திங்கள், 17 ஜூலை, 2017

அற்புதமா?


வடலூர் வள்ளலார் என்று பெருமதிப்போடும், அன்போடும் போற்றப்படும் இராமலிங்க அடிகள் தொடக் கத்தில் மூடநம்பிக்கைப் பள் ளத்தில் விழுந்தவர்தான். சிறுதெய்வ வழிபாட்டுக் குழியில் சாய்ந்தவர்தான்.

ஆனாலும் ஆறாம் திரு முறை எழுதிய காலத்தில் அவர் தெளிவு பெற்றார். ஆரியத்தின் வேத, ஆகம, வருணக் கொள்ளிகளை அடையாளம் கண்டார். சாடு சாடு என்று சாடினார்.

தமது வாழ்வின் முதற் பகுதி குறித்து பிற்காலத்தில் அவர் எழுதி இருக்கும் முத்துகள் அவர் பகுத்தறிவு ஒளி பெற்றார் என்பதற்கான சான்றுப் பத்திரமாகும்.

நாம் நாமும் முன் பார்த்தும், கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழுஉக் குறியின்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்துவிட்டார் கள்... இதுபோல் சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு, கடைசியாகவள் ளலார் சொல்லுகிறார். அப் பொழுது எனக்கு அற்ப அறிவுதான் இருந்தது - அதனால் நம்பினேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.

இதன் காரணமாகவே பார்ப்பனர்கள் திட்டமிட்டு அவரைத் தீர்த்துக் கட்டினார் கள். வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ..மங்கள முருகேசன் அவர்கள் குறிப்பிடுகிறார்,

வள்ளலார் காலத்தில் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாளராக விளங்கிய கார்ஸ்டின் என்பவர் , புரா ணம், சாத்திரம் முதலிய வற்றை வடலூர் இராமலிங் கனார் கண்டித்ததைப் பொறுக்காத சமயவாதிகள் கற்பூரத்தை இட்டு அவர் எலும்புகூடக் கிடைக்காத வண்ணம் எரித்து விட்ட னர் என்றும் கூறுகிறார்.

உண்மையெல்லாம் இவ்வாறு இருக்க, ஆன்மீக மலர் என்று வெளியிடும் தமிழ்நாட்டு ஏடுகள் சிறிது சிறிதாக இராமலிங்கனார் மீது அற்புதங்களைத் திணித்து, அவரை பார்ப்பனிய வைதீகக் குட்டைக்குள் தள்ளப் பார்ப்பது வெட்கக்கேடு!

கூனன் நிமிர்ந்த அதிச யம் என்னும் தலைப்பில் ஒரு கட்டுக்கதை வெளி யிடப்பட்டுள்ளது. வடலூரில் தைப் பூச விழா நடந்ததாகவும், அதில் அதிர் வேட்டு வெடித்த கூனன் ஒருவன் காயம்பட்டுக் கருகி வீழ்ந்த தாகவும், நீ எழுந்திடுவாய்! எழுந்திடுவாய்! என்று வட லூரார் சொன்னதும், கூனன் முதுகு நிமிர்ந்து புத்தொளி பரவி எழுந்ததாகவும் ஆன்மிக இதழ் கதை விட்டுள் ளது.

எந்த மூடத்தனத்தை வள்ளலார் எதிர்த்தாரோ, அந்த மூடத்தனத்தையே அவர்மீது திணிக்கும் சில்ல றைத் தனத்தை எண்ணிப் பார்ப்பீர்!

28.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...