டிப்டி கலெக்டர் பார்ப்பனர் - தாசில்தார் பார்ப்பனர் - மாஜிஸ்திரேட் பார்ப்பனர் - போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்ப்பனர் Š சப்இன்ஸ்பெக்டர் பார்ப்பனர் - முனிசீப்பு பார்ப்பனர், பாங்கி ஏஜெண்டு பார்ப்பனர், இஞ்சினீயர் பார்ப்பனர், ஓவர்சீயர் பார்ப்பனர், ரிஜிட்ரார் பார்ப்பனர், போஸ்ட் மாஸ்டர் பார்ப்பனர், கலெக்டர் ஆபீசில் 100க்கு 90 குமாஸ்தா, தாலுகாபீசில் 100க்கு 95 குமாஸ்தா பார்ப்பனர்கள் போஸ்டாபீசில் 100க்கு 99 பார்ப்பனர்கள், முன்சீப்பு கோர்ட்டில் 100க்கு 100 பார்ப்பன குமாஸ்தாக்கள். 100க்கு 90 பார்ப்பன வக்கீல்கள், மீதி 100க்கு 10 பார்ப்பனரல்லாத வக்கீல்களும், பார்ப்பன - முனிசீப் பூட்சுக்குப் பாலீஷ் போட்டுக் கொடுப்பவர்களாகவே அனேகமாய் இருக்க வேண்டியவர்கள் ஆகிறார்கள். ஆகவே இந்தக் கூட்டத்தார் தான் நம்மை உத்தியோக வேட்டைக் கூட்டம் என்கிறார்கள்.
- குடிஅரசு, தலையங்கம், 14.04.1935
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக