1. அய்யப்பன் பிறந்த கதை அறிவுக்குப்
பொருந்துமா?
2. ஆணும், ஆணும் சேர்ந்தால்
(அரியும்-அரனும்) பிள்ளை பிறக்குமா?
3. ஆணும், ஆணும் உடல்
உறவு கொள்வது சட்டப்படி குற்றமல்லவா?
4. விஷ்ணுவின் கையில் பிறந்ததால் ‘கையப்பன்’
என்று பெயர் பெற்று அது
மருவி ‘அய்யப்பன்’ என்றாயிற்று என்ற கதை உண்மையா?
5. காட்டிலே திரிந்து கொள்ளையிட்ட அவனுக்குப் பயந்து மக்கள், “அய்யோ!
அப்பா!” என்று கூவி, ஓடி
அதனால் அக்கொள்ளை யனுக்கு ‘அய்யப்பன்’ என்று பெயரானது என்ற
கதையும் உண்மையா?
6. ஒருவனுக்கு ஒரு கதை - வரலாறு
ஒன்றுதான் இருக்கலாம்; இருக்க வேண்டும்; அதுதான்
முறை - வழக்கு; ஆனால், அய்யப்பனுக்குப்
பலகதைகள் - புராணங்கள் இருக்கின்றனவே! இது ஏன்? இதில்
எது உண்மை?
7. கொள்ளையிட வசதியாக அவன் ‘கருப்புடை’
அணிந்தான்; அக்கருப்புடையை நீங்கள் அணிவது முறையா?
8. ‘சாமியே சரணம்’ என்று
கூறும் பக்தர்களே உங்கள் பேருந்துகள் கரணம்
அடிப்பது ஏனய்யா?
9. பொதுவாகப் பேருந்துகள் விபத்துக்குள்ளாகும் செய்திகளை விட அய்யப்ப பக்தர்கள்
செல்லும் பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் விபத்துகளைச்
சந்திப்பது ஏன்?
10. ‘கல்லும், முள்ளும் காலுக்கு மெத்தை’ என்போரே! கல்லும்
முள்ளும் பரப்பிய பாதையில் காலில்
செருப்பு இல்லாமல் ஒரு கிலோமீட்டர் தூரம்
நடக்கத் தயாரா?
11. காலால் நடந்து செல்லாமல்
‘குளுகுளு சொகுசு’ப் பேருந்தில்
செல்வது ஏன்?
12. ‘சபரிமலை சென்று வந்தால்
பாவம் தொலையும் என்கிறீர்களே! அப்படி என்றால் நீங்கள்
என்ன பாவமூட்டைகளா?
13. ஒரு முறை சென்றவர்
அத்துடன் நிற்காமல் மறுபடியும் செல்வது ஏன்? நீங்கள்
என்ன தொடர்ந்து பாவம் மூட்டைகளா?
14. நீங்கள் தொடர்ந்து பாவம்
செய்வீர்கள்; உங்கள் அய்யப்பன் அப்பாவங்களை
எல்லாம் தொடர்ந்து போக்க வேண்டும் என்றால்,
இது என்ன நியாயம்? அப்படிச்
செய்து கொண்டிருந்தால் பாவம் செய்யாமல்தான் இருப்பது
எப்போது?
15. சபரிமலைக்குப் போய் உபரியாக அவமானம்
தேடலாமா?
16. ‘அனைத்தும் ஆண்டவன் செயல்’ என்று
கூறும்போது ‘பாவம்’ செய்தது நீயா?ஆண்டவனா? அல்லது செய்வித்தது ஆண்டவனா?
அன்றியும் பாவச் செயல் என்றுதான்
ஒன்று உண்டா?
17. ‘ஆண்டவன் உன்னை ‘பாவம்’
செய்ய வைத்து விட்டு பிறகு
ஏன் ‘பாவ மன்னிப்பு’ வழங்க
சபரிமலைக்கு அழைக்கவேண்டும்? ‘பாவம்’ செய்யவிட்டு பிறகு
மன்னிப்பும் அளிப்பது என்பது வீண் வேலையல்லவா!?
ஒரு வேலைக்கு இருவேலை ஏன்?
18. ‘சர்வஞானி’ என்னும் ஆண்டவன் அய்யப்பன்
இப்படி முட்டாள் தனமான வேலைகளைச் செய்யலாமா?
19. ‘எங்கும் நிறைந்திருப்பவன் இறைவன்’
என்று கூறும் பக்தர்களே! உங்கள்
அய்யப்பன் தமிழ்நாட்டில் உன் வீட்டில் இல்லையா?
கேரளாவில் - சபரிமலையில் மட்டும் தானா இருக்கிறான்?
20. சபரிமலைக்குச் செல்லும் தமிழ் அன்பர்களே! ‘தமிழ்க்
கடவுள்’ முருகன் உங்களுக்குச் செய்த
துரோகம்தான் என்ன??
21. ‘முருகு’ என்றால் அழகு;
முருகன் என்றால் அழகன் என்று
கூறும் தமிழ்ப் பக்தர்களே! இந்த
அழகிய கடவுள் முருகன் இருக்க
அசிங்க ஆபாச அய்யப்பன் அவசியம்தானா?
22. ‘சக்தியுள்ள கடவுள் அய்யப்பன் தான்’
என்றால் தமிழ்நாட்டுக் கடவுள்கள் சக்தியற்றதாகிவிட்டதா?
23. ‘தமிழ்க் கடவுள்’ ‘முருகன்’
அண்ணனைவிட ‘தம்பி’ அய்யப்பன் என்ன
அவ்வளவு சக்தி வாய்ந்தவனா?
24. அய்யப்பன் கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்தானமே
‘அருள்தரும் அய்யப்பன்’ என்ற பெயரில் வியாபார
ரீதியாகத் திரைப்படம் தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில் அய்யப்பன் மலைக்குச்
சென்ற ஒரு பக்தனைக் கொல்ல
சதி நடக்கும்போதெல்லாம் அய்யப்பன் அந்தப் பக்தனைக் காப்பாற்றுவதாக
பல்வேறு காட்சிகள்! கற்பனையில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில்தான் இவை எல்லாம் காட்ட
முடிகிறதே தவிர உண்மையில், வாழ்க்கையில்
அய்யப்ப பக்தர்களுக்கு ஏற்படும் இன்னல்களை எங்கேயிருந்தாவது அய்யப்பன் வந்து நீக்கியதுண்டா?
25. ‘அய்யப்பன்’ என்ற இதே திரைப்படத்தில்,
மலைகளிலே சபரிமலைக்கு ஈடான மலை உண்டா?
தெய்வங்களிலே அய்யப்பனுக்கு ஈடான தெய்வம் உண்டா?
என்று பாடுகின்றனரே? அப்படி என்றால் மற்ற
மலைகள், தெய்வங்கள் எல்லாம் சபரிமலைக்கும் அய்யப்பனுக்கும்
மட்டமானதா? தெய்வங்களில் கூட உயர்வு-தாழ்வு
உண்டா?
26. மக்களிடம் பக்தி போதையை பெருக்கி
அதன்மூலம் அவர்களது அறிவையும், பொருளாதாரத்தையும் சுரண்ட வேண்டும் என்ற
கெட்ட எண்ணத்தோடு தேவஸ்தானமே ‘அருள்தரும் அய்யப்பன்’? என்ற பொய்யான கற்பனைகளைச்
சோடித்து படம் எடுப்பதை நாகரிகமான
அரசாங்கம் அனுமதிக்கலாமா?
27. திருப்பாற்கடலில் அமுதம் கடைந்தெடுக்கப்பட்டபோது ‘அசுரர்’களை
வஞ்சித்து ஏமாற்றும் நோக்கத்தோடு விஷ்ணு, மோகினிப் பெண்
வேடம் இட்டபோது சிவன் அவனைக் கண்டு
மோகித்து ஒரு தேக்கு மரத்தினடியில்
விஷ்ணுவுடன் ‘உடல் உறவு’ கொள்ள,
சமாளிக்க முடியாமல் விஷ்ணு வயிறு குமட்டி
வாந்தி எடுக்க அய்யப்பன் பொத்தென்று
வந்து விழுந்தான் என்றும், இந்நிகழ்ச்சியைப் பிரம்மன் பார்த்துக் கொண்டிருந்தான் என்றும், மேலும் இந்நிகழ்ச்சியை சிவனே
பார்வதியிடமும், ரிஷிகளிடமும் விவரித்துக் கூறினான் என்றும் கூறுகிறது ‘பாகவதம்’.
பக்தர்களே! இதை அறிவுலகம் ஏற்குமா?
28. ‘பம்பா தீர்த்தம்’ பாவத்தை
போக்குமா? ‘அது குளிப்பதற்கே அருகதையற்ற
தண்ணீர்’ என்று அறிவியல் மேதைகள்
ஆராய்ந்து அறிக்கைவிட்டது தெரியுமா?
29. அய்யப்பன் உங்கள் பாவத்தைப் போக்குவது
உண்மையானால் நீங்கள் நோய் ஏற்பட்டு
மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்வது ஏன்?
30. ‘அய்யப்பனிடம் நீங்கள் உண்மையான நம்பிக்கை
வைத்திருந்தால் மருத்துவரிடம்’ செல்லலாமா? மருத்துவரிடம் செல்பவர் அய்யப்பனை நம்பலாமா? ஏன் இந்த ‘இரட்டை
வேடம்’?
31. ‘சீசனுக்கு சீசன்’ வரும் நோய்
போல வந்துள்ள ‘அய்யப்ப சீசன் நோய்’
அவசியம்தானா?
32. சீசனில் மட்டும்தான் அய்யப்பனுக்கு
‘சக்தி’ உண்டா? மற்ற காலங்களில்
‘சக்தி’ இல்லையா?
33. சீசனில் மட்டும் செல்லும்
பக்தர்களே! மற்ற காலங்களில் போவது
இல்லையே ஏன்? மற்ற சீசனில்
பாவம் செய்ய இங்கேயே இருந்து
விடுகிறீர்களா?
34. அய்யப்பன் பிறந்தான் என்றால், இறந்தது எப்போது?
35. அய்யப்பன் பிறந்த கதை கணக்கில்
அடங்குமா?
36. ‘ஆதி - அந்தம் இல்லாதவன்
இறைவன்’ என்ற தத்துவத்திற்கு இவ்வையப்பனின்
கதை பொருந்துமா?
37. ‘சாமியேய்... சரணம் அய்யப்பா’ என்று
தொண்டை கிழியக் கத்துபவர்களே! உங்கள்
அய்யப்பன் என்ன செவிடனா?
38. கடவுளை வணங்குவது என்றால்,
அமைதியாக அய்ம்புலன்களையும் அடக்கி மனதை ஒருமுகப்படுத்தி
வணங்கவேண்டும் என்று பெரியவர்கள் கூறியிருக்க,
நீங்கள் இப்படி கூச்சல் போட்டு
உங்களையும் பாழ்படுத்திக் கொண்டு மற்றவர்களுக்கும் தொல்லை
கொடுக்கலாமா?
39. உங்கள் கூச்சல் பள்ளிப்
பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குகிறது. நோயாளிகளுக்குத் துன்பம் தருகிறது. உழைத்துவிட்டு
அலுத்துச் சலுத்து வந்து படுத்து
அயர்ந்து தூங்க நினைக்கும் தொழிலாளி
களுக்குத் தொல்லை தருகிறது என்பதை
நீங்கள் உணர்வீர்களா?
40. அறிவீனக் கற்பனை அய்யப்பனை நாடலாமா?
41. சபரிமலை செல்ல 40 நாட்கள்
விரதம் இருப்பதால் உடல் தூய்மை உள்ளத்
தூய்மை ஏற்படுவதாக உரைக்கும் பக்தர்களே! ஆண்டில் 40 நாட்கள் மட்டும் தூய்மையாக
இருந்தால் போதுமா? ஆண்டு முழுவதும்
தூய்மையாக ஒழுக்கமாக இருக்கவேண்டாமா? 40 நாட்கள் போக மீதி
நாட்கள் ஒழுக்கம் கெட்டு இருக்கிறீர்களா?
42. ‘40 நாட்கள் விரதம்’ இருக்கும்போது
சமத்துவம் ஏற்படுகிறது. ஜாதி, மத வித்தியாசம்
பாராமல் அனைவரையும் சமமாக மதிக்கிறார்கள்” என்று
கூறும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட தோழர்களே! 40 நாட்களுக்கு மட்டும் இது நிகழ்ந்தால்
போதுமா? ஆண்டு முழுவதுக்கும் உங்களுக்கு
இந்த அய்யப்பனால் சம உரிமை, சம
மரியாதை வாங்கித்தர இயலுமா?
43. 40 நாட்கள் மரியாதை தரும்
மேட்டுக்குடி மக்கள் மற்ற நாட்களில்
உங்களுக்கு அதேபோல மரியாதை தந்து
மதித்து வீட்டினுள் அழைத்து விருந்து படைப்பார்களா?
44. உங்களுக்கு ஆண்டு முழுவதும் மரியாதை
கிடைக்க வேண்டுமானால் கடவுள், மத, ஜாதி
போதைகளை மறந்து பகுத்தறிவுவாதிகளாக மாறினால்
அல்லவா கிடைக்கும்?
45. உங்கள் ஜாதி இழிவுக்குக்
காரணம் உங்கள் ‘மதம்’; உங்கள்
மதத்திற்குக் காரணம் இந்தக் ‘கடவுள்’;
அப்படி இருக்க இந்தக்கடவுளை நம்பிக்கொண்டு
விரதம் இருந்து சபரிமலைக்குச் சென்று
கொண்டிருக்கும் வரை உங்களுக்கு எப்படி
உண்மையான மரியாதை கிடைக்கும்?
46. சபரிமலை சென்று திரும்பிய
பக்தர்கள் கஞ்சா, அபின் போன்ற
போதைப் பொருள்களைக்கடத்தி வந்ததனால் காவல் துறையினரால் கைது
செய்யப்பட்டனர் என்று செய்தித் தாள்களில்
அடிக்கடி செய்தி வருகிறதே! இதுதான்
உங்கள் ஒழுக்கத்தின் இலட்சணமா?
47. ‘ஒழுக்கமுள்ளவன் கடவுளை வணங்கத் தேவையில்லை’
என்று பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட அறிஞர் வால்டேர் கூறியிருப்பது
தெரியுமா உங்களுக்கு?’
48. ‘இருமுடி’ என்ற பெயரில் தமிழ்நாட்டுப்
பொருள்கள் கடத்திச் செல்லப்படலாமா?
49. ‘இருமுடி’ என்ற பெயரில் பல
அரிய உணவுப் பொருள்களைக் கொண்டு
சென்று வீணடிக்கலாமா?
50. நம் நாட்டில் பல
ஆயிரக்கணக்கான குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல்
பட்டினியில் வாடும்போது இப்படி சிறந்த உணவுப்
பொருள்களைக் கொண்டு சென்று கொட்டி
வீணடிக்கலாமா?
51.
அய்யப்பப் பக்த தமிழர்களே! வீணாகக்
கடலில் கலக்கம் தண்ணீரை ஒரு
சொட்டுக்கூட தமிழகத்துக்கு விடமாட்டேன் என்கிற கேரளாவுக்கு பக்தியின்
பெயரால் கொட்டிக் கவிழ்க்கும் செல்வம் கொஞ்சமா? நஞ்சமா?
52. தமிழ்நாட்டுக் ‘கடவுள்’கள் பல
இருக்கும்போது இந்த மலையாள நாட்டு
ஆபாச அய்யப்பன் உமக்கு எதற்கு?
53. சபரிமலைக்குச் செல்லும் பக்தர்களே! தமிழ்நாட்டுக் ‘கடவுள்’கள் எல்லாம்
வெளிநாட்டுக்கு உல்லாசப் பயணம் சென்றுவிட்டனவா? அல்லது
செத்துவிட்டனவா?
54. அறிவீனத்தின் மொத்தக் குத்தகையல்லவா ஆபாச
அய்யப்பன்?
55. ஆபாச அய்யப்பன் கையப்பனா?
மெய்யப்பனா? பொய்யப்பனா?
56. அய்யப்பன் தனக்குக் கோயில் கட்டச் சொல்லி
கனவில் வந்ததாகக் கூறுகிறீர்களே! வீடில்லா ஆயிரக்கணக்கான ஏழைகளுக்கு வீடுகட்டக் கூறக்காணோமே’ ஏன்?
57. ‘சர்வ சக்தி’ படைத்த
அய்யப்பன் தனக்குத்தானே கோயில் கட்டிக் கொள்ளாதது
ஏன்?
58. சென்ற சில ஆண்டுகளுக்கு
முன் (1951) தன் கோயில் தீப்பற்றி
எரிந்தபோது அதைத் தடுத்து நிறுத்தாமல்
அய்யப்பன் சக்தி எங்கே போயிற்று?
59. அய்யப்பன் சபரிமலையில் மட்டும்தான் இருப்பது உண்மையானால் சென்னை அடையாறில் அதே
சபரிமலை போல ஒரு மாதிரி
(டூப்ளிகேட்) கோயில் கட்டி இருப்பது
ஏன்? இது ஒரு குட்டிக்
கொள்ளைக்கா?
60. தன்னை ‘தரிசிக்க’ வரும்
பக்தர்களை விபத்தில் இருந்து காக்க வக்கற்ற
அய்யப்பன் ஒரு கடவுளா?
61. சென்ற ஆண்டு கடுமையான
மழை பெய்து அய்யப்பன் கோயிலுக்குச்
செல்லும் மலைப்பாதையில் ஏராளமான பக்தர்கள் வழுக்கி
விழுந்ததால் 6438 பக்தர்கள் கால் உடைந்து காயம்
அடைந்து பம்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனரே!
தன் பக்தர்கள் வழுக்கி விழுவதைக் காப்பாற்ற
சக்தியற்றவனா அய்யப்பன்?
62. அய்யப்பன் பொய் சரக்கு; சந்தைச்
சரக்கு; ஏனப்பா இந்தச் சரக்கு
நமக்கு?
63. அய்யப்பனுக்கு பெண்வாடையே ஆகாது; குறிப்பாக ‘வீட்டு
விலக்கு’ ஆகும் பெண்கள் அய்யப்பன்
கோயிலுக்கு வரக்கூடாது என்கிறீர்களே! விளக்கு பூஜையில் மட்டும்
வயதுக்கு வந்த பெண்கள் விளக்கு
எடுக்கலாமா?
64. அய்யப்பன் கோயிலுக்குப் பெண்கள் வரக்கூடாது என்பது
சட்டம் - சாஸ்திரம் - சம்பிரதாயம் உண்மையானால் இதில் விதிவிலக்கு ஏன்?
சிறுமிகளும் வயது முதிர்ந்தவர்களும் வருவதை
அனுமதிக்கலாமா?
65. பெண்களை கோயிலுக்கு வர
அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்று சீட்டு போட்டுப்
பார்த்து ‘அனுமதிக்கலாம் என்று சீட்டு விழுந்து
அனுமதிப்பது மட்டும் முறையா? இதை
அய்யப்பன் அனுமதித்தானா? அவன் அனுமதி தேவஸ்தானத்திற்கு
எந்த விதத்தில் வந்தது? தொலைபேசியிலா, கம்பி
இல்லா தந்தியிலா? வானொலியிலா? ஏன் இந்தக் கூத்து?
66. அய்யப்பனை நம்பி கேரளாவுக்குச் செல்லும்
பக்தர்களே! தமிழ்நாட்டுக் கடவுள்களை என்ன செய்யலாம்?’ (மியூசியத்தில்)
பொருள்காட்சிச் சாலையில் வைத்துவிடலாமா?
67. ‘பாவம்’ செய்பவன் பக்தன்;
பாவம் செய்யாதவன் பகுத்தறிவாளன் என்பதை அறிவீர்களா?
68. ‘சாமியே சரணம் அய்யப்பா’
- உனக்கு மரணம் வருவது ஏனப்பா?
69. ‘கடவுளை வணங்குபவன் வாழ்வான்
- என்போரே அய்யப்ப கடவுளை வணங்குபவர்கள்
எல்லாம் ‘பாவம்’ இல்லாமல் துன்பம்,
தொல்லை இல்லாமல் வாழ்கிறார்கள்?
70. ‘கடவுளை நம்பினோர் கைவிடப்படார்’!
என்று நம்பி சபரிமலை செல்லும்
அன்பர்களே! நாம் மேலே கேட்ட
பல கேள்விகள் போல ‘கடவுளால்’ கைவிடப்பட்டு
மரணம் முதற்கொண்டு பல துன்பங்களும் அனுபவிப்பது
ஏன்?
71. சபரிமலை போகும் உங்கள்
பேருந்துகள் கரணம் அடித்து மரணம்
நிகழ்வது சர்வசாதாரண நிகழ்ச்சியாகிவிட்டதால் (அய்யப்ப) கடவுளை நம்பினோர் கைவிடப்படுவர்
என்ற புதுமொழி ஏற்பட்டுவிட்டதே! இதற்கு என்ன சொல்கிறீர்கள்?
72. குன்றுகள்(மலைகள்) தோறும் குமரன்
(முருகன்) இருக்க ஆண்டு தோறும்
சபரிமலைக்கு ஓடுவது ஏன்?
73. அய்யய்யோ! அய்யப்பா! உன் ஆத்தா பேரு
என்னப்பா?
74. “மழித்தலும், நீட்டலும் வேண்டா - உலகம் பழித்தது ஒழித்து
விடின்” என்று திருவள்ளுவர் கூறி
இருக்க, நீங்கள் அய்யப்பனுக்காக தாடி
மீசை வளர்த்துக் கொண்டு காட்டுமிராண்டி போல
இருக்கலாமா?
75. கொச்சியில் இருந்து வெளிவரும் ‘இந்தியன்
எக்ஸ்பிரஸ்’ 18.1.1981 எழுதியது - ‘மகரவிளக்கு’ என்று சொல்லப்படும் வெளிச்சத்தைக்
கடந்த 10 ஆண்டுகளாக உண்டாக்கிய மனிதன் கோபி. இவர்
மின் துறையின் ஜீப் டிரைவர். இவர்
பொன்னம்பலமேடு என்ற இடத்தில் கற்பூரத்தை
பானையில் உற்பத்தி செய்கிறார் என்பதையும் கேரள பகுத் தறிவாளர்கள்
கண்டுபிடித்தனர். ‘இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’
76. சபரிமலையில் பக்தர்கள் தரிசிக்கும் ‘மகரஜோதி’க்கு எந்த
தெய்விகமும் கிடையாது; அது ஒரு புரட்டு;
தானாகத் தெரிகிறது என்று ‘அய்யப்பன்’ சக்தியோடு
முடிச்சுப்போட்டுப் பேசுவது ஒரு மோசடி
- அன்று படத்துடன் 16.1.1982 அன்று ‘பிளிட்ஸ்’ என்ற
ஆங்கில ஏடு அம்பலப்படுத்தியதே! அதற்கு
இதுவரை அய்யப்பன் தேவஸ்தானமோ, எந்த ஓர் அய்யப்ப
பக்தரோ, மறுப்போ, பதிலோ கூறவில்லையே! ஏன்?
77. 1979-ஆம் ஆண்டு இந்த
‘மகரஜோதி’ தோன்றவில்லை! காரணம் ‘கடவுள்’ வேறு
எங்கும் ‘டூர்’ சென்றுவிடவில்லை; கோபி
இந்த வேலையைச் செய்யவில்லை அவ்வளவே!?
78. மற்றும் ஓர்ஆண்டு இந்த
அபூர்வ ‘மகரஜோதி’ ஒரு முறைக்கு பல
முறை தெரிந்ததே! இதற்கும் காரணம் கடவுளின் கவனக்குறைவு
அல்ல; பக்தியை வியாபாரமாக்கும் அயோக்கியனின்
கவனக்குறைவே அன்றி வேறில்லை என்பதையும்
அறிவீரா?
79. கொச்சி ஜனவரி 6-1990 அன்று
ஆண்டுதோறும் சபரிமலை பொன்னம்பலமேட்டில் தெரியும்
‘மகரஜோதி’ திருவாங்கூர் தேவஸ்தான போர்டின் கைவரிசையே தவிர அது ஒன்றும்
சுயமாக -தானாகத் தெரியும் ‘அருள்
ஒளி அல்ல’ என்று கேரள
முதல்வர் ஈ.கே.நாயனார்
இந்தியப் பகுத்தறிவாளர் கழகத்திடம் தெரிவித்தார். இந்தச் செய்திக்கு பொருள்
என்ன? உமது பதில் என்ன?
80. ஒற்றை யானை எதிர்ப்பட்டால்தான்
ஆபத்து; கூட்டமாக வரும் யானைகளால் ஆபத்து
ஏதுமில்லை என்பதை அறிவீர்களா?
81. யானையைப் பார்க்கச் சென்ற பிறவிக் குருடர்கள்
எப்படி தாங்கள் தங்கள் கையால்
தொட்டுத் தடவிப் பார்த்த இடங்களையே
யானை என்று நம்பிக் கொண்டு
வாதிட்டார்களோ! அதுபோல நீங்கள் கருத்துக்
குருட்டுத்தனத்தால் அய்யப்பனைப் பற்றிப் பலபட பேசிக்
கொண்டிருக்கிறீர்களே தவிர உண்மையில் உங்களுக்கு
அய்யப்பனைப் பற்றி ஏதாவது தெரியுமா?
82. நாங்கள் பகுத்தறிவாளர்கள் ‘கடவுள்’
இல்லை; ‘மதம்’ இல்லை; கோயிலுக்குச்
செல்லாதீர்கள் என்று பிரச்சாரம் செய்கிறோம்.
அய்யப்பனின் ஆபாசங்களைப் பற்றிக் கூட்டம் போட்டு
விளக்குகிறோம். “ஆனாலும், பக்தர்கள் பெருகுகிறார்கள் என்றும் ஆண்டுக்கு ஆண்டு
சபரிமலைக்குச் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை குறையாமல் கூடுகிறது’ என்றும் பெருமை அடித்துக்
கொள்ளும் பக்தர்களே! சென்ற ஆண்டு சென்று
பாவத்தைத் தொலைத்த பக்தர்கள் இவ்வாண்டு
செல்லாமல் இருக்க வேண்டாமா? சென்ற
ஆண்டைவிட பொருள்? பக்தர்கள் அதாவது
பாவிகள் பெருகுகிறார்கள் என்றல்லவா பொருள்? அய்யப்பனால் பாவத்தைப்
போக்கப்பட்ட பாவிகள் குறைக்கப்பட்டல்லவா இருக்க
வேண்டும்?
ஆனால், ‘பக்தர்கள்’ - ‘பாவிகள்’ அதிகரித்துக் கொண்டே போவது எதைக்
காட்டுகிறது? அய்யப்பனுக்கு உண்மையில் பாவத்தைப் போக்கி பாவிகளின் எண்ணிக்கையைக்
குறைக்கும் ‘சக்தி’ ஏதுமில்லை என்பதையல்லவா
காட்டுகிறது?
84. ‘சரணாகதி தத்துவம்’, ‘மகாபாவம்
செய்தவராயினும் ‘எனக்கு ஏது கதி’
என்று யாரும் எண்ண வேண்டாம்.
செய்த பாவச் செயலைப் பற்றி
உண்மையில் மனம் உருகித் துன்பப்பட்டு
பகவானைச் சரணடைந்தால் எவருக்கும் நற்கதி உண்டு. ‘சுவாமியே
சரணம் அய்யப்பா’ என்ற புத்தகம் பக்கம்
14-இல் கடைசிப் பத்தியில் ஆசிரியர்
நஜன் என்னும் நடராஜன் என்பவர்
எழுதியுள்ளார். இது உண்மையானால் எவன்
தான் ‘பாவம்’ செய்யாமல் இருப்பான்?
எப்படிப்பட்ட பாவத்தையும் மன்னிக்க பகவான் அய்யப்பன் இருக்கிறான்
என்ற தைரியத்தில் தொடர்ந்து பாவம் செய்வானா? அல்லது
பாவம் செய்யாமல் இருப்பானா? ‘அய்யப்ப வழி பாட்டின்
ஆணிவேர் இந்த ‘சரணாகதி தத்துவம்’
தான். அவனிடம் சகலத்தையும் ஒப்படைத்தபின்
நம்மைக் காப்பாற்ற வேண்டிய முழுப் பொறுப்பும்
அவனுடையதல்லவா?’ இதுவும் மேலே கண்ட
புத்தகத்தில் 17ஆம் பக்கத்தின் கடைசிப்
பத்தி. அய்யப்பன் தத்துவம் புரிகிறதா? பக்தர்கள் அய்யப்பனிடம் ஏன் செல்கின்றனர். இவர்கள்
செய்யும் பாவங்களை எல்லாம் கொடுத்து அய்யப்பனிடமிருந்து
‘பாவமன்னிப்பு’ பெற்றுக் கொள்வர். அவன் அவசியம், கட்டாயம்
பாவமன்னிப்புக் கொடுக்க வேண்டும் என்றால்
இது என்ன? கொடுக்கல் வாங்கல்
வியாபாரமா? இதனால்தான் தந்தை பெரியார் அவர்கள்
‘கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன்’ என்று கூறினார் என்பதை
இப்போது ஒப்புக் கொள்கிறீர்களா? இல்லையா?’
85. சத்திய சந்தனான பந்தள
அரசனுக்கு வளர்ப்பு மகனாக இருந்து, அரசனின்
மனைவிக்குப் பின்னர் ஓர் ஆண்மகன்
பிறந்து வாரிசு உரிமைப் பிரச்சினை
எழுந்து அரசி அய்யப்பனை மணிகண்டனை
தீர்த்துக்கட்டச் சதி செய்து புலிப்பால்
கொணரச் சொல்லி காட்டுக்கு அனுப்ப
மணிகண்டன் காடு சென்று புலிகளையே ஓட்டிக்கொண்டு
வந்தான் என்று கதை கூறுகிறீர்கள்.
‘கடவுள் மகன் காட்டில் இருந்து
‘தேவர்களை’ புலிகளாக ஓட்டிவந்து என்ன பெருமை? இக்காலத்தில்
புலிகளை மட்டும் அல்ல இன்னும்
பல காட்டு விலங்குகளையும் பிடித்து
வந்து சர்க்கஸ் கொட்டகையில் பலவித வேடிக்கை காட்டு
கிறார்களே! அவர்களைவிட உங்கள் அய்யப்பன் என்ன
அவ்வளவு உயர்வானவனா?
86. மணிகண்டன் நித்திய பிரம்மச்சரியன் என்கிறீர்கள்!
மகிஷி என்ற அரக்கியைக் கொலை
செய்யவே மணிகண்டன் அவதரித்தான். காட்டில் அவளுடன் போர் புரிந்து
கொன்று பிறகு சாபவிமோசனம் அளித்தான்
என்கிறீர்கள். அப்போது அவள் இவனை
மணம் புரிந்து கொள்ளக் கேட்டபோது “நான்
நித்திய பிரம்மச்சரியன்”; எனவே உன்னைத் திருமணம்
செய்து கொள்ள இயலாது” என்று
கூறினான் என்று கதை கூறுகிறீர்கள்.
ஆனால், அய்யப்பனுக்கு பூரணா, புஷ்கலை என
இரு மனைவிகள் இருந்தனர் என்ற கதையும் உள்ளதே!
இது என்ன கூத்து? நித்திய
பிரம்மச்சாரி எப்படி ஒன்றுக்கு இரண்
டாக இரு பெண்களை மணந்தான்?
இதுதான் பிரம்மச்சரியத்தின் யோக்கியதையா?
87. காயங்குளத்தில் வாவர் (இயற்பெயர் - செய்தாலி)
என்பவரும் அவர் ஆட்களும் கொள்ளையடிக்கும்
சேதி கேள்விப்பட்டு அய்யப்பன் அவனுடன் போர் புரியச்
சென்று இருவரும் கடுமையான போர் செய்தும் வெற்றி
தோல்வி ஏற்படாத நிலையில் இறுதியில்
இருவரும் தங்கள் நிலையை உணர்ந்து
போரை நிறுத்தி சமாதானம் அடைந்து ‘நீங்கள் எதற்காகக் கொள்ளையடிக்கிறீர்கள்?’
என்று மணிகண்டன் கேட்க, ‘இது கொள்ளையல்லவே!
தருமப்பணி அல்லவா! இருப்பவரிடமிருந்து எடுத்து
இல்லாதவர்களுக்குக் கொடுப்பது அதர்மமா?’ என்று வாவர் கேட்க
அய்யப்பன், ‘உடையவர்கள் மனமாரக் கொடுப்பதுதான் உசிதம்!
இதில் நோக்கம் நல்லதாக இருந்தாலும்
முறை தவறானது; இதை விட்டுவிடுங்கள். தங்கள்
இலட்சியத்தை வேறுவிதமாக அடைய முடியும்’ என்று
கூறினான். வாவர் மனம் மாறி
தான் இஸ்லாம் மதத்தைத் துறந்து,
இந்துவாகவே மாறி விடுவதாகவே கூறினான்.
ஆனால், மணிகண்டன் அதைத் தடுத்து விட்டான்
என்று கதை கூறுகிறீர்கள். ஒரு
சாதாரண மனிதனிடம் சண்டைபோட்டு வெற்றியடைய முடியாதவன் ‘கடவுள்’ ஆவானா? ‘கடவுள்
சக்தி’ இவ்வளவு தரம் தாழ்ந்து
போகலாமா?
88. தான் யார் தலையில்
கை வைத்தாலும், அவர்கள் தீப்பற்றி எரிந்து
சாம்பலாக வேண்டும் என்று வரம் கேட்க;
அதை ஆராய்ந்து பாராமல் அந்த பத்மாசூரனுக்கு
வரம் அளித்த அய்யப்பனின் அப்பன்
பரமசிவன் ஒரு கடவுளா?
89. தன்னையே காத்துக் கொள்ளும்
‘சக்தி’யற்றவனா சிவன்? பின்
திரிசூலம் எதற்கு வைத்திருக்கிறான்? வேர்க்கடலை
தோண்டவா?’
90. பத்மாசூரனுக்கு பயந்து ஓடும் பரமசிவன்
பேடி; ‘கோழை’ இவன் ஒரு
கடவுளா?
91.
பத்மாசூரன் பெரியவனா? பரமசிவன் பெரியவனா?
92. ஓர் அசுரனைச் சமாளிக்க
முடியாத வெத்து வேட்டா சிவன்?
93. பெண் மோகினி வேடமிட்ட
ஆடவனிடம் (விஷ்ணுவிடம்) உடல் உறவு கொள்ளும்
காமவெறியனா சிவன்?
94. பெற்ற மகனை ஒழுங்காக
வளர்க்காமல், கள்ளப்பிள்ளையை குப்பைத் தொட்டியில் போடும் கழிசடைகள் போல
காட்டிலே போட்டுவிட்ட அரியும், அரனும் ஆண்டவர்களா?
95. அய்யப்பன் கதை ஆபாச கழிசடை;
அய்யப்பன் வழிபாடு அறிவின் முரண்பாடு;
அறிவீரா?
96. பம்பாநதியும், கூவமும் ஒன்றுதான் தூய்மையில்;
எனவே கூவத்தில் குளிக்கத் தயாரா?
97. ‘எய்ட்ஸ்’ நோய் அமெரிக்காவில் பிறந்தது
அல்ல அப்பா! அது உன்னுடன்
பிறந்து வளர்ந்ததுதான் அடேங்கப்பா!?
98. சபரிமலை செல்லும் பக்தர்களில்
பலர் விபத்திலும், மாரடைப்பு போன்ற நோய்களிலும் இறந்து
விடுகின்றனர். இதனால், இவர்கள் குடும்பம்
காப்பாற்ற ஆளில்லாமல் ஆதரவற்றஅனாதையாகி விடுகிறது என்று தேவஸ்தானமும் நேஷனல்
இன்ஷுரன்ஸ் கம்பெனியும் சேர்ந்து ஒரு திட்டம் ஏற்படுத்தியுள்ளனர்.
சபரிமலை செல்பவர்கள் ரூ.15 கட்டி இன்ஷுரன்ஸ்
செய்து கொள்ளவேண்டும். இறந்து படும் பக்தர்
குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும்.
இதன் மூலம் தேவஸ்தானமும் இன்ஷுரன்ஸ்
கம்பெனியும், பக்தர்களும் ஓர்உண்மையை தங்களை அறியாமலேயே ஒப்புக்
கொள்கிறார்கள். கடவுள் காப்பாற்றுவார் என்பது
பொய், மனிதன்தான் மனிதனைக் காப்பாற்ற வேண்டும்: தன் கோயிலுக்கு வரும்
பக்தர்களைக் கூட சபரிமலை அய்யப்பன்
காப்பாற்றமாட்டான்: இன்ஷுரன்ஸ் செய்து தானே தன்
குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை
சந்தேகத்துக்கு இடமில்லாமல் திட்டமாக ஒப்புக் கொண்டு விட்டனர்
என்பது விளங்கவில்லையா!? கடவுளின் காப்பாற்றும் சக்தி இவ்வளவு தானா!?
99. நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்கின்றனர்: குற்றவாளிகள் சிறைச்சாலைக்கு செல்கின்றனர். ‘பாவிகள்’ சபரிமலைக்குச் செல்கின்றனர்.
100. பெரிய ‘மெய்ஞ்ஞானிகள்’,
தத்துவமேதைகள் கூறும் கடவுள் தத்துவங்களுக்கு
இவ்வையப்பனும், சிவனும், விஷ்ணுவும் பொருந்துமாறு இருக்கிறார்களா?
நூல் : அய்யப்ப பக்தர்களுக்கு 100 கேள்விகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக