்புவாதமல்லவா?  பிரதம மந்திரியும், பிரதம காரியதரிசியும் பார்ப்பனர்களாகவே ஆக்கிக் கொண்டார்களே அது வகுப்புவாதமில்லையா?  நம் நாடு மாத்திரமல்லாமல் ஆறுமாகாண முதல்மந்திரிகளும் பார்ப்பனர்களாகவே அமர்ந்து கொண்டார்களே!  அது வகுப்புவாத மல்லவா?  திவான் பகதூர் பட்டம் விட்ட பெரிய படிப்பாளியும் அனுபவமும் உள்ள ராமலிங்க செட்டியாரை மூலையில் உட்கார வைத்து விட்டு ஒரு சாதாரண படிப்பாளியும் அனுபவமுமில்லாத ஒரு பார்ப்பனர் மேல்சபைக்கு தலைவராக்கப்பட்டு விட்டாரே!  அது வகுப்புவாதமல்லவா? 

 திருச்சி தேவரை தெருவில் திண்டாட விட்டுவிட்டு காங்கிரசுக்கு துரோகம் செய்து காங்கிரசால் தண்டிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர் மந்திரியாக்கப்பட்டாரே அது வகுப்புவாதமல்லவா?  இருபத்தாறு மிருக வைத்திய உத்தியோகத்துக்கு 19 உத்தியோகம் பார்ப்பனருக்கு கொடுத்தால் அது வகுப்புவாதமல்லவா?  கார்ப்பரே­னில் 10 எட்மாஸ்டர் வேலை காலியாக்கப்பட்டதற்கு 10க்கும் பார்ப்பனர்களையே நியமித்தது வகுப்புவாதமில்லையா?  கார்ப்பரே­ன் கல்வி அதிகாரி வேலைக்கு தகுதியான ஒரு பார்ப்பனரல்லாத தோழர் சிவசைலம்பிள்ளை எம்.ஏ.எல்.டி.யை கார்ப்பரே­ன் கவுன்சிலும் காங்கிரஸ் கட்சியும் தெரிந்தெடுத்தும் அதைத் தள்ளி விட்டு குறைந்த யோக்கியதையுடைய ஒரு கீழ்ப்பார்ப்பனரை அதிகச் சம்பளத்தில் நியமித்தது வகுப்புவாதமில்லையா?  இன்னும் பார்ப்பனரல்லாதார் உத்தியோகங்கள் காலியாவதற்கெல்லாம் பார்ப்பனர்களைப் புகுத்துவது தப்பான வழியில் பார்ப்பனர் அல்லாத பெரிய உத்தியோகஸ்தர்களை ஒழிக்க முயற்சிப்பதும் வகுப்புவாதமல்லவா?  மற்றும் காங்கிரசிலும் சென்னைப் போன்ற இடங்களிலேயே சாமிவெங்கிடாசலம் செட்டியார், விநாயக முதலியார், லட்சுமண சாமி முதலியார் சர்க்காரைச் செட்டியார் ஆதி கேசவலு நாயக்கர் முதலிய பார்ப்பனரல்லாதார் மீது மாத்திரம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துத் தண்டிப்பதும் காங்கிரசை விட்டு விரட்டுவதும் பார்ப்பனர்களாயிருக்கிறவர்கள் எவ்வளவு அயோக்கியத்தனமும் அக்கிரமும் செய்தாலும் அதைப் பற்றி சற்றும் கவனியாமல் இருப்பது வகுப்புவாதமல்லவா?  இவை எல்லாமுமா அகஸ்மாத்தாய் ஏற்பட்டவை என்று கேட்கிறேன்.

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் கிடக்கும் சாமான்கள்தான் வீட்டிற்குள்ளே போகுமே தவிர, வீட்டிற்குள் இருக்கும் சாமான்கள் ஒன்றுகூட வெளியில் எறியப்பட மாட்டா என்பது போல் எல்லா அகஸ்மாத்தும் பார்ப்பனர்களுக்கேதான் அனுகூலமாயிருப்பானேன்?



- வேலூர், கோயம்புத்தூரில் ஆற்றிய உரை. குடிஅரசு, 29.05.1938

நாடார் முன்சீப்பு



சென்னையில் ஹைக்கோர்ட் வக்கீலாக இருந்த உயர்திரு. நடராஜ நாடார் பி.ஏ.பி.எல் அவர்கள் ஹைகோர்ட் ஜட்ஜுகளின் தயவினால் விருத்தாசலம் (தென்னாற்காடு ஜில்லா) முன்சீப்பாய் இம்மாதம் நியமனம் பெற்று உத்தியோகம் ஒப்புக் கொண்டார்.  இந்த கனவான் சுமார் ஒன்றரை வரு­த்திற்கு முன்பாகவே முன்சீப் லிஸ்டில் தாக்கல் செய்யப்பட்டவர்.  இந்நியமனம் வகுப்புவாரி உரிமை வலியுறுத்தப் பட்டதன் மூலமே கிடைக்கப்பட்டதாகும்.  இல்லையானால் இதற்கும் ஒரு அய்யரோ, அய்யங்காராகவே தான் வந்திருப்பார்.  இந்த உத்தியோகத்தில் இவரைச் சேர்த்து இப்போது இரண்டே நாடார்கள் நியமனம் பெற்றிருக்கிறார்கள்.  சப்Šஜட்ஜியாகவோ, ஜில்லா ஜட்ஜியாகவோ பிரிட்டிஷ் அரசாங்கம் ஏற்பட்டது முதல் இதுவரை யாரும் வந்ததில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  நாடார் சமூகத்திற்கென்று ஏதாவது உத்தியோகம் ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அதை சில கிறித்தவர்கள் வந்து தாங்களும் நாடார் என்று சொல்லி கொள்ளை அடித்துக் கொண்டு போய்விடுகின்றார்கள்.  நாடார் மக்களும் ஏமாந்து விட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.  இனியாவது நாடார் மக்கள் கண்விழித்து கிறித்தவ நாடார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களைக் கிறித்தவர்களுக்குண்டான விகிதாச்சாரத்தில் பெற்றுக் கொள்ளும்படியும், தங்கள் சமூகத்திற்குண்டான விகிதாச்சாரத்தில் வேறு யாரும் பிரவேசிக்காத படியும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மதம் காப்பாற்றப்பட வேண்டும்.  ஜாதி காப்பாற்றப்பட வேண்டும் என்றும் அதில் யாரும் பிரவேசிக்கக் கூடாதென்றும், இந்த நிபந்தனையின் மீதே சுயராஜ்யமும் சுயேச்சையும் பெற விரும்பும் ஸ்தாபனங்களும் கிளர்ச்சிகளும் நடக்கும்போது நாடார் சமூகம் போன்ற வகுப்பார்கள் தங்கள் உரிமை பெறுவதில் மிக்க கவலையாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டியதுடன் அந்தப்படி தாராளமாகப் பல்லைக் கெஞ்சாமலும் மனசாட்சியையும் கொள்கைகளையும் விற்காமலும் தானாகவே கிடைக்கும்படியாக அரசாங்க இயந்திரத்தில் தக்க மார்க்கம் செய்து கொள்ள வேண்டியது முக்கிய கடமையாகும்.  இது நிரந்தரமென்று நாம் சொல்ல வரவில்லை.  எது வரையும் ஜாதிப் பிரிவும், அவைகளுக்கு ஏற்றத்தாழ்ச்சி உணர்ச்சிகளும் ஆதாரங்களும் காக்கப்படுகின்றனவோ அதுவரையில் கண்டிப்பாய் மேல்கண்ட கொள்கை இருந்தே ஆகவேண்டும் என்று சொல்லுகின்றோம்.

-  குடிஅரசு, துணைத்தலையங்கம், 26.10.1930

பார்ப்பன ஆதிக்கமும் எதேச்சாதிகாரமும்



பிராமணரல்லாதாருக்கே வேலை கொடுக்க வேண்டுமென்றும், பிராமணர்களுக்கு உத்தியோகம் கொடுக்கக் கூடாதென்றும், அய்க்கோர்ட் சர்க்குலர்களும், கவர்ன்மெண்ட் ஆர்டர்களும் இருந்தும், அவைகளைக் குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு நூற்றுக்கணக்கான பார்ப்பனர்களை திருச்சி, தஞ்சாவூர் ஜில்லாக்களிலிருந்து இந்த ஜில்லாவுக்கு இறக்குமதி செய்து வருகிறார்கள்.  சமீபமாக ஏற்பட்ட வகுப்புவாரி உத்தியோகம் கொடுக்க வேண்டுமென்ற ஜி.ஓ. வை குயுக்தியாக அர்த்தம் பண்ணி தங்கள் டிபார்ட்மெண்டுக்கு அமலுக்கு வரவில்லையயனச் சொல்லி விட்டார்கள்.  வரு­த்தில் பெயரளவில் சில பிராமணரல்லாதாருக்கு ஒரு மாச, இரண்டு மாசத்தில் வேலை போட்டு விரட்டிவிட்டு, நீடித்த பதிலையும், பர்மனெண்டு வேலைகளையும் பிராமணர்களுக்கே போட்டு தங்கள் ஆதிக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.

8 வரு­ம் 10 வரு­ங்களுக்கு முன்னதாகவே இந்த டிபார்ட்மெண்டில் நிலைத்து ஆக்டிங் பார்த்து வரும் பார்ப்பனரல்லாதாரின் சர்வீஸைக் கவனித்தால் 2,3 வரு­ம் தானிருக்கும்.  ஏனெனில் வரு­த்தில் 4 மாசம் தான் பதில் போட்டிருப்பார்கள்.  சமீப காலத்தில் வந்த பிராமணன் தொடர்ச்சியாக 2 அல்லது 3 வரு­ம் பதில் பார்த்துவிட்டு, பிராமணரல்லாதாருக்கு சீனியர் என வந்து விடுவான்.  இப்பிராமணர்களுக்கே வேலைகளும் பெர்மணன்டாகி விடும்.  ஆதலால், பிராமணரல்லாத ஒருவன் 10 வரு­ங்களுக்கு முன்பு இருந்து ஆக்டிங் பார்த்து வந்தாலும் சீனியராக மதிக்கப்பட மாட்டான்.  தொடர்ச்சியாக ஆக்டிங் வேலையும் கிடையாது.  காயமான உத்தியோகம் கிடைப்பதரிது.  சிலருக்கு இந்த ஆக்டிங் வேலையுங்கூட போடுவதில்லை.  சீனியர் பிரகாரம் சர்வீசைக் கவனித்து வேலை போடுவதாகச் சொல்லுவார்கள்.  திடீரென ஒரு மாசம்கூட சர்வீஸ் இல்லாத புதிய பிராமணர்களுக்கு பெர்மென்டாக உத்தியோகங்கள் போட்டுவிடுவார்கள்.  இவ்விதமே இதுவரை எத்தனையோ புதிய புதிய பார்ப்பனர்களுக்கு வேலை போட்டுக் கொண்டு வருகிறார்கள்.  அப்பொழுது சீனியாரிட்டி என்பதையே மறந்து விடுவார்கள்.  இவர்கள் செய்யும் அநீதியை மேல் உத்தியோகஸ்தர்களுக்குத் தெரிவித்தால் அவர்களுக்கு வேண்டிய கெடுதியைச் செய்வார்கள்.  ""பிராமணர்களுக்கு மட்டும் சாப்பாடு'' என சில கிளப்புகளில் போர்டு போட்டிருப்பதைப் போல் ""பிராமணர்களுக்கு மட்டும் உத்தியோகம்'' என கோர்ட் வாசல்களில் போர்டுதான் போடாத குற்றம்.  போர்டு போட்டிருந்தால் பிராமணரல்லாதாரில் சிலர் இதில் நுழைந்து கஷ்டப்பட்டு வாழ்நாளை வீண் நாளாக ஆக்கி இருக்க மாட்டார்கள்.  சுயமரியாதையுள்ள எந்த மனிதனும் இதைச் சகிக்க முடியுமா?

சென்ற 10 வரு­ங்களாக எத்தனை பிராமணரல்லாதாருக்கும், பிராமணர்களுக்கும் பெர்மனென்டாக வேலை போட்டிருக்கிறார்கள்.  சென்ற 10 வரு­ங்களாக இந்த ஜில்லாவில் ஜட்ஜுகளும், சிரஸ்தார்களும் மற்ற உத்தியோகஸ்தர்களும் பிராமணர்களாகவே இருந்து வருகிறார்கள்.  சென்ற மாதம் இராமநாதபுரம் ஜில்லா கோர்ட்டிலும், சிவகங்கை சப் கோர்ட்டிலும் திடீரென ஒரு மாசம்கூட சர்வீஸ் இல்லாத 2 பார்ப்பனர்களுக்கு பெர்மனென்டாக அமினா வேலை போட்டிருக்கிறார்கள்.  8 வரு­ம் 10 வரு­ங்களாகக் காத்துக் கொண்டிருக்கும் பார்ப்பனரல்லாதார் கதி என்ன ஆகிறது.  மேற்படி நியமனங்களை ரத்து செய்து பிராமணரல்லாதாருக்குப் போடும்படியாக அய்க்கோர்ட்டாரையும், கவர்ன்மெண்டாரையும் கேட்டுக் கொள்கிறோம்.

இப்பொழுது இந்த ஜில்லாவில் 4,5 அமினா வேலைகள் பர்மனெண்டாக காலியாக இருக்கிறது.  இவைகளையாவது பிராமணரல்லாதாருக்குக் கொடுப்பார்களா?  அல்லது அக்கிரகாரத்திலுள்ளவர்கள் தான் உரித்தானவர்களெனச் சொல்லப் போகிறார்களா?

கவர்ன்மெண்டாரும், அய்க்கோர்ட்டாரும் கிருபை செய்து பிராமணரல்லாதாரின் குறைகளை நீக்கி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைச் சீக்கிரமாக அமலுக்குக் கொண்டுவந்து உதவியற்றுத் தவிக்கும் பிராமணரல்லாதாரை ரட்சிக்கும் படியாகக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறோம்.

- குடிஅரசு, 23.06.1935

நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

உத்தியோக வேட்டை


டிப்டி கலெக்டர் பார்ப்பனர் - தாசில்தார் பார்ப்பனர் - மாஜிஸ்திரேட் பார்ப்பனர் - போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்ப்பனர் Š சப்இன்ஸ்பெக்டர் பார்ப்பனர் - முனிசீப்பு பார்ப்பனர், பாங்கி ஏஜெண்டு பார்ப்பனர், இஞ்சினீயர் பார்ப்பனர், ஓவர்சீயர் பார்ப்பனர்,    ரிஜிட்ரார் பார்ப்பனர், போஸ்ட் மாஸ்டர் பார்ப்பனர், கலெக்டர் ஆபீசில் 100க்கு 90 குமாஸ்தா, தாலுகாபீசில் 100க்கு 95 குமாஸ்தா பார்ப்பனர்கள் போஸ்டாபீசில் 100க்கு 99 பார்ப்பனர்கள், முன்சீப்பு கோர்ட்டில் 100க்கு 100 பார்ப்பன குமாஸ்தாக்கள்.  100க்கு   90 பார்ப்பன வக்கீல்கள், மீதி 100க்கு 10 பார்ப்பனரல்லாத வக்கீல்களும், பார்ப்பன - முனிசீப் பூட்சுக்குப் பாலீஷ் போட்டுக் கொடுப்பவர்களாகவே அனேகமாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள்.  ஆகவே இந்தக் கூட்டத்தார் தான் நம்மை உத்தியோக வேட்டைக் கூட்டம் என்கிறார்கள்.

-  குடிஅரசு, தலையங்கம், 14.04.1935

திங்கள், 14 ஆகஸ்ட், 2017

மேடைக்கு அழைக்கிறேன்...பதில் சொல்லட்டும்!



திராவிடன் - சூத்திரன்.  திராவிடப் பெண் - சூத்திரச்சி.  ஆரியர் வீட்டு வேலைக்காரர்கள், அத்தனை பேரும் திராவிட (சூத்திர)ர்கள்.  மற்றும் திராவிடப் பழம் பெருங்குடி மக்கள் ஈயத்தில் கண்ணாடிக் கல்லில் நகைபோடுவது.  ஆரியர்கள் இன்றைக்கும் பிச்சை எடுத்தாலும் வைரம், செம்பு, பொன் நகைகள் போடுவது.  திராவிடர்கள் 100க்கு 90   பேர்கள் தற்குறி.  ஆரியர்கள் 100க்கு 90 பேர்கள் படித்தவர்கள், மகாபண்டிதர்கள்.      திராவிடர்கள் உத்தியோகத்தில் 100க்கு 90 பேர்கள் பியூன்கள், போலீசு, காவலர்கள்,    தோட்டி தலையாரிகள், ஆரியன் பிச்சை எடுத்தாலும் அய்.சி.எஸ். ஆரியர்கள் 100க்கு  90 உத்தியோகங்களில் கலெக்டர்கள், சூப்பிரண்டுகள், ஹைகோர்ட் ஜட்ஜுகள் முதலிய பெரும் பெரும் பதவிகள் ஆகிறான்.  திராவிடன் ஜமீன்தாரனாய் இருந்தாலும் அவன்  மகன் தெருவில் காவாலியாய்க் காலியாய் ஆரிய அடிமையாய்த் தற்குறியாய் மடையனாய்த் திரிகிறான். திராவிட மிராசுதாரர்கள் மக்கள் எல்லாம் தற்குறியாய் மூட்டை தூக்குகிற  நிலைமைக்குப் போகிறார்கள்.  இந்த நிலைமைக்குக் காரணம் என்ன?  திராவிடன் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கிறேன்.  கடவுள் பக்தியயன்று கொட்டையும் சாம்பலும் மண்ணும் அணிந்துகொண்டு பார்ப்பான் பின்பாகத்தைப் பார்த்துக்கொண்டு நின்று கும்பிட்டு அவன் கால்தூசியைச் சடகோபமாகக் கொண்டு கடவுள் பக்தனாவது போல்,    பார்ப்பானுக்குப் பின்னால் நின்று கொடியைப் பிடித்து அவனுக்கு ஜே போட்டு தேசபக்தனாகக் காட்டிக்கெள்ளும் மானமற்ற திராவிடனைக் கேட்கின்றேன்.  இதோ மேடைக்கு அழைக்கிறேன். வந்து பதில் சொல்லட்டும்.



-  குடிஅரசு, 10-1-1948

எவரும் இளைத்தவர்கள் அல்ல


 இந்துமத ஆதாரப்படி, இந்துமத தர்ம சாஸ்திரங்களின் விதிப்படி இத்தொழிலாளிகள் இவ்வளவு பேரையும் உழவர், நெசவர், வாணியர், பல தொழில் தச்சர்கள் உட்பட      யாவரையும் வருணாசிரம சாதி முறையில் நாலாம்சாதி - சூத்திர சாதியாய் ஆக்கி மற்றும் அதனுள்ளும் கீழ்-மேல் படி வைத்து, ஒருவருக்கொருவர் உண்பன, தின்பன, தொடுதல் - நெருங்குதல் கூட இல்லாமல் இருக்கும்படியான இழிவுகளை உண்டாக்கி - ஒருவரை ஒருவர் இழித்துக் கூறிக்கொள்ளும்படியாகச் செய்துவைத்து, இந்த முறையும்கூட   நாட்டுக்கு ஒருவிதமாய் நடப்பிலிருக்கும்படியாக ஆக்கிக் கீழ்மைப்படுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நலனுக்கும், மேன்மைக்கும் முயற்சி செய்ய வழி இல்லாமல் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.


இது ஒருபுறம் கல்லின்மேல் எழுத்துப்போல் ஆதாரத்திலும் அனுபவத்திலும் இருந்து வந்தாலும் Š இந்தத் "தொழிலாளர் சாதியார்கள்' ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தனி   சாதியையும், வகுப்பையும், உயர்வாகப் பேசிக் கொள்வதிலும் வழிதேடிக் கொள்வதிலும் எவரும் இளைத்தவர்கள் அல்லர்.

- விடுதலை, தலையங்கம் - 16.2.1940

முயற்சி செய்ய வழி இல்லை



இந்துமத ஆதாரப்படி, இந்துமத தர்ம சாஸ்திரங்களின் விதிப்படி இத்தொழிலாளிகள் இவ்வளவு பேரையும் உழவர், நெசவர், வாணியர், பல தொழில் தச்சர்கள் உட்பட      யாவரையும் வருணாசிரம சாதி முறையில் நாலாம்சாதி Š சூத்திர சாதியாய் ஆக்கி மற்றும் அதனுள்ளும் கீழ்-மேல் படி வைத்து, ஒருவருக்கொருவர் உண்பன, தின்பன, தொடுதல் - நெருங்குதல் கூட இல்லாமல் இருக்கும்படியான இழிவுகளை உண்டாக்கி - ஒருவரை ஒருவர் இழித்துக் கூறிக்கொள்ளும்படியாகச் செய்துவைத்து, இந்த முறையும்கூட நாட்டுக்கு ஒருவிதமாய் நடப்பிலிருக்கும்படியாக ஆக்கிக் கீழ்மைப்படுத்தி, அவர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நலனுக்கும், மேன்மைக்கும் முயற்சி செய்ய வழி இல்லாமல் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.

- விடுதலை, தலையங்கம் - 16.2.1940

மார்க்சும் - லெனினும்


இந்த நாட்டுக்கு ஏற்ற மாதிரியில் - இந்த நாட்டுத் தன்மைக்கு ஏற்ற மாதிரியில் தொழிலாளர் பிரச்சினைகளை அணுக வேண்டும்.  மற்ற நாடுகளில் நடந்ததுபோல் இங்கும் நடத்த வேண்டும் என்பதும் அந்த முறையிலேதான் போக வேண்டும் என்பதும் அவசியமற்றதாகும்.

மற்ற நாட்டிலே இருக்கிற நிலைமை வேறு;  இந்த நாட்டு நிலைமை வேறு.  அதாவது, இந்நாட்டில் தொழிலாளிகள் என்பவர் பிறவித் தொழிலாளிகள் ஆவார்கள்.  இப்படிப் பிறவித் தொழிலாளி யாக்கி வைத்து, அவர்களைத் தலையயடுக்க வொட்டாமல் - மாற்ற மடையச் செய்யாமல் பார்த்துக் கொள்கிறவர்கள் மற்றொரு சாதியார்.  அந்தச் சாதிதான் இன்று ஆட்சியிலும் தொழிலாளர் தலைமையிலும் இருந்து வருகிறது.  இன்று தொழிலாளர் நலமாக இருவரின் "சதிதான்' இருந்து வருகிறது.

இந்த நிலை மற்ற நாடுகளில் இல்லை.  மார்க்ஸும், லெனினும் "சதிக்கென்று' ஒரு சாதி இல்லாத நாட்டைச் சேர்ந்தவர்கள்.  ஆதலால் அவர்கள், சதிகாரர்களின் சதிச் செயலுக்கும், தொழிலாளர் சாதி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் அழுத்தப்பட்டுக் கிடப்பதற்கும் பரிகாரம் சொல்ல வேண்டிய அவசியமில்லாதவர்களாய் இருந்திருக்கிறார்கள்.

ஆதலால், தொழிலாளி பேதம் மட்டுமல்லாமல் முதலாளித் தன்மையில் சாதி உயர்வு Š தாழ்வு பேதம் நடப்பு இருக்கிற போதும், அதைப் பாதுகாக்க ஒரு சாதி இருக்கிற       போதும், அவர்கள் தொழிலாளர் கிளர்ச்சியை நடத்துகிற போதும் Š "மார்க்ஸ்


சொன்னபடிதான் செய்ய வேண்டும்;  லெனின் என்ன சொன்னாரோ அந்தப்படிதான் செய்ய வேண்டும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?  இது சதிகார சாதிக்குத்தான் அனுகூலம், மார்க்ஸேதான் தொழிலாளர் பிரச்சினைக்கு முடிவானவரா?  அல்லது வெனினே கடைசியானவரா?  நாளுக்கு நாள் நடப்பும் கருத்தும் மாறிக் கொண்டே வருகின்றனவே!  சாதியின் பேரால் தொழிலாளர் சமுதாயம் இருக்கக் கூடாது என்கின்ற கிளர்ச்சியே 1925Šல் தானே துவக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.  இந்த நிலையில் மார்க்ஸும் லெனினும் முக்கால முணர்ந்த தீர்க்க தரிசிகளா, அவர்களுடையதே முடிவு என்று சொல்ல?  மதவாதிகள்?

பார்ப்பனர்கள் எப்படி மகாவிஷ்ணு, பரமசிவன் என்று சொல்கிறார்களோ அப்படியா பகுத்தறிவு வாதிகள். மார்க்சிஸ்டுகள் சொல்லுவது?  காலம் வேறு;  ஆட்சி வேறு.  அங்கு முதலாளி ஆளுகிறான்.  இங்கு பார்ப்பான் ஆளுகிறான்.  பண்டித நேருவும் இராஜாஜியும், இராமமூர்த்தியும் யார்?  கிரியும் கிருஷ்ணராவும் ஜெயப்பிரகாசும், குருசாமியும் யார்?  மற்றும் இரயில்வே மந்திரியும், தட்சிண இரயில்வேக்களின் எஜண்டும் யார்?

இதற்கும் தொழிலாளர் பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை என்று யாராவது சொன்னால் அவர்களை யோக்கியர்கள் என்றோ அல்லது அறிவாளி என்றோ ஒரு நாளும்      சொல்ல முடியாது.  ஏன் இப்படிச் சொல்கிறேன்?  இந்த மாதிரித் தொழிலாளிக்குச் சம்பந்தப்பட்ட எல்லா ஸ்தானங்களிலும் - ஆட்சிக்குச் சம்பந்தப்பட்ட எல்லாத் தலைமைகளிலும் பார்ப்பனனே இருக்க வேண்டிய அவசியமென்ன?  இது அகஸ்மாத்தாக ஏற்பட்டதா?

அல்லது, பார்ப்பனர்தான் இருக்க வேண்டும் என்கின்ற அவசியத்தினால் ஏற்பட்டதா கம்யூனிஸ்டுகள் தாம் இதற்குப் பதில் சொல்லட்டுமே!
"சாதி பற்றி - வகுப்பு பற்றி - பார்ப்பான் சதியைப் பற்றிப் பேசுவது பிற்போக்குச் சக்தி' என்று சொல்லி விடுவதே இவற்றிற்குப் பரிகாரமாகி விடுமா?  அல்லது மார்க்ஸ், லெனின் சொன்னபடிதான் தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னால் என்ன அர்த்தம்?

மார்க்ஸ் நினைத்திருப்பாரா, இந்த நாட்டில் பார்ப்பனர்கள் என்கிற சதிகாரர்கள் செய்து வருகிற கொடுமைகளையும் புரிந்து வருகிற ஆதிக்கத்தையும் நடத்துகிற சதித் திட்டங்களையும் மற்றும் இந்த நாட்டின் சொந்த மக்கள் பிறவிச் சூத்திரர்களாக்கப்பட்டு, வேசி மக்களாய்க் கருதப்படுகிற நிலைமையையும் பற்றி?  அதற்கு ஏற்ற மதம், சாஸ்திரங்கள் கடவுள்கள் பற்றி?  ஆதலாலேயே, அவர் அந்த நாட்டிற்குத் தகுந்த மாதிரி நிலவி வந்த முதலாளித்துவம், அதன் ஆதிக்க முறைகள், அவைகளுக்கு மதம் அளிக்கும் ஆதரவு பற்றிச் சொல்லிப் போனாரே தவிர, இந்த நாட்டைப் பற்றி Š பாவம், அவர் என்ன கண்டார்?

-  விடுதலை, சொற்பொழிவு, 20.09.1952

பிறவியிலேயே பல படிகள்



இன்றைய வாழ்க்கை நிலைமையைப் பார்த்தால் மனிதன் வேலை செய்வதற்காக ஒரு தொழில்       கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டுமென்றுதான் ஏற்படுகின்றது.  இதுவும் தான் வயிற்றுக்கு வேண்டிய அளவு கூட கிடைக்க முடியாத கூலிக்கு முழுநேரத்தையும் செலவு செய்து பாடுபட வேண்டும் என்பதாகக் காணப்படுகின்றது.
இது பகுத்தறிவில்லாத மிருக வாழ்வைவிட மிக மோசமான வாழ்வேயாகும்.  எப்படி எனில் அவற்றிற்காவது (ஒரு காரண்டி) உத்திரவாதம் இருக்கின்றது.  அதாவது அதன்   எஜமான் வயிறு நிறைய அதற்கு வேண்டிய ஆகாரம் கொடுக்கக் கட்டுப்பட்டிருக்கின்றான்.  மனித வேலைக்காரனுக்கோ உத்தரவாதமே கிடையாது.  இன்னும் பட்சிகள், காட்டு மிருகங்கள் ஆகியவைகளில் எதற்கும் எவ்வித வேலையும் செய்யாமல் வாழும் சவுகரியமிருக்கின்றது.  இப்படி இருக்க பகுத்தறிவு இருக்கும் காரணத்திற்காக மனிதன் 100க்கும் 90 பேர் ஆகாரத்திற்கே வேலை செய்ய வேண்டியது என்பதும் அதுவும் காரண்டி இல்லாத அடிமையாய் இருக்க வேலை செய்வது என்பதும், அதுவும் சரியாய் கிடைக்காமல் பட்டினியாய் கஷ்டப்படுவது என்பதும் இயற்கைக்கு மாறுபட்ட ஒரு பெரிய அக்கிரமமாகும்.  ஆகவே வேலையில்லாக் கஷ்டம் ஏற்பட்டு ஜனங்கள் பட்டினி கிடந்து பரிதவிக்க ஆரம்பித்தால்தான் ""தங்களுக்குப் பகுத்தறிவும் வன்மையும் இருந்தும் தாங்கள் முட்டாள்தனமாய் பாடுபடுவதும் தங்களைப் போன்ற பிறரால் ஏய்க்கப்படுவதும் ஏன்?  என்கின்ற காரணத்தை உணர முடியும்.  உணர்ந்து சமநிலையை அடைய முயற்சிக்கவும் முடியும்.

அதை விட்டு விட்டு முதலாளி தொழிலாளி நிலைமையும், மிராசுதாரர் உழவன்       நிலைமையும் உலக வாழ்க்கையின் செளகரியத்திற்கு அவசியம்'' என்பதாகச் சொல்லி  அதுவும் ""கடவுள் செயலால் முன் ஜென்மத்தின் கர்ம பயனால் தலைவிதியால் ஏற்பட்டது'' என்று சொல்லிக் கொண்டு அவற்றை நிலை நிறுத்திக் கொண்டே எவ்வளவுக் கூலி வாங்கிக் கொடுத்தாலும் மனித வர்க்கத்தினரில் பெரும்பான்மையானவர் களின் கவலையும், தொல்லையும், கொடுமையும் ஒழியவே ஒழியாது.  எப்படி எனில் ஜாதி வித்தியாசத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு சமத்துவம் கொடுத்தாலும் அது எப்படி பயன்படாதோ அது போலவே முதலாளி, தொழிலாளி முதலிய பாகுபாடுகளை வைத்துக் கொண்டு அவர்களுக்குக் கொடுக்கும் எவ்வித சுதந்திரமும் பயன்படாமலேயே போய்விடுவதோடு கீழ்நிலை மேல்நிலை என்பதும் மாற்ற முடியாததாகி விடும்.  ஏனெனில் தொழிலாளி, முதலாளி, உழவன், ஜமீன், மிராசுதாரன் என்பவைகளும் ஒருவித வருணாசிரம தர்மமே தவிர வேறல்ல.  ஆச்சிரமங்கள் என்றாலே படிகள் நிலைகள் என்பதுதான் கருத்தாகும்.

நமது நாட்டில் பிறவியிலேயே பல படிகள் இருப்பதாலும் அதனாலேயே நாம் சதா  கஷ்டப்படுவதாலும் தொழில், வாழ்க்கையில் உள்ள படிகளை நாம் கவனிக்கவே நேரமும், ஞாபகமும் இல்லாதவர்களாய் பிறவிப் படிகளையும், தொழில் படிகளையும் கடந்தவனாகத் தான் இருக்க வேண்டும்.  அவ்விரண்டு படிகளையும் ஒழிந்த நிலைதான் சமதர்ம நிலையயன்று சொல்லப்படுவதாகும்.

- குடிஅரசு, தலையங்கம், 14.12.1930

சம அனுபவம்


பொதுவுடைமை வேறு பொது உரிமை வேறு. பொதுவுடைமை என்பது சமபங்கு

என்பதாகும். பொதுவுரிமை என்பது சம அனுபவம் என்பதாகும்.

- குடிஅரசு, தலையங்கம் - 25.03.1944



மதத்தின் பேரால் இப்பார்ப்பனர்கள் நம்மிடமிருந்து வாங்கும் வரிப்பணத்துக்கு ஏதாவது ஒழுங்குண்டா? அவன் கர்ப்பத்தில் தரிக்கும் முன்பே, கர்ப்பதான முகூர்த்தம் என்பதாகவும், கர்ப்பம் தரிக்கும் காலம் சீமந்த முகூர்த்தம் என்பதாகவும், பிறந்து விட்டால் ஜாதகரணம், நாமகரணம், தொட்டிலில் போடுதல், பாலூட்டுதல், ஆயுசு ஓமம், முடி வாங்குதல், காது குத்துதல், பள்ளியில் வைத்தல், காயலா முதலியவைகளுக்குச் சாந்தி, பிறகு அவனுக்குக் கலியாணமென்றால் பெண் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நாள் வைத்தல், விவாகம் ஆனபின் மேற்படி "சடங்கு, அவன் பிள்ளைகுட்டி பெற்றால் அதற்கும்;  அவன் காயலாவுக்கு கிரகதோ­ம், சாந்தி, கோவில், குளம், யாத்திரை ஆகியவைகள் இவ்வளவும் தவிர, கடைசிக் காலத்தில் இன்ன வருடம், இன்னமாதம், இன்னதினம், இன்ன திதியில் செத்துப் போனார்.  வை பணம், அரிசி, பருப்பு, உப்பு, புளி வகையறா சாமான்கள் என்று கேட்பதோடு, சாப்பிட்டு அஜீரணம் ஏற்பட்டால் அதற்கும் இஞ்சியும், சுக்கும் வை என்றும் கேட்டு வாங்கி, இவ்வளவும் கொடுத்தும் நீயும் உன் பெண்ஜாதியும் என் காலில் விழுந்து கும்பிட்டு, கால் கழுவின தண்ணீரைக் குடியுங்கள்' என்றும் சொல்லி, மூட்டைக் கட்டிக்கொண்டு போய்விடுகிறான்.

- குடிஅரசு, சொற்பொழிவு, 03.04.1927

பார்ப்பான் பணக்காரனானால்?



இந்த நாட்டில் பார்ப்பனர் மீது பாமர மக்களுக்கு வெறுப்பு உண்டாகும்படி செய்துவரும் (என்னால் தோற்றுவிக்கப்பட்ட) சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பிரச்சாரத்தால் பார்ப்பனர்கள் தங்களுக்கு உரிய வைதிக சம்பந்தமான ஏழ்மை வாழ்க்கையை விட்டுவிட்டு பாங்கி, வியாபாரம், இயந்திர முதலாளி முதலிய தொழில்களில் ஈடுபட்டு ஏராளமான பணம் சம்பாதித்து அவர்களில் அநேகர் செல்வவான்களாகவும், இலட்சாதிபதிகளாகவும் ஆகிவிட்டார்கள்.  இதுதான் துவே­ப் பிரச்சாரத்தால்,  ஏற்பட்ட பயன் என்று பார்ப்பனர்கள் மீது வெறுப்புக் கொண்ட பலர் என்னைக் குற்றம் சொல்லுகின்றார்கள்.

எனக்கு, எனது சுயமரியாதை திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான்கூட ""மேல் ஜாதி'' யான் என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது,அவன் நல்வாழ்வு வாழக் கூடாது,அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பது அல்ல.  ஒவ்வொரு பார்ப்பானும் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், பொப்லி ராஜா, சர். சண்முகம் செட்டியார், சர். ராமசாமி முதலியார்       போன்றவர்களாக, கோடீஸ்வரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரி  எனக்கு ஆட்சேபணை இல்லை.  ஆனால் எந்தப் பார்ப்பானும், மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.  பணக்காரத்தன்மை ஒரு சமூகத்துக்குக் கேடானதல்ல.  அந்த முறை தொல்லையானது.    சாந்தியற்றது என்று சொல்லலாம், என்றாலும் அதுபணக்காரனுக்கும் தொல்லையைக்  கொடுக்கக் கூடியதும், மனக்குறை உடையதும் இயற்கையில் மாறக் கூடியதும் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றக் கூடியதுமாகும்.

ஆனால், இந்த மேல் ஜாதித் தன்மை என்பது இந்த நாட்டுக்குப் பெரும்பாலான       மனித சமுதாயத்துக்கு மிகமிகக் கேடானதும், மகா குற்றமுடையதுமாகும்.  அது         முன்னேற்றத்தையும் மனிதத் தன்மையையும் சமஉரிமையையும் தடுப்பதுமாகும்.  ஒரு பெரிய மோசடியும், கிரிமினலுமாகும்.  ஆதலால் என்ன விலை கொடுத்தாவது மேல்     ஜாதித்   தன்மையை ஒழித்தாக வேண்டும் என்பது எனது பதிலாகும்.

- குடிஅரசு 09.11.1946


--------------
திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான்கூட ""மேல் ஜாதி'' யான்      என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர பார்ப்பான் பணக்காரனாகக்        கூடாது, அவன் நல்வாழ்வு வாழக் கூடாது, அவன் ஏழையாகவே இருக்க வேண்டும்    என்பது அல்ல.  ஒவ்வொரு பார்ப்பானும் கோடீஸ்வரனாகவும், இலட்சாதிபதியாகவும் ஆகிவிட்டாலும் சரி  எனக்கு ஆட்சேபணை இல்லை.  ஆனால் எந்தப் பார்ப்பானும்,  மடாதிபதிகள் உள்பட எவரும், சிறிது கூட நமக்கு மேல்ஜாதியினன் என்பதாக இருக்கக் கூடாது என்பதுதான்.


- குடிஅரசு 09.11.1946

அடிக்கடி சறுக்கி!



பார்ப்பனரல்லாத சமூகத்தில் கீழ்சாதிக்காரர்கள் என்பவர்கள் எவ்வளவு செல்வம்     தேடிய போதிலும் சாதிŠமத சம்பிரதாயம் காரணமாக அடிக்கடி சறுக்கி விழுந்து        கொண்டுதான் இருக்கிறார்கள்.  அவ்வளவோடு மாத்திரமல்லாமல், சமூகத்தில் தாழ்ந்த நிலையில்தான் இருக்கிறார்கள்.  ஒரு சிலர் செல்வவான்களாய், கோடீஸ்வரர்களாய்    இருந்தாலும்கூட, அவர்கள் சமூகத்தில் கீழ்சாதிக்காரர்களாய் இருந்து வருகிறார்கள்.

(விடுதலை, தலையங்கம் - 4.9.1973)

கடுகளவு மாற்றம்!



மதத்துக்கும், சாதிக்கும் பெயர்போன இந்த நாட்டு மக்களுக்குள் Š கல்வி அறிவற்று மூடநம்பிக்கையில் ஆழ்த்தி வைக்கப்பட்டிருக்கும் இந்த நாட்டுப் பாமர மக்களுக்குள் பிறவிபேதம் நீக்கப்படாதவரை எப்படிப்பட்ட பொருளாதார சமதர்மமும் கடுகளவு    மாற்றத்தையும் உண்டாக்கி விடாது.

(விடுதலை, தலையங்கம் Š 4.9.1973)

பலமான பாதுகாப்பு



சூத்திர சாதி என்பதால் நாம் பார்ப்பானுக்கு உழைத்துப்போட வேண்டியவர்கள்.    பார்ப்பனர்கள் என்பதால், அவர்கள் எல்லாவற்றையும் தங்கள் வயிற்றுக்கே வாய்க்கால் வெட்டி விட்டு உயர் வாழ்வு வாழ்கிறவர்கள்.  இன்னும் சொல்லப்போனால், சாதி உட்பிரிவுகள் இருக்கின்றனவே, அவைகள் எதற்காக ஏற்படுத்தப்பட்டன?  பார்ப்பன பாஷைப்படி எடுத்துக் கொண்டால்கூட, தொழிலுக்குத்தானே சாதிப் பிரிவு?  பறையடிக்கிறவன் - பறையன்;  வெளுப்பவன் - வண்ணான்;  மண்பாண்டம் செய்கிறவன் - குயவன்.  ஆனால், வேதம் ஓதுகிறவர் - அய்யர், இப்படித்தானே!  இதில் பார்ப்பனரைத் தவிர மற்றையோரெல்லாம் உடலுழைப்புக்காரர்கள்.  சாதியின் முறைப்படியே சமுதாயத்தின் அமைப்புப்படியே!  எனவேதான் சொல்லுகிறேன் - இன்றைய அமைப்பு முறை, பேதத் தன்மை, ஏழ்மை - உயர்வு நீங்க வேண்டுமென்றால் இந்த நாட்டிலே முதலாளியை ஒழித்தால் மட்டும் போதாது.  பார்ப்பன உயர்வுத் தன்மை, அதற்குக் கடவுள் மத சாஸ்திரத்தின் மீது கட்டப்பட்டுள்ள பலமான பாதுகாப்பு - இவைகளை ஒழித்தால்தான் முடியும்.

(குளித்தலை, வதியத்தில் சொற்பொழிவு, "விடுதலை' 2.7.1952)



பாழாய்ப்போன இந்த நாட்டில்!


முதலாளி என்பவன் பரம்பரை பரம்பரையாக வருபவனல்லன்.  இன்றைக்கு ஒருவன் முதலாளியாக இருக்கலாம்;  நாளைக்கே அவன் "இன்ஸால்வென்ட்' கொடுத்து "பாப்பர்' ஆகிவிடலாம்.  அதுபோலவே, இன்று கஞ்சிக்குத் திண்டாடியவன் அடுத்த நாள் பெருத்த முதலாளியாக வரலாம்.  ஆனால், பார்ப்பான் என்பது அவன் உயர் சாதிக்காரன், கடவுளுக்கு நேராகத் "தந்தி' சொல்கிறவன் என்பது பரம்பரை பரம்பரையாக -              வாழையடி வாழையாக வருவது ஆகும்.  அழுக்குப் பிடித்த பார்ப்பான் ஆனாலும்,      குஷ்டம் பிடித்து அழுகிய பார்ப்பான் ஆனாலும், அயோக்கியப் பார்ப்பான் ஆனாலும் பார்ப்பார சாதியிலே பிறந்து விட்டதால், அவன் உயர்ந்த சாதிக்காரன் ஆகிவிடுகிறான்.  அவன் மற்றவர்களால் மரியாதை செய்யப்பட வேண்டியவனாகி விடுகிறான்.        
   அதேபோல, எவ்வளவு அறிவாளியாய் இருந்தாலும், திறமைசாலியாய் இருந்தாலும்,    ஒரு சாதியில் பிறந்ததாலேயே அவன் பறையன், சூத்திரன், தேவடியான் மகனாகக் கருதப்பட்டு, மேல்சாதிக்காரர்களுக்கு கை கட்டிச் சேவகம் செய்து வாழ வேண்டியவளாகக் கருதப்படுகிறான்.  முதலாளியாவது, நிலப் பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவைகளை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால், இந்தப் பார்ப்பானோ கை முதலே இல்லாம  கடவுளைக் காட்டி,மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல்சாதிக்காரனாக உழைக்காமல் உண்டு கொழுப்பவனாக வாழ்கிறான்.

இந்த விசித்திரமான நிலைமை பாழாய்ப்போன இந்த நாட்டைத் தவிர வேறு எந்த   நாட்டிலும் இல்லை.  உள்ளபடியே சொல்லுகிறேன் Š இன்று ஏன் நாம் தொழிலாளர் மக்களாய் இருக்கிறோம்?  சாதி அமைப்பின் காரணமாகத்தானே!

(குளித்தலை, வதியத்தில் சொற்பொழிவு, "விடுதலை' 2.7.1952)

அசையும் சொத்து! அசையாச் சொத்து!



முதலாளியாவது, நிலப் பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவைகளை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான்.  ஆனால், இந்தப் பார்ப்பானோ கை முதலே இல்லாமல் கடவுளைக்        காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல்சாதிக்காரனாக              உழைக்காமல் உண்டு கொழுப்பவனாக வாழ்கிறான்.

(குளித்தலை, வதியத்தில் சொற்பொழிவு, "விடுதலை' 2.7.1952)

அழுக்குப் பார்ப்பான்! அறிவாளி சூத்திரன்!



அழுக்குப் பிடித்த பார்ப்பான் ஆனாலும், குஷ்டம் பிடித்து அழுகிய பார்ப்பான்     ஆனாலும், அயோக்கியப் பார்ப்பான் ஆனாலும் பார்ப்பார சாதியிலே பிறந்து விட்டதால், அவன் உயர்ந்த சாதிக்காரன் ஆகிவிடுகிறான்.  அவன் மற்றவர்களால் மரியாதை     செய்யப்பட வேண்டியவனாகி விடுகிறான்.  அதேபோல, எவ்வளவு அறிவாளியாய்    இருந்தாலும், திறமைசாலியாய் இருந்தாலும், ஒரு சாதியில் பிறந்ததாலேயே அவன்      பறையன், சூத்திரன், தேவடியான் மகனாகக் கருதப்பட்டு, மேல்சாதிக்காரர்களுக்கு     கை கட்டிச் சேவகம் செய்து வாழ வேண்டியவளாகக் கருதப்படுகிறான்.

(குளித்தலை, வதியத்தில் சொற்பொழிவு, "விடுதலை' 2.7.1952)

மதமும் கடவுளும் வேண்டவே வேண்டாம்

தோழர்களே, உங்களுக்கு அதாவது ஜாதியில் கீழ்ஜாதி, வாழ்வில் கஷ்ட ஜீவனம்,    அதோடு நித்திய தரித்திரம் (ஏழ்மை) உங்களுக்கு மதம் என்ன?  கடவுள் என்ன?  மதம், கடவுள் எல்லாம் வயிறு நிறைந்தவனுக்கும், பித்தலாட்டக்காரனுக்கும், பேராசைச்       சோம்பேறிக்குமல்லவா வேண்டும்.

உங்களுக்கும் கண்டிப்பாக இப்படிப்பட்ட மதமும் கடவுளும் வேண்டவே வேண்டாம்.

- குடிஅரசு, சொற்பொழிவு, 10.03.1945

கீழ் ஜாதியாய் பிறந்து மேல் ஜாதியாய்



இந்தப் பல ஆயிரவரு­ங்களில் கீழ் ஜாதியாய் பிறந்து மேல் ஜாதியாய் செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது.  ஜாதியே இல்லாமல் பிறந்து, ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை.  வேண்டுமானால் அவரவர் உங்களை ஏமாற்றவோ அல்லது தன்னையே ஏமாற்றிக் கொள்ளவோ சாமியாய் ரி´யாய், மகானாய், மகாத்மாவாய் செத்து இருக்கலாம்.  ஆனால் பறையனாய் பிறந்து பிராமணனாய் செத்தவரோ பிராமணனாய் பிறந்து பறையனாய் செத்தவனோ எவனும் இல்லை.  இந்துமதத்தை விட்டவன்          எவனாவது ஜாதி இல்லாமல் செத்து இருக்கலாம்.  அவனும் ஏதாவது ஒரு மதக்காரனாய் செத்து இருப்பானே ஒழிய, மனிதனாய் செத்து இருப்பானா என்பது சந்தேகம்தான்.

- பெரியார்

ஜாதியே இல்லாதவர்



இந்தப் பல ஆயிர வரு­ங்களில் கீழ் ஜாதியாய் பிறந்து மேல் ஜாதியாய்    செத்த மனிதன் ஒருவன்கூட கிடையாது.  ஜாதியே இல்லாமல் பிறந்து,       ஜாதியே இல்லாமல் செத்தவனும் எவனும் இல்லை.

- பெரியார் - 10.03.1945 (குடிஅரசு, 10.03.1945)

உங்களுக்குத் தகுதி இல்லை! திறமை இல்லை!



"உங்களுக்குத் தகுதி இல்லை, திறமை இல்லை, நீங்கள் அடிமை வேலைக்குத்தான்    தகுதி' என்று சொல்லவுமான நிலை எதனால் - எது எதனால் ஏற்பட்டதோ அதை அதையயல்லாம்  - அவைகளையயல்லாம் வேரோடு கண்டுபிடித்து அழித்து ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தக் கிளர்ச்சி தோன்றியதாகும்.

1939-ல் இந்திக் கிளர்ச்சி தோன்றிய காலத்தில் இம்மாகாணத்தில் பார்ப்பன ஆதிக்கம் இருந்த நிலை என்ன?  அப்போது ஆச்சாரியார் - சி.ஆர். அவர்கள் முடிசூடா மன்னராக இருந்தார்.  "திராவிட மக்களை இப்படிக் கொடுமைப்படுத்தலாமா?' என்று கேட்டதற்கு அவர், "நடு இரவில் திருடன் புகுந்து விட்டால் கையில் கிடைத்ததை எடுத்து அடிக்க வேண்டியதுதானே!  என்றார்.  அந்த ஆணவச் சொல்லானது தமிழுக்கு எவ்வளவோ ஆக்கத்தைக் கொடுத்தது.  தமிழர்களை ஒரு அளவுக்காவது பார்ப்பனச் சூழ்ச்சியை உணரச் செய்து, நல்ல அளவுக்குப் பார்ப்பன வெறுப்பை உண்டாக்கிற்று.  அதனால் மந்திரி சபையில் அவர்களுக்கு மரியாதையே இல்லாமல் செய்து விட்டது.  கடைசியாக, அந்த ஒரு காரணமே ஆச்சாரியாருக்கு இந்த நாட்டில் மரியாதையுடன், பெருமையுடன் வாழ இடமே இல்லாமல் போய் விட்டது.

- விடுதலை,  14.08.1950

மூவேந்தர்கள்!



திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத்தன்மை இன்று நேற்றல்லாமல்

2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவைகளாகும்.  திராவிட அரசர்கள்

மூவேந்தர்கள்,  நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள்.  அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம்

இருந்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக் கொள்ளுபவர்களாயிருக்கிறோம்.  இதன் இழிவை நம்மில் வயது வந்து வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உணரார்கள்.  ஆகவே நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது.  அதுவும் புரட்சி வேலையாக இருக்கிறது!

- குடிஅரசு, தலையங்கம், 19.01.1946

நமது வேலை



இந்து ஆரியர்கள் மதம், சாஸ்திரம், இலக்கியம் முதலிய துறைகளில் நம்மை தங்களுக்கு ஆள்படுத்திக் கொண்டு அரசியல் என்னும் பேரால் நம்மை தன்வயப்படுத்திக் கொண்டு சுரண்டி அச்சுரண்டலில் அய்ரோப்பிய ஆரியனுக்கு ஒரு பாகம் கொடுத்துவிட்டு பெரும்பாகத்தை இந்திய ஆரியர்கள் அனுபவிக்கிறார்கள்.  இதிலிருந்து மீளுவதற்கு ஆரியத்தில் இருந்து, எவ்வகை ஆரியத்தில் இருந்தும் விலக வேண்டும்.  விலகி ஆக வேண்டும்.  இல்லாவிட்டால் கணவன் மனைவி போன்றோ, தகப்பன் பிள்ளை போன்றோ, எஜமான் ஆள்காரன் போன்றோ ஆரியனுக்கும் நமக்கும் தன்மை முறை வைத்துக் கொண்டு குறை கருதாமல் இழிவு கருதாமல் திருப்தியாய், மன நிம்மதியாய் வாழ வேண்டும்.  முடியாவிட்டால் இப்போராட்டத்தில் மடிந்து ஒழிய வேண்டும்.  அப்படிக்கு இல்லாமல் சாந்தமும், ஓய்வும் அற்று பயனில்லாத வேலையில் பணியைச் செய்து கொண்டு இழிவும் குறையும் கொண்ட மனத்திரனாய் துக்க உருவாய் வாழ்வது மனிதத் தன்மைக்கு ஏற்றதல்ல என்பது நமது முடிவு.

திராவிட சமுதாயத்திற்கு மானம், அறிவு, மனிதத்தன்மை என்பவை இல்லாமல் போக அடியோடு இல்லாமல் போக ஆரியர்கள் செய்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்றால் அந்த வெற்றியை அழித்து நாம் மனிததன்மை பெறுவது என்பது இலேசான காரியமல்ல என்றே சொல்லுவோம்.  இதில் இறங்குவதும் மிக்க யோசனை செய்து செய்ய வேண்டிய காரியம் என்றும் சொல்லுவோம்.

ஏன் எனில் திராவிடரின் தன்மானம், அறிவு, மனிதத்தன்மை இன்று நேற்றல்லாமல்

2000, 3000 ஆண்டுகளுக்கு முன் பறிக்கப்பட்டவைகளாகும்.  திராவிட அரசர்கள் மூவேந்தர்கள்,  நான்கு வேந்தர்கள், அய்வேந்தர்கள் காலத்திலேயே இந்த வேந்தர்கள் ஆரிய அடிமைகளாக இருந்தவர்கள்.  அவர்களது ஆரிய அடிமை ஆட்சியில் நாம் இருந்தவர்கள் என்பது மாத்திரமல்லாமல் அவர்கள் சந்ததியார்கள் என்றும் பெருமை பேசிக் கொள்ளுபவர்களாயிருக்கிறோம்.  இதன் இழிவை நம்மில் வயது வந்து வாழ்க்கையில் ஈடுபட்டவர்கள் சிறிதும் உணரார்கள்.  ஆகவே நமது வேலை அடியோடு புதிய வேலையாக இருக்கிறது.  அதுவும் புரட்சி வேலையாக இருக்கிறது.  அதனாலேயே மிகமிக கஷ்டமான வேலை என்கிறோம்.  அதனாலேயே இவ்வேலைக்கு இளைஞர்களையும் மாணவர்களையும் பெரிதும் அழைக்கின்றோம்.

 -  குடிஅரசு, தலையங்கம், 19.01.1946

தமிழன் இழந்தது



தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால் தமிழ்நாட்டையும் தமிழர் வீரத்தையும் கலையையும் நாகரிகத்தையும் மறந்தான்.  தமிழன் தன்னை இந்து என்று கருதியதால் தனது மானத்தையும்

ஞானத்தையும் பகுத்தறிவையும் உரிமையையும் இழந்தான்.

இப்போது தமிழன் தன்னை இந்தியன் என்பதையும் இந்து என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும் ஞானத்துக்கும், வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும் இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.

இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு விரோதமாக காணப்படுவதில் ஆச்சரியமில்லை.  அவர்களது கூலிகளில் பலர் இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள் போல் நடிப்பதில் அதிசயமில்லை.  ஆனாலும் அதைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

- குடிஅரசு, சொற்பொழிவு,
(ஆரியர் ஆரியரல்லாதார் விளக்கம்) 17.09.1939

பிராமண அகராதி

பிராமண அகராதி


வினா - ஆசிரமம் என்றால் என்ன?

விடை - காந்தர்வ விவாஹமும் ராட்சச விவாஹமும் நடக்குமிடங்கள்.

(குடிஅரசு, உரையாடல், 02.05.1926)


பிராமண அகராதி

வினா - சுயராஜ்யம் என்றால் என்ன?

விடை - பிராமணர்கள் உத்தியோகமும் பதவியும் அதிகாரமும் பெறுவதுதான் சுயராஜ்யம்.

(குடிஅரசு, உரையாடல், 02.05.1926)



பிராமண அகராதி

வினா - பிராமணரல்லாதார்களுக்கு உத்தியோகமும் பதவியும் அதிகாரமும் வந்தால் அதற்குப் பெயரென்ன?

விடை - அது அதிகார வர்க்கத்தின் ஆட்சி அல்லது அந்நிய ஆட்சி.

(குடிஅரசு, உரையாடல், 02.05.1926)


பிராமண அகராதி

வினா -பிராயச்சித்தமில்லாத, மன்னிக்க முடியாத தேசத் துரோகம் என்றால் என்ன?

விடை - பிராமணர்களுடைய சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் அயோக்கியத்தனங்களையும் வெளியிலெடுத்துச் சொல்லுவதும் எழுதுவதும் மன்னிக்க முடியாத துரோகமாகும்.

(குடிஅரசு, உரையாடல், 02.05.1926)



பிராமண அகராதி


வினா - புத்தியுள்ள ஜனங்கள் என்றால் யார்?
விடை- பிராமணர்கள் வண்டி வண்டியாய்ப் பொய்யும் புளுகும் அளந்தாலும் அதையயல்லாம்

கேட்டுக் கொண்டு சரி சரியயன்று பேசாமல் இருப்பவர்கள் புத்தியுள்ள ஜனங்கள்.

(குடிஅரசு, உரையாடல், 02.05.1926)





பிராமண அகராதி

வினா - குழப்பக்காரர்கள், காலிகள் என்றால் யார்?
விடை - பிராமணர்கள் வண்டி வண்டியாய்ப் பொய்யையும் புளுகையும் அளக்கும் போது குறுக்கே யாராவது கேள்வி கேட்டால் அவர்கள் காலிகள், குழப்பக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.
(குடிஅரசு, உரையாடல், 02.05.1926)

பிராமண அகராதி

வினா - தேசியப் பத்திரிகை என்றால் என்ன?

விடை - பிராமணர்களின் படம் போட்டுக் கொண்டும், பிராமணர்களைத் தலைவர் என்றும்,

பிராமணர்களைப் புகழ்ந்து எழுதிக் கொண்டும், தேவஸ்தான சட்டத்தையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் கண்டித்துக் கொண்டும் அல்லது அதைப் பற்றி பேசாமல் வாயை மூடிக் கொண்டும் இருக்கிற பத்திரிகைக்கள்தான் தேசியப் பத்திரிகைகள் ஆகும்.

(குடிஅரசு, உரையாடல், 02.05.1926)



பிராமண அகராதி

 வினா - தேசத் துரோகப் பத்திரிகை என்றால் என்ன?

விடை - பிராமணர்களின் தந்திரங்களை எடுத்து எழுதுவதும், பிராமணரல்லாதார்களின் பெருமையைப் பற்றி எழுதுவதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் தேவஸ்தான சட்டத்தையும் ஆதரித்து எழுதுவதுமான பத்திரிகைகள் தேசத் துரோகமான பத்திரிகைகள் ஆகும்.

- குடிஅரசு, உரையாடல், 02.05.1926

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்

இந்துக் குடும்பங்களில் கணவர் இறந்த பிறகு மறுமணம் செய்து கொள்ள விருப்பமில்லாத பெண்மக்களுக்கு தங்கள் கணவர் பயன்படுத்தி வந்த சொத்துக்களின் உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறது.

(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்  -
 குடிஅரசு, 11.12.192)



நாட்டில் ஜாதி மத வேற்றுமைகளிருந்து வரும் வரை ஒவ்வொரு ஜாதி மதத்தினருக்கும்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று இம்மகாநாடு கேட்டுக்கொள்ளுகிறது.

(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்
- குடிஅரசு, 11.12.1927)



தனி வார்டு

அரசாங்க வைத்தியசாலைகளில் பார்ப்பனர்களுக்குத் தனி வார்டுகள் ஒதுக்கி வைப்பதை பலமாய்க் கண்டிக்கிறது.

(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்  Š குடிஅரசு, 11.12.192)



நீடாமங்கலத்தில் நடந்த கொடுமை



அனுமந்தபுரம் பண்ணை ஏஜண்டு கிருஷ்ணமூர்த்தி அய்யர் வயல் கரையில் வந்து நின்றுகொண்டு, நேற்றைய தினம் காங்கிரஸ் மகாநாட்டில் நடந்த சமபந்தி போஜனத்தில் சாப்பிட்ட பயல்களைக் கொண்டுவா என்று சொன்னார்.  உடனே தலையாரி மாணிக்கம் என்பவர் எங்களைக் கூப்பிட்டு சாப்பாட்டுக்கா போனீர்கள் என்று தடிக்கம்பால் அடித்து விளாமரத்துக்குப் போங்கடா என்று தள்ளினார்.

நாங்கள் விளாமரத்துக்குப் போனவுடன் என்னுடைய வேஷ்டியை எடுத்துப் போட்டு என்னை விளாமரத்தோடு கட்டி தடிக்கம்பால் அடித்து நாட்டாமைக்கார அடைக்கலம், சின்ன நாட்டாமை ராமன் இருவரையும் கூப்பிட்டு இந்தப் பயல்களை அவிழ்த்துக் கொண்டு போய் முழுதும் மொட்டையடித்து வா என்று கிருஷ்ணமூர்த்தி அய்யர் (ஏஜண்ட்) சொல்ல பள்ளிப் பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகம்
தான் எனக்கு மொட்டை அடித்தான்.  பிறகு தலையாரி சாணிப்பால் ஊற்றினார்.
பள்ளிப்பரியாரி கதிர்வேல் மகன் ஆறுமுகத்துக்கு நாராயணசாமி அய்யர் கார்வாரி கதிர்வேலைக் கூப்பிட்டு, உன் மகன் ஆறுமுகத்திற்கு உச்சியில் கொஞ்சம் மயிர் வைத்து மொட்டை அடி, ஏனென்றால், அவன் கலியாணம் செய்து கொள்ளப் போகும் மாப்பிள்ளை என்று சொன்னார்.  உடனே கதிர்வேல் தன் மகனுக்கு மொட்டையடித்தான்.

பழைய நீடாமங்கலம் காமாட்சி மகன் ரெத்தினத்தை வெட்டியானை விட்டுக் கொண்டுவரச் சொன்னார்.  வெட்டியான் பழைய நீடாமங்கலம் போய் பொன்னுசாமி வீரமுண்டார் உதவியைக் கொண்டு காமாட்சி மகன் ரெத்தினத்தை அனுமந்தபுரம் கொண்டு வந்தார்கள்.  அய்யர் அவனுக்கும் மொட்டையடித்து சாணிப்பால் ஊற்றச் சொன்னார்.  அவர்களையும் அதேபோல் செய்தார்கள்.
- குடியரசு, 30.1.1938


புகைவண்டி நிலையங்களில் இந்து மக்களுக்கென்று ஏற்படுத்தப்பட்டிருக்கிற உண்டிச் சாலைகளில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் என்று பாகுபாடு செய்திருப்பதானது, பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்கு மிக்கதொரு அவமானத்தை விளைவிப்பதால், அவ்வகையான வேற்றுமையை ஒழிக்கும்படி புகைவண்டி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறது.
ரயில்வேக்காரர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற உண்டிச் சாலைகளில் பார்ப்பனர்கள் மாத்திரமே
சமையல் செய்கிறவர்களா யிருந்து வருகிற வழக்கத்தை மாற்றி விடுமாறு ரயில்வே அதிகாரிகளைக் கேட்டுக் கொள்கிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்

  - குடிஅரசு, 11.12.192)

இந்து சமூகத்திற்குச் சம்பந்தப்பட்டதென்று சொல்லப்படுகிற கோயில், குளம், சத்திரம் முதலிய எல்லா விடங்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களென்று சொல்லப்படுகிற எல்லா மக்களுக்காவது சம உரிமை கொடுக்கப்பட வேண்டுமென்று இம்மகாநாடு முடிவு செய்கிறது.

(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்  -
 குடிஅரசு, 11.12.192)


கோயில்களில் கடவுளை வழிபடுகிறதற்கு இடையில் தரகர்கள் வேண்டியதில்லையயன்றும், ஒவ்வொருவருக்கும் நேராகவே கடவுளை வந்தனை, வழிபாடு செய்து, பூசனை புரிவதற்கு உரிமையுண்டென்றும், அதனை இது முதலே ஒவ்வொருவரும் நடவடிக்கைக்குக் கொண்டு வர வேண்டுமென்றும் இம்மகாநாடு முடிவு செய்கிறது.
(திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மகாநாட்டு தீர்மானம்

- குடிஅரசு, 11.12.192)

""பிராம்மண ஸ்திரீகளுக்குத் தனி இடம்''


 மதுராந்தகத்தில் சமீபத்தில் நடந்த நாடகத்திற்காகப் போடப்பட்ட ஒரு துண்டு விளம்பரத்தின் அடியில் ""பஞ்சமர்''களுக்கு டிக்கட்டு கொடுக்கப்பட மாட்டாது.  பிராம்மண ஸ்திரீகளுக்குத் தனி இடம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது'' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இதற்குக் காரணம் அந்த ஊர் சேர்மன் இந்த நிபந்தனையின் பேரிலேயே நாடகக் கொட்டகைக்கு லைசென்சு கொடுத்திருக்கிறாராம்.  துண்டு விளம்பரம் நமது பார்வைக்கு வந்திருக்கிறது.  கூத்தாடிப் பெண்களும் கூத்தாடி ஆண்களும் கூடி கூத்தாடுகிற இடத்தில்கூட ஆதி திராவிடர்கள் போகக் கூடாது என்பதும், அங்கு கண்ணே!  பெண்ணே!  என்று பேசிக் கொண்டு மூக்கையும் காதையும் கன்னத்தையும் கடித்துக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கப் போகும் பார்ப்பனப் பெண்களுக்கும் கூட தனி இடம் ஒதுக்கித் தருவது என்பதும் பார்ப்பன ஆதிக்கத்தைக் காட்டுகின்றதா இல்லையா என்று கேட்பதோடு இது சைமன் கமி­னுக்குத் தெரிய வேண்டாமா என்று கேட்கின்றோம்.

- குடிஅரசு, 12.02.1928

ரங்கசாமி அய்யங்கார் தெரு



சென்னையில் பார்ப்பனரல்லாத சமூகத்தினர் ஒரு பிரபலஸ்தர்.  அச் சமூகத்துக்கு ஆக உழைத்தவரென்று பெரிதும் பாராட்டப் பெற்றவரான காலம் சென்ற தணிகாசலம் செட்டியார் பேரால் இருந்த ஒரு தெருவுக்கு அப்பெயர் எடுக்கப்பட்டு ஒரு பார்ப்பனர் பெயர்  அதாவது ரங்கசாமி அய்யங்கார் தெரு என்று பெயர் இடப்பட்டு விட்டது.  இது சாதாரண சங்கதி என்று சொல்லிவிட முடியாது.  செட்டியாருடைய பெயர் மறைந்து விட்டதே என்பதற்கு ஆக நாம் இதைப் பெரிதாக்க வரவில்லை.  இதன் கருத்து என்ன என்பதைப் பொது மக்கள் உணர வேண்டுமென்பதே நமது நோக்கம்.  

சீனிவாசபுரம், தாசில் சீனிவாசபுரம், முனிசீப்பு சீனிவாசபுரம், சிவகாமிபுரம், ராஜகோபாலபுரம் என்பது  100 கணக்கான அய்யர், அய்யங்கார், ஆச்சாரியார், சாஸ்திரி வீதிகள் இருக்க ஒரு பார்ப்பனரல்லாத பிரபலஸ்தருடைய அதுவும் சாகும் வரை 30 வருட காலம் கவுன்சிலராய் இருந்தவரின் பெயர் ஒரு வீதிக்கு இருந்ததை மாற்றி அதற்குப் பதிலாக -  ஒரு பார்ப்பனர் பெயரைக் கொடுப்பது என்றால் அதுவும் ""ஜனநாயகத்தின் பேரால் அமைக்கப்பட்ட ஒரு ஸ்தாபனத்தின் மெஜாரிட்டி ஓட்டைக் கொண்டு செய்யப்படுகின்ற காரியம்'' என்பதே இப்படி இருக்கும்படியாய் இருந்தால் இனி அவர்களது ஆட்சியுள்ள ஸ்தாபனங்களில் நம் மக்கள் கதி என்ன ஆகும் என்று சொல்ல வேண்டுமா?  என்று கேட்கின்றோம்.  இந்த காரியம் இதுவரை பார்ப்பனர்கள் செய்து வந்த கொடுமைகளில் எல்லாம் மிக மிக கொடுமையான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும்.  இனி இந்த பார்ப்பன ஆதிக்கத்தால் என்ன ஆபத்து நாம் எதிர்பார்க்க வேண்டியது பாக்கி இருக்கிறது என்று கேட்கின்றோம்.

 - குடிஅரசு, 07.08.1938

தென் இந்திய ரயில்வே ஸ்டே­ன்களில் சாப்பாட்டு விடுதிகள்

இதைப் பற்றி "குடியரசு' பத்திரிகையில் இதற்கு முன் இரண்டொரு தடவை எழுதி இருக்கிறோம்.

தென் இந்திய ரயில்வே ஆலோசனைக் கமிட்டி யாரும் ரயில்வே   அதிகாரிகளுக்கு இதைப் பற்றி பல ஆலோசனைகள் சொன்னார்கள்.  பிராமணாதிக்கம் நிறைந்த தென்னிந்திய ரயில்வே கம்பெனிக்கு யார்தான் சொல்லி என்ன பிரயோஜனம்?

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டே­னில் உள்ள இந்தியர் சாப்பாட்டு விடுதியை நாம் இவ்வாரம் பார்க்க நேர்ந்தது.  அங்கு மாடியின் மேல் கட்டப்பட்டுள்ள இடத்தில் சமையல் செய்யும் பாகம் போக பாக்கியிடத்தில் நாலில் மூன்று பாகத்தைத் தட்டி கட்டி மறைத்து பிராமணர்களுக்கென்று ஒதுக்கி வைத்து விட்டு, நாலில் ஒரு பாகத்தை "சூத்திரர்', "பஞ்சமர்', "மகமதியர்', "கிறிஸ்தவர்', "ஆங்கிலோ இந்தியர்' என்கின்ற பிராமணரல்லாதவருக்கென்று ஒதுக்கி வைத்து, அதிலேயே எச்சிலை போடுவதற்கும், கை கழுவுவதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் விளக்குமாறு, சாணிச்சட்டி, கூடை முறம் வைப்பதற்கும், எச்சில் பாத்திரம், சமையல் பாத்திரம் கழுவுவதற்குமாக ஏற்பாடு செய்யப்பட்டு, இவ்வளவு அசிங்கங்களுக்கும் இந்த இடமே உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.  இவைகளைப் பற்றி யாராவது கேட்டால், கேட்பவர்களை வகுப்பு துவே­த்தைக் கிளப்புகிறார்கள்.  இது மிகவும் அற்பத்தனமானது என்று நமது பிராமணர்கள் சொல்லுகிறார்கள், எழுதுகிறார்கள்.  அத்தோடு மாத்திரமல்ல.  அவர்கள் தயவில் பிழைக்கும் பிராமணரல்லாத பத்திராதிபர்களும் கூட ஒத்துப் பாடுகிறார்கள்.  ரயிலில் பிரயாணம் செய்து ரயில்வே கம்பெனிக்குப் பணம் கொடுக்கும் ஜனங்கள் பெரும்பாலும் எந்த வகுப்பார்? 

 அவர்களின் எண்ணிக்கை யயன்ன?  நூற்றுக்கு தொண்ணூற்றேழு பேர் பிராமணரல்லாதாராயும் நூற்றுக்கு மூன்று பேர் பிராமணர்களாயிருந்தும் உள்ள இடத்தில் நூற்றுக்கு எழுபத்தைந்து பாகத்தை அவர்களுக்கு எடுத்துக் கொண்டு, நூற்றுக்கு இருபத்தைந்து பாகத்தை நமக்குக் கொடுத்திருப்பதோடு அதிலேயே எச்சிலை, சாணிச்சட்டி, விளக்குமாறு முதலியவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்றால் இவர்கள் கைக்கு ராஜீயபாரம் வந்துவிட்டால் இந்தப் பிராமணர்கள் பிராமணரல்லாதாருக்கு எங்கு இடம் ஒதுக்கி வைப்பார்கள்?  கக்கூசுக்கு பக்கத்திலாவது ஒதுக்கி வைப்பார்களா?  என்பதை ""உரிமை பெரிதா, வகுப்பு பெரிதா'' என்று பொய் வேதாந்தம் பேசி வயிறு வளர்க்கும் ""உத்தம தேசபக்தர்களை'' வணக்கத்துடன் கேட்கிறோம்.

- குடிஅரசு, 06.06.1926

இரயில்வேக்களில் உள்ள ஓட்டல்களில் பிராமணர்களுக்கு வேறு ஒரு தனி இடம்

இரயில்வேக்களில் உள்ள ஓட்டல்களில் பிராமணர்களுக்கு வேறு ஒரு தனி இடம், பஞ்சமர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்து பார்ப்பனரல்லாதார்கள் என்பவர்கள் எல்லோருக்கும் ஒரே ஒரு தனி இடமுமாக இரண்டு பிரிவாக பிரித்திருக்கிறார்கள்.  இரயில்வே ஸ்டே­ன்களில் பார்ப்பனர்கள் இறங்கினால், அவர்கள் எவ்வளவு கேவலமானவர்களாக இருந்தாலும் எல்லோரும் சமையலறைக்குள் சென்று நன்றாக புதிதாகச் சூடுடன் உடனே சாப்பிட்டு விட்டு சீக்கிரம் வண்டிக்கு வந்துவிடுகிறார்கள்.

பார்ப்பனரல்லாதார் நிலைமையோ எவ்வளவு மேன்மையாக இருந்தாலும் அவன் வெளி மண்டபத்தில் பலகாரத் தட்டத்துக்கு எதிரில் கூட்டமாக நின்றுகொண்டு சாமி!  சாமி!  என்று காட்டுமிராண்டி ஜனங்கள் திருவிழாக் காலங்களில் கோவிலில் விபூதிக்கு அலைவது போல் ஆளுக்காள் நெருக்கிக் கொண்டு அவதிப்பட்டு ஆறிப்போன கழிபட்ட பதார்த்தங்களை அரைகுறையாய் வாங்கி அவசர அவசரமாய்த் தின்றது.  பாதி, தின்னாதது பாதியுமாய் விட்டுவிட்டு ஓட வேண்டியதாய் இருக்கிறது.  ரயில்வே ஓட்டல்களில் சாப்பாடு போடுவதும் நீட்டிக்கொண்டே இருந்துவிட்டு வண்டி புறப்படும் சமயம் இலை போடுவதும் சாப்பிட வரும் ஆட்கள் அவதி அவதியாய் அரை வயிறு கூட நிறைய சாப்பிட முடியாமல் பணம் கொடுத்து விட்டு ஓடுவதுமாய் இருக்கிறது.  ஊருக்குள் 3 - அணா ஆனால் ரயிலில் 4 - அணா வீதம் கொடுக்க வேண்டி இருக்கிறது.

இதைப் பற்றி ரயில்வே அதிகாரிகளுக்கு எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சிறிதும் செவிசாய்க்கவே இல்லை.  இரயில்வே கம்பெனியாருக்கு ஒரு அகம்பாவம் இருந்து வருகிறது.  அதென்னவெனில், நம்மைத் தவிர இவர்களுக்கு (பிரயாணி களுக்கு) வேறு கதி என்ன?  என்கின்ற ஆணவம் ஒன்று.  

பத்திரிகைக்காரர்களுக்கு விளம்பரம் கொடுப்பது என்கின்ற எலும்புகளைப் போட்டுவிட்டால், அதன் பேரால் அவர்களுக்குக் கப்பம் கட்டிவிட்டால் நாம் எப்படி, நடந்தாலும் வெளிக்கு வராது என்கின்ற தைரியம் இரண்டு.

மற்றும் அரசாங்கம் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.  இரண்டும் ஒரே ஜாதி என்பது மாத்திரமல்லாமல் பார்லிமெண்டு மெம்பர்கள் முதல் ரயில்வே கம்பெனிக்குப் பங்குக்காரர்கள் தானே என்கின்ற சலுகை முதலிய காரியங்களோடு ஒரு தனிப்பட்ட பிரயாணி தனது கஷ்டத்துக்கு எப்படி சமாதானம் தேடிக் கொள்ள முடியும் என்கின்ற கவலையற்ற தன்மை ஆகியவைகள் சேர்ந்து இரயில்வே கம்பெனியாரை இக்கஷ்டங்களைக் கவனிக்கச் செய்யாமல் செய்து வருகிறது.

மற்றொரு நாடகம் என்னவென்றால், இரயில்வே பிரயாணிகள் சங்கம் என்று ஒரு போலிச் சங்கம்;  அதற்கொரு தலைவர்;  அவருக்கொரு கவுரவ உத்தியோகம்;  அவர்கள் சொந்தக்காரர் களுக்கு இரயிலில் சம்பள உத்தியோகம்;  வேறுபல சலுகை.  இவை எல்லாம் சேர்ந்து கம்பெனியாருக்கு ஒரு நற்சாட்சிப் பத்திரம்.

இவ்வளவையும் சகித்துக் கொண்டு, ரயில் பிரயாணம் செய்து இரயிலுக்கு பணம் கொடுப்பவர்கள் பார்ப்பனரல்லாதார்.  ஆனால் இரயிலில் 50,100, 200 ரூ. சம்பளமுள்ள பெரிய உத்தியோகங்கள் கொடுப்பது 100க்கு 99-பார்ப்பனர்களுக்கே, 20ரூ. 30ரூ. உத்தியோகங்கள் கூட எல்லோரையும் விட 100க்கு 90 பார்ப்பனர்களுக்குத்தான் கொடுக்கப்படுகின்றன.

- குடிஅரசு, துணைத் தலையங்கம், 02.02.1936

செய்யக்கூடாது


பிராமணன் கீழான தொழிலைச் செய்த போதிலும் பயிரிடும் தொழிலை (உழுவதை) கண்டிப்பாய் செய்யக்கூடாது.  அதைச் செய்யாவிட்டால் ஜீவனத்திற்கு மார்க்கமில்லை என்கின்ற காலத்தில் 
அந்நியனைக் கொண்டு செய்விக்கலாம். 
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 83) 

இரும்புக் கலப்பையும் மண்வெட்டியையும் கொண்டு பூமியை வெட்ட வேண்டியதாகும்.  
ஆகையால் பிராமணர் உழுது பயிரிடுதல் கூடாது என்பதாகும். 
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 84)

தாழ்ந்த ஜாதியான் மேலான ஜாதியானின் தொழிலைச் செய்தால் அவனுடைய பொருள் முழுமையும் பிடுங்கிக்கொண்டு அவனையும் நாட்டைவிட்டு அரசன் உடனே விரட்டிவிட வேண்டும். 
-(அத்தியாயம் 10, ஸ்லோகம் 96)

சூத்திரனுக்கு சமஸ்காரங்கள், ஓமம் வளர்த்தல் முதலியவைகளுக்கு உரிமை கிடையாது. 
-(அத்தியாயம் 10, ஸ்லோகம் 96)

சூத்திரன் எவ்வளவு தகுதியுடையவனாயினும் தன் ஜீவியத்துக்கு அதிகமாக பொருள் சம்பாதிக்கக்கூடாது.  அப்படிச் சம்பாதித்தால் அது பிராமணனுக்கு இம்சையாக நேரும்
- (அத்தியாயம் 10, ஸ்லோகம் 129)

சூத்திரனுக்கு யாகாதி கர்ம சம்பந்தமில்லை.  ஆதலால் அவன் வீட்டிலுள்ள செல்வத்தை பிராமணன் தாராளமாக வலுவினாலும் கொள்ளலாம். 
 -(அத்தியாயம் 11, ஸ்லோகம் 13)

மனு 10-வது அத்தியாயம் 52 முதல் 57-வது ஸ்லோகம்

திராவிடன் பிணத்தின் துணியையே உடுக்க வேண்டும்.  உடைந்த சட்டியில் அன்னம் புசிக்க வேண்டும்.  உலோகப் பாத்திரங்களை உபயோகிக்கக் கூடாது.  இரும்பு, பித்தளை ஆகியவைகளால் செய்யப்பட்ட நகைகளையே அணிய வேண்டும்.  இவர்கள் ஜீவனத்துக்காக எப்போதும் வேலை தேடிக் கொண்டே திரிய வேண்டும்.

நல்ல காரியம் நடக்கும் போது இவர்களைப் பார்க்கக் கூடாது.  இவர்களோடு பேசக் கூடாது.  

இவர்களைத் தங்கள் ஜாதிக்குள்ளாகவே மணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்த வேண்டும்.  இவர்களுக்கு நேரே எதுவும் கொடுக்கக் கூடாது.  உடைந்த பாத்திரத்தில் அன்னம் போட்டு வைக்க வேண்டியது.  ஊருக்குள் இரவில் சஞ்சரிக்க விடக் கூடாது.

    (மனு 10-வது அத்தியாயம் 52 முதல் 57-வது ஸ்லோகம்)  

மனு 10-வது அத்தியாயம்


ஜாதி தர்மம் தவறிய கலப்பினால் பிறப்பவர்களால்தான் தோல் வேலை செய்யும் (சக்கிலி) ஜாதி.

 பிணத்தின் துணியைப் பிடித்துக் கொள்கிறவர்களும், எச்சில் சாப்பிடுகிறவர்களுமான பறையர்  ஜாதி.

    (மனு 10-வது அத்தியாயம் 44-வது ஸ்லோகம்)  

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...