திங்கள், 17 ஜூலை, 2017

கண்காணிப்பு!


சபரிமலைக் கோவிலில் கூடுதல் கண்காணிப்புக் கேமிராக்களைப் பொருத்திட கேரள உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

எதற்காக இந்த ஏற்பாடாம்? பயங்கரவாதி களின் அச்சுறுத்தல். உண்டியல் பணம் எண்ணப்படு வதைக் கண்காணித்தல் உள்ளிட்டவைகளுக்காக இந்த ஏற்பாடாம்.

இதுபோல திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் கண்காணிப்புக் கேமிராக்கள் ஏற்கெனவே பொருத்தப்பட்டுள்ளன.

இவை குறித்து யாரா வது மூளையைப் பயன் படுத்தியதுண்டா? இந்த ஏற்பாடுகள் கடவுளின் சக்தியைக் கேலி செய்வது ஆகாதா? பக்தர்களின் ஒழுக்கத்தைக் கொச்சைப் படுத்துவது ஆகாதா என்பதைக் கொஞ்சம் சிந்திப்பது நல்லது.

நாத்திகர்கள் நையாண்டி செய்கிறார் களே என்று சினம் கொள் ளாமல் ஆறுவது சினம் என்று ஆற்றுப்படுத்தி அவர்களைச் சிந்திக்க வைப்பதுதான் எங்களின் தலையாய நோக்கம்.

தீராத வினையெல்லாம் தீர்த்து வைப்பான் கோவிந் தன் என்று பாட்டுப்பாடி பக்தர்கள் செல்லுகிறார் களே இந்தச் சொற் களுக்கு உள்ளார்த்தமான பொருளும், நம்பிக்கையும் இருந்தால், வழியில் சிறுத்தை அடித்துவிடுமே புலி பாய்ந்து கொன்றுவிடுமே என்ற அச்சம் வர லாமா? அதுவும் அய்யப்பன் புலி மீது சவாரி செய்பவன் ஆயிற்றே!

இதில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தலிலிருந்து பக்தர் களைக் காப்பாற்றவும் இந்த ஏற்பாடாம்.
அய்யப்பனைவிட ஏழு மலையானைவிட தீவிர வாதிகள் அவ்வளவு தீர மிக்கவர்களா? எல்லாம் அய்யப்பன் பார்த்துக் கொள் வான்  ஏழுமலையான் கவனித்துக் கொள்வான்  இந்த ஏற்பாடுகள் எல்லாம் வேண்டாம் வேண்டவே வேண்டாம் என்று அடித்துச் சொல்ல நாட்டில் ஒரே ஒரு பக்தன்கூட இல்லாமற் போய்விட்டானா?

நம்பிக்கைக்கும், நடப்புக்கும் சம்பந்தமில் லாத இதனை நாங்கள் சுட்டிக்காட்டும்போது நாத்தி கர்களை நாக்கில் நரம்பின் றித் திட்டித் தீர்க்கலாமா?

சபரிமலையில் கண் காணிக்க கேமரா என்ற சேதியை வெளியிட்ட தின மலர் (6.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3) பழைய ஒரு தகவலையும் நினைவூட்டி யுள்ளது.

கடந்த மார்ச் மாதம் கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் பணி யில் ஈடுபட்டு இருந்த கோவில் ஊழியர் ஒருவர் ஆயிரம் ரூபாய் நோட்டை வாய்க்குள் திணித்ததை கண்காணிப்புக் கேமரா காட்டிக் கொடுத்துவிட்ட தாம்.

பலே, பலே! பகவானின் பக்கத்தில் இருப்பவர்களின் ஒழுக்கமே இப்படித்தான் இருக்கிறது! பக்தி ஒழுக் கத்தை வளர்க்குமா? எண் ணிப் பாரீர்!

7.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...