திங்கள், 17 ஜூலை, 2017

பெல்


இந்தியாவில் உள்ள நவரத்தினங்களுள் ஒன்று பெல் தொழில் நிறுவனம்; ஆண்டுதோறும் இலாபத்தை அள்ளிக் குவிக்கக் கூடியது.

பொதுத் துறை நிறுவ னங்கள் இலாபகரமாக நடைபெறாது; தனியார்த் துறைகள்தான் நாட்டுக்குத் தேவை என்று ஏடெடுத்து எழுதுவோரும் நா சிலம் பத்தைச் சுழற்றுபவர் களும் நாட்டில் உண்டு. அவர்களுக்கு ஆக்க ரீதியான - செயல் வடிவமான பதிலடிதான் பெல் நிறுவ னங்களின் செயற்கரும் செயல்பாடு.

ஒரு தகவல் வந்துள்ளது சத்தீஸ்கர் மாநிலத்தில் நிலக்கரிமூலம் 1200 மெகா வாட்மின்சாரம் தயாரிக்கும் ஆலை ஒன்றினை நிறுவிட பணி ஒப்பந்தம் - பொதுத்துறை நிறுவன மான பாரதமிகு மின் நிலையத்திற்கு (பெல்) அளிக்கப்பட்டுள்ளது.

இதன் மதிப்புறு தொகை 2666 ஙிகோடியாகும். 2009-10 ஆம் ஆண்டில் மட்டும் 16,489 கோடி மதிப்புறு ஒப்பந்தங்கள் இந்த நிறுவனத்துக்குக் கிடைத்தன.

கொதிகலன்கள், மின் உற்பத்தி சாதனங்கள் போன்றவற்றை உருவாக்கித் தருவதில் இந்த நிறுவனத்துக்கு நிகர் வேறு ஏதும் கிடையாது. இந்த வகையில் உலகத் தரம் வாய்ந்ததாகும்.

இவ்வளவு இலாபம் கொழித்தும், இந்த இலா பப்பழங்கள் கொத்துக் கொத்தாய்க் காய்த்துத் தொங்குவதற்குத் தங் களின் ரத்தத்தையும், சதை களையும்வியர்வையை யும் கொடுத்தவர்கள் அதன் ஊழியர்கள் குறிப்பாக ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்றால் சாதாரணமல்ல; இவர்களுள் பட்டதாரிகளும் உண்டு; ஆண்டுகள் 20-க்குமேல் பணியாற்றுபவர்களும் உண்டு. ஆனால், இது வரை அவர்களின் பணி நிரந்தரமாக்கப்படவில்லை என்பது உலக மனித உரிமை ஆணையத்திற்கே கொண்டு செல்லப்பட வேண்டிய ஒன்றாகும்.

தொடர்ந்து திராவிடர் கழகம் அதன் தொழிலாளர் அணி போராடி வந்தும் பெல் நிருவாகம் கேளாக் காதாக இருந்து வருகிறது.

நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கினாலும் நிறுவனத்தின் செலவில் - அதற்கு மேல் சென்று தடை ஆணை பெற்று விடுகிறார்கள்.

ஆண்டுக்கு 480 நாள்கள் தொடர்ச்சியாக பணியாற்றினால் அவர் களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்கிற அர சாணை பெல் நிறுவனத் தைப் பொறுத்தவரை மலம் துடைக்கும் குப்பைக் காகிதம்தான்!
தொழிலாளர் எழுச்சி என்னும் எரிமலை கடுமையாக நேரடியாக வெடித்து எழும்போதுதான் - இவர் கள் கைபிசைந்து நிற்பார் களோ!

29.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி – 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...