ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஆயுதம் ஏந்துவார்களாம் பார்ப்பனர்கள்


(பார்ப்பனர்கள் நடத்திய பேரணி கூட்டங்களைப் பற்றிய தகவல்)
தமிழ்நாட்டில் தேர்தல் வர இருப்பதைப் பயன்படுத்தி அரசியல் கட்சிகளை விரட்டி இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் முயற்சிகளில் பார்ப்பனர்கள் திட்டமிட்டு இறங்கி இருக்கிறார்கள்!

கடந்த நவம்பர் 16ஆம் தேதி - தமிழ்நாடு முழுதும் பார்ப்பனர் சங்கத்தின் சார்பில் பார்ப்பனர்கள் எழுச்சி நாள் கொண்டாடி - பேரணிகளை நடத்தினார்கள். பிறகு நடைபெற்ற கூட்டங்களில், பகிரங்கமாக பார்ப்பன மேலாதிக்க வெறியைக் கக்கியதோடு வன்முறைகளில் இறங்கவும் தாங்கள் தயாராக இருப்பதாகப் பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள்! சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு, அதே நேரத்தில் பார்ப்பனர்கள் நினைத்தால் எதையும் செய்து காட்ட முடியும் என்றும் மார்தட்டி இருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த பார்ப்பனர்கள், தங்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் சரிவதை எண்ணி வெறிபிடித்து சுத்த ஆரம்பித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 16ஆம் தேதி மாலை சென்னை சின்னமலை அருணா திருமண மண்டபத்தில் தமிழ்நாடு பார்ப்பன சங்கம் தனது 8ஆம் ஆண்டு துவக்க விழாவினை எழுச்சி நாளாகக் கொண்டாடியது. அப்போது பார்ப்பன ஆதிக்கத்திற்குப் போராடிய வாஞ்சிநாதன், சி.பி. இராமசாமி அய்யர் போன்றோரின் படங்களைத் திறந்து தங்களின்ப இனப்பற்றை தெளிவுபடுத்தினர்.

தங்களைத் தமிழர் என்று கூறிக்கொள்ளும், பார்ப்பனக் கும்பல், நிகழ்ச்சியை “நம°காரத்”துடன் துவக்கியது. இட ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்றும், பார்ப்பனரை எதிர்க்கும் அசுரர்களை தாக்கி அழிக்கவேண்டும் என்றும் வன்முறை தாண்டவமாடி அனைவரும் பேசினர்.

பார்ப்பனர் சங்க வக்கீல் கிருண்ஷசாமி பேசும்போது சைக்கிள் பேரணி வைப்பதன் அடிப்படை பின்னாளில் பார்ப்பனர்கள் சைக்கிள் செயின் சுற்றி வன்முறையில் இறங்குவதற்குத்தான் என்று கூறினார்.

இதுவரை சாம, பேத, தான, தண்டம் என்ற நான்குமுறைகளில் முதல் மூன்றையும் இதுவரை பயன்படுத்தியதாகவும் இனி “தண்டம்” தான் வழி என்றார். மேலும் இட ஒதுக்கீடு சம்பந்தமாக குறிப்பிடும்போது We want retirmation and retribution”  என்றார். ஆஷ்துரையை சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதனைக் குறிப்பிடுகையில் “வேதத்தைப் ******** வினை அழித்துயீடு” (தேவ சூத்திரம்) மேலே கூறிய வரிகளுக்கேற்ப வாஞ்சிநாதன் நடந்ததாகவும் அதைப்போலவே நாமும் நடக்கவேண்டும் என்றும் கிருஷ்ணசாமி கூறினார்.

பார்ப்பன சங்க மாநில செயலாளர் பேசுகையில் தாங்கள் தேர்தலில் நிற்கப் போவதாகக் கூறினார். பார்ப்பன சங்கத்திற்கான 10 ஆண்டு திட்டம் ஒன்று ஜனவரியில் வெளியிடப்படும் என்றார். பிரச்சார வேன் ஒன்று வாங்கப்பட்டு முழு வீச்சில் சங்கம் செயல்படும் எனத் தெரிவித்தார்.

வாஞ்சிநாதன் வரலாற்றை எழுதிய ‘ரகமி’ பேசுகையில் அய்யர் அய்யங்கார், ராவ்ஜி என்ற நமக்குள் பிரிந்து நிற்காமல் மூவரும் “திரிசூலம்” போல இணைந்து அசுரர்களைத் தாக்கி அழிக்கவேண்டும் என்று புராண காலத்தை மீண்டும் துவக்கும் வகையில் பேசினார். 50 சதவிகிதத்திற்கு மேல் இடஒதுக்கீடு செய்யக் கூடாது என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு இருப்பதாகவும், அதை மதிக்காத தமிழக அரசிற்கு ருழுஊ UGC (University Grant Commission) மத்திய அரசு அமைப்பு தனது நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று பார்ப்பன சங்கத்தின் முன்னாள் தலைவர் காசிராமன் ஆலோசனை வழங்கினார். பார்ப்பனர்கள் அறிவு ஜீவிகள் (Intellectuals)  என்றும், அவர்களின் எதிர்ப்பு மற்றவர்களிடமிருந்து வேறுபட்டதாக இருக்கும் என்றும் எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள் என்றும் மிரட்டினார்.

வரவிருக்கும் தமிழகத் தேர்தலில் பார்ப்பனர் சங்கம் ஆதரிக்கும் கட்சிக்குத்தான் பார்ப்பனர்கள் வாக்களிக்கவேண்டும் என்றார். தேர்தலின் முடிவை நிர்ணயிப்பவர்கள் பார்ப்பனர்கள்தான் ‹ (Deciding minorityஎன்றும் பார்ப்பனர்களை பகைத்துக் கொண்டவர்கள் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றும் எச்சரித்தார்.

“வேண்டிப் பெறுவார் பார்ப்பனர் ஓட்டு, பெற்றபின் வைப்பார் அவர்க்கு வேட்டு” எனவே பார்ப்பனர்கள் ஏமாந்து போய்விடாமல் வாக்களிக்க வேண்டும் என்றார். 68 சதவிகித இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்காக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்படுமாம்.

தன்னை ஒரு பார்ப்பனர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைவதாகவும், மற்றவர்கள் போடும் பூணூலைவிட பார்ப்பனரின் காயத்ரி மந்திரம் ஓதப்பட்ட பூணூலுக்கு ‘பவர்’ அதிகம் என்று பார்ப்பன வெறியுடன் பேசினார் டெல்லி கணேஷ் என்ற நடிகர். மேலும், தான் சமீபத்தில் “வெள்ளிமணி” என்ற பத்திரிகையில் அளித்த பேட்டிக்காக ‘துக்ளக் சோ’ பாராட்டியதாக மறைமுகமாகக் குறிப்பிட்டார். ஜனத்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இட ஒதுக்கீடு என்றால் பார்ப்பனர்கள் தாங்களும் அதிக குழந்தை பெற்று தங்கள் இன எண்ணிக்கையை உயர்த்துவோம் என பயமுறுத்தினார். “பார்ப்பன சங்கம்” என்பது இட ஒதுக்கீட்டை ஒழிப்பதற்காகத்தான் என்று சங்கத்தின் ஒரே நோக்கத்தினை டெல்லி கணேஷ் தெளிவுபடுத்தினார்.


(உண்மை - 1-2-1988)

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...