திருவாளர் சோ ராமசாமி ஏதோ சிந்திக்கக் கூடியவராம். இந்த வார துக்ளக் (31.3. 2010) தலையங்கத்தில் தமிழ்நாட்டில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் முயற்சியால் கட்டப்பட்ட தலைமைச் செயலகம்பற்றி வழக்கமான பாணியில் அகடவிகடக் கிண்டல்கள், அரட்டைக் கச்சேரிகள், கோணங்கித்தனங்கள், கிச்சுக்கிச்சுகள்!
இந்தச்சேட்டை,மூட்டை செவ்வாய்க்கிழமைகளுக்கிடையே ஒரு படு தமாஷ்!
தலைமைச் செயலகம் கட்டப்பட்டுள்ளதைப் பாராட்டவேண்டியதுதான். ஆனால், கொஞ்சம் சிந்திக்கவேண்டியிருக்கிறது.
இந்தப் பாழாய்ப்போன சிந்திக்கிற பழக்கத்தினால்தான் நாம் குட்டிச்சுவர் ஆகிறோம் என்பது தெரிந்தும் வழக்கத்தை விட முடியவில்லை என்று தலையங்கம் பகுதியில் தீட்டியுள்ளார்.
அவர் ஏதோ சிந்திக்கக்கூடிய சிற்பியாம். பூணூல் திரண்ட முதுகை ஒருமுறை தட்டிக் கொள்கிறார்.
ஆமாம், பெரியார், அண்ணா, கலைஞர், வீரமணி, வி.பி.
சிங் என்று வந்துவிட்டால், அவர் சிந்தனை ஊற்று பொத்துக்கொண்டு கிளம்பிவிடும்.
இதே துக்ளக்கில் ஹிந்து மகாசமுத்திரம்பற்றி எழுதும்போது மட்டும் மண்டை காய்ந்துவிடும்.
ராமன் 17 லட்சம் ஆண்டுகளுக்குமுன் குரங்குகள், அணில்கள் துணைகொண்டு பாலம் கட்டினான் என்றால், அந்த இடத்தில் மட்டும் அவாள் சிந்தனை பிரேக் போட்டுவிடும்!
மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் போய் விழுந்தான் என்று நம்புகிற நேரத்தில் மட்டும் கண்டிப்பாக சோ ராமசாமி அய்யர்வாளின் சிந்தனை மை காய்ந்து போய்விடும்.
காஞ்சி மட சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியின் காமலீலை சரசங்கள் சம்பந்தப்பட்டவை என்று வந்துவிட்டால் சிந்தனை ஜில்லிட்டு உறைந்து போய்விடும்.
இஸ்லாமியர்களை வேட்டையாடிய நரேந்திர மோடியின் சமாச்சாரங்கள் என்ற கட்டம் வரும்போது கண்டிப்பாக பூணூலின் சிந்தனை உள் தாழ்ப்பாள் போட்டுக் கொள்ளும்.
காஷ்மீர் பண்டிட்டுகள் (பார்ப்பனர்கள்) பிரச்சினை என்று வந்துவிட்டால் சிந்தனைக் கொம்பு சீறிக்கொண்டு பாயும். ஈழத் தமிழர் பிரச்சினை என்றால், சிந்தனைக்குச் சீக்கு வந்துவிடும்.
அடேயப்பா! எப்படிப்பட்ட சிந்தனை இந்த ஒரு குலத்துக்கொரு நீதி சொல்லும் (மனுவாத) அக்ரகாரச் சிந்தனை
30.3. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக