ஞாயிறு, 16 ஜூலை, 2017

இந்து அறநிலையம்


1925 ஜனவரி 27 பார்ப்பனர்களின் கால் மிதிபடும் சகதியாக இருந்த இந்துக் கோயில்கள் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்கு சட்ட ரீதியாகக் கொண்டு வரப்பட்ட நாள்தான் இந்நாள் (1925).
பார்ப்பனர்களின் கடும் சீற்றத்துக்கும், எதிர்ப்புக்கும் இடையேஇது நடைமுறைக்கு வந்தது. சட்டமன்றத்தில் வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் என்ன பேசினார் தெரியுமா?

நீதிக்கட்சியினர் பிராமணர்களை மட்டும் எதிர்க்கவில்லை, கடவுளையும் அழிக்கக் கிளம்பி விட்டார்கள். மதத்தை அழிக்க முனைந்துவிட் டார்கள். ஆண்டவனையே சட்டம் போட்டுக் கட்டுப் படுத்தும் அடாத செயலை எவரும் ஆதரிக்கமாட்டார்கள். மதத்தின் புனிதத் தன்மையைக் கெடுக்கும் இந்த மசோதாவை  ஜாதி வித்தியாசமின்றி கட்சிப் பாகுபாடின்றி ஒருமன தாக எதிர்க்கவேண்டும் என்று கூச்சல் போட்டார்.

மகாமகா ராஜதந்திரி என்று பார்ப்பனர்களாலேயே ஒப்புக்கொள்ளப்பட்ட பிரதமர் பனகல் அரசரோ அந்தக் கூச்சல்களையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல், காரியத்தில் கண்ணாகயிருந்து சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டார்கள். காங்கிரசும் கடுமையாக எதிர்த்தது.

அந்த நேரத்தில் காங்கிரசில் எழுச்சிமிக்க தலைவராக விளங்கிய தந்தை பெரியார் அவர்களோ, காங்கிரசில் இருந்துகொண்டே நீதிக்கட்சி ஆட்சி கொண்டு வந்த இந்தச் சட்டத்தை ஆதரித்தார். இந்தச் சட்டத்தால் கோயில்களுக்கு ஆபத்தல்ல கோயிலை வைத்துப் பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்கிற பார்ப்பனர்களுக்குத்தான் ஆபத்து என்றார்.

அன்று நீதிக்கட்சி இயற்றிய இந்தச் சட்டம் இன்றுவரை நடைமுறையில் இருந்து வருகிறது. இன்றுவரையிலும்கூட பார்ப்பனர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்தே வந்து கொண்டு இருக்கின்றனர்.

அண்மையில் சிதம்பரம் நடராசன் கோயில் தீட்சிதப் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தில்தான் இருந்து வந்தது. தி.மு.. ஆட்சியில்தான் இந்து அறநிலையத் துறையின்கீழ் சட்ட ரீதியாக வந்திருக்கிறது (2.2.2009).

எடுத்துக்காட்டாக இதே தீட்சிதப் பார்ப்பனர்கள் ஆண்டு ஒன்றுக்குக் கோயில் உண்டியல் வருமானம் ரூ.37,199 என்று நீதிமன்றத்தில் கணக்குக் கொடுத்தனர்.

ஆனால், இந்து அறநிலையத் துறையின்கீழ் வந்த பின் 11 மாதங்களில் உண்டியல் வசூல் என்ன தெரியுமா?

12 லட்சத்து 87 ஆயிரத்து 281 ஆகும்.

இதிலிருந்தே பார்ப்பனர்களின் பகல் கொள்ளையிலிருந்து கோயில்களை மீட்பதுதான் இந்து அறநிலையத் துறை என்பது தெரிகிறதா, இல்லையா?

27.1. 2010 விடுதலை ஒற்றைப் பத்தி -3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...