இந்தியாவின் முதல் பெண் மருத்துவராகிய (னுடிஉவடிச) முத்து லட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் இந்நாள் (1968). இன்னொரு சிறப்பும் இவருக்கு உண்டு. உலகளவில் சட்டமன்ற துணைத் தலைவராக வந்த முதல் பெண்மணியும் இவரே!
முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு நலத் திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். அடையாறு அவ்வை இல்லம் அம்மையாரின் புகழுக்குக் கட்டியம் கூறவல்லது.
பெண்கள் அந்தக் காலத்தில் அதுவும் கல்லூரியில் படிக்க வேண்டு மென்றால், அது சாதா ரணமான ஒன்று அன்று. புதுக் கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதி பெற்று கல்லூரியில் சேர்க்கப்பட்டார்.
என்ன ஏற்பாடு? மாணவர் களுக்கும் இந்தப் பெண்ணுக்கும் இடையே ஒரு திரை இருக்கும். ஆசிரியருக்கு மட்டுமே இந்தப் பெண் தெரிவார். இந்தத் திரை களையெல்லாம் கிழித்துத்தான் முத்துலட்சுமி கல்வியின் சிகரத்தை எட்டினார்.
சென்னை மருத்துவக் கல்லூரியிலும் தன்னந்தனியான பெண்ணாகப் படித்துத் தேர்ந்தார் - மாணவர்களின் கேலிக் கூத்துகளுக்கிடையே! அவரின் ஒரே நோக்கு - இலக்கு - மருத்துவப் பட்டதாரியாக ஒளிர வேண்டும் என்பதுதான். ஒரு வருக்கு
ஊக்கமும், உழைப்பும், ஆர்வமும் இருந்தால் வெற்றிக் கனி தானாகத் தேடி வராதா?
மேற்படிப்புக்காக லண்டன் சென்ற சிறப்பும் இவருக்கு உண்டு.
அம்மையார் ஏடு ஒன்றினை நடத்தினார்; அதன் பெயர் ஸ்த்ரி தர்மா என்பதாகும். பெண்கள் பிரச்சினை, சமூக அவலங்கள் எல்லாவற்றையும் ஆய்வு செய்தார். அரசின் நல்ல திட்டங்களை ஆதரித்தும், கேடு பயப்பவைகளை எதிர்த்தும் கட்டுரைகளைத் தீட்டினார்.
நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகப் பெண்களுக்கு வாக்குரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதன் காரணமாக அம்மையார் ஒருமன தாக சென்னை மாநில மேல் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் அதன் துணைத் தலைவ ராகவும் ஒளி வீசினார்.
தேவதாசி ஒழிப்புச் சட்டம், விபச்சார ஒழிப்புச் சட்டம், பெண்களின் திருமண வயது உயர்த்தும் சட்டம் இவற்றிற்காகப் பெரும் குரல் கொடுத்தார். குறிப் பாக தேவதாசி ஒழிப்புச் சட்டம் (பெண்களுக்கு பொட்டுக்கட்டி கோவிலுக்கு விடுவதை ஒழித்த சட்டம்) அம்மையாரை என்றென் றும் நினைவு கூரச் செய்வதாகும்.
இந்தச் சட்டத்தை அம்மையார் கொண்டு வந்தபோது, இது,
தெய்வ காரியத்தில் தலையிடுவ தாகும் - இந்த ஜென்மத்தில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் அவர் களுக்கு மோட்சம் கிடைக்கும் என்று சத்தியமூர்த்தி அய்யர் வாய் நீளமாகப் பேசினார்.
அப்படியா? இதுவரை எங்கள் ஜாதியினர் மோட்சம் அடைந்தது போதும்; வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யர் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஜென்மத்தில் தேவதாசிகளாக இருந்து அடுத்த ஜென்மத்தில் மோட்சத்தை அடையட்டுமே! என்று போட்டாரே ஒரு வெடிகுண்டு. சத்தியமூர்த்தி அய்யர்கள் சப்தநாடியும் அடங்கிப் போனார்கள்.
இன்னொரு முக்கிய தகவல்: தேவதாசி முறை ஒழிக்கப்பட்டால், கோவிலில் உள்ள பிராமண பூசாரிகளை அகற்றுவதற்கும் போராடுகின்ற நிலைமை உரு வாகிவிடும் என்று சத்தியமூர்த்தி அய்யர் மேலவையில் பேசினார்.
ஆகா! எவ்வளவுப் பெரிய தொலைநோக்கு! சத்தியமூர்த்தி அய்யர் இன்று இருந்தால் அவர் வாயில் சர்க்கரையை அள்ளிப் போடலாமே! (ஆனாலும், அவர் சொன்ன நோக்கம் வேறு!)
தந்தை பெரியாரின் போர்க்குரல், திராவிடர் கழகத்தின் விடா முயற்சி, தி.மு.க. ஆட்சிப் பீடத்தில் மானமிகு கலைஞர் முதலமைச்சர் என்ற நிலையில் அதனையும் நிறைவேற்ற சட்டம் இயற்றப்பட்டு விட்டதே!
22.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி -
3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக