தொலைக்காட்சிகள் போட்டிப் போட்டுக்கொண்டு பேய்
- பிசாசு - ஆவிக் கதை களை இறக்கைக் கட்டிப் பறக்கவிடும் நிலையில், கலைஞர் தொலைக்காட்சியில் ரோஸ் மேடம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிதான் வித்தி யாசமாக இருந்தது. சுடுகாட் டிற்குச் சென்று நிரூபிக்கிறேன் என்று சொன்ன மயிலாடுதுறை மந்திரவாதி - பகுத்தறிவுவாதிகளின் சவாலை ஏற்று, இறுதியில் தோல்வியை ஒப்புக்கொண்டார்.
குமுதம் ரிப்போர்ட்டரில் (9.11.2003) ஒரு தகவல் வெளிவந்தது. மயிலாடு துறையையடுத்த எலந்தங்குடி கிராமத்தைப் பற்றியது அது. ஊரே கெட்ட குணம் புடுச்சு ஆட்டுது - செத்துப்போன கருவக்காட்டு உஷாதான் இப்பப்பேயா வந்து தலைச்சன் பிள்ளைகளைக்காவு கேட்டுக் கிட்டு இருக்கா என்பதுதான் அந்தப்புரளி.
இதுகுறித்து நேரடி விசாரணையை (ரிப்போர்ட்) மேற்கொண்டு குமுதம் ரிப் போர்ட் கட்டுரை ஒன்றைத் தீட்டியிருந்தது. சிலரிடம் பேட்டி வாங்கியும் போட்டது.
பேய் பிடிச்ச பொண் ணுங்களுக்கு ரத்தம் என்றால் ரொம்பப் பிரியமாம். உயி ரோடிருக்கும் பேயைப் பிடித்து, அப்படியே அதன் கழுத்தைக் கடித்து, சூடாக ரத்தத்தைக் குடித்துவிடுவார்களாம். அதுபோல ஒரு பெண்ணு ரத்தம் குடிச்ச அடுத்த வினாடி செத்துப் போச்சு இப்படிப் பேய்க் கதைகள் பில்டப் கொடுத்து பரவ ஆரம்பித்துள்ளன என்றும் சிலர் வருத்தத்துடன் சொல்கின்றனர்.
கருவக்காட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர், சூதாட்டக்காரர்கள் கிளப்பி விட்ட புரளி என்றும் சிலர் கூறினர். அதுதான் உண்மை என்று பட்டது என்று குமுதம் ரிப்போர்ட்டரும் கூறி முடித்துள்ளது.
உண்மையிலேயே பேய்,
பிசாசு உண்டா? இதுகுறித்து இங்கிலாந்து நாட்டுக்கார மனோதத்துவம் மற்றும் நரம்பியல் வல்லுநர் பிரைட்லைட் என்பவர் என்ன கூறுகிறார்?
பேய், பிசாசு இருப்பது பற்றி இவர், காந்தவியல் மின்புலம்மூலம் ஆராய்ச்சி நடத்தி, பேய்,
பிசாசு இல்லை என்று உறுதி செய்துவிட்டு, அதை மக்களுக்கு உணர வைப்பதற்காக பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் தற்போது புழக்கத்தில் இல்லாத 800 வருட பழங்காலக் கட்டடம் ஒன்றில் பாதிக்கப்பட்ட வர்களைக் கொண்டு, ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அதில் பேய் மற்றும் பிசாசு பிடித்தவர்கள், தங்களுக்குப்பேய் பிடித்தபோது திடீர் சத்தம் கேட்டதாகவும், இன்னும் ஒரு சிலர் குழந்தை அழுவதுபோல சத்தம் கேட்ட தாகவும், வேறு சிலர் திடீரெனத் தன்னை யாரோ தொட்டுவிட்டு மறைந்துவிட் டது என்றும் கூறினார்கள்.
பேய், பிசாசு இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான காந்த புலம் வெளிப்பட்டிருக்கலாம். மூளையில் சில நரம்புகள் பாதிக்கப்பட்டவர்கள் இந்த இடங்களுக்குச் செல்லும்போது அல்லது அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அந்த இடத்திற்குச் செல்லும்போது வழக்கத்திற்கு மாறான காந்தபுலம் மேற்கூறிய பிரமைகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே, பேயோ,
பிசாசோ அதைச் செய்யவில்லை என்று கூறியதோடு நின்றுவிடாமல் விஞ்ஞானக் கருவிகளுடன் அவர்களுக்கு அதை நிரூபித்தும் காண்பித்தார்.
(தினத்தந்தி, 10.2.2006).
(தினத்தந்தி, 10.2.2006).
அறிவியல் இவ்வாறு கூறுகிறது. இந்த நாட்டில் உள்ள படித்த அமாவாசை இருட்டு அறிவாளர்களோ - ஊடகங்களோ பொய்யை விற்றுப் பிழைப்பு நடத்துகின் றன
- உஷார்!
குறிப்பு: பேரம்பாக்கம் என் னும் ஊரில் சுடுகாட்டில் இருந்த முள்செடியில் பேய் இருந்ததாகப் புரளி கிளம்பிய போது, திராவிடர் கழக மகளிர் அணியினர் அங்கு சென்று அதை வெட்டித் தீயிட்டுக் கொளுத்திக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். (14.4.1991).
25.8. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக