நீங்கள் மதிப்பிற்குரிய பெரியார் ஈ.வெ.ரா.வின் பெயரை வைத்துள்ளீர்கள்! பள்ளத்தெரு என்ற பெயரை மாற்றி வைத்தது பொருத்தமே. ஜாதி பேதமற்ற சமுதாயத்தைக் காணப்பாடுபட்டவர், நமது ஈரோடு தமிழ்ப் பெரியார்தான். எனவே, இந்த நகருக்குப் பெரியார் பெயர் வைத்தது மிகவும் பொருத்தமானதே!
பெரியார், காங்கிரசின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்தார். அப்போதே, ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்றார். பெரியார் காங்கிரசில் இருந்தபோது, கேரளத்தில் உள்ள வைக்கம் என்ற ஊரில் ஜாதி இந்துக்கள், தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமைப்படுத்தினர். அதனை எதிர்த்து காந்திஜி விருப்பப்படி பெரியார் சத்தியாக்கிரகம் ஆரம்பித்தார். அப்போது நான் ஒரு சிறிய தொண்டன்தான்! பெரியாருக்கு அப்போது என்னைத் தெரியாது! அவர் பெரிய தலைவர்! இப்போதும் அவரை எனக்குத் தெரியாது! (சிரிப்பு) ஏதோ நான் அவரைப் பார்த்திருக்கிறேன்.
வைக்கம் நகரில் தீண்டாமை ஒழிப்புக்குப் பாடுபட்டு, தம் வாழ்நாளி லேயே அதைக் காணவேண்டும் என்று எதிர்பார்க்கிறார் பெரியார்!
சர்க்கார், ஜாதி ஒழிப்புக்குப் பல சட்டங்கள் செய்துள்ளன. ஜாதி ஒழியவில்லையே என்று ஆத்திரப்பட வேண்டாம். சட்டத்தினால் மட்டுமே ஒரு சமூகத்தினை மாற்றி அமைத்துவிட முடியாது. ஜனங்களின் ஒத்துழைப்பு அதற்கு மிகவும் அவசியம். மூடப்பழக்க வழக்கங்கள் ஒழிய வேண்டும். அதற்காகப் பாடுபடும் பெரியார் ஈ.வெ.ரா.
நீடூழி வாழ்ந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும்.
அவருடைய பல கருத்துகளை நாம் ஒத்துக் கொள்ள முடியாது! ஆயினும், ஜாதி ஒழிப்பு பற்றிக் கருத்து வேற்றுமை இருக்க இடமில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்ந்து இருக்க வேண்டும் என்றும், பிறவியிலேயே தாழ்ந்தவன் என்று சொல்வதும் வெட்கப்படக் கூடியதாகும். தலைவிதி எனக் கூறுகிறோம். அது தப்பு! சமுதாயம், சமதர்மம் ஆகிய கொள்கைகளை ஒப்புக் கொள்ளாவிட்டால், நாடு முன்னேறாது, வாழமுடியாது!
சர்க்கார், அரிஜன நல இலாக்கா ஏற்படுத்தியுள்ளது. பெரியார் சர்க்காரை ஆதரிக்கிறார் என்றால் அவருடைய நோக்கம் நிறைவேறுவதால்தான்! பெரியார் என்னிடம் தினமும் இரவு ரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். (சிரிப்பு) நாங்கள் அப்படிச் சந்திக்கவில்லை. பெரியார் ஆதரவு தருகிறார் என்றால், நல்ல சீர்திருத்தங்கள் சர்க்காரால் கொண்டு வரப்படுவதுதான் காரணம்.
முதன்மந்திரி காமராஜ், திருச்சி வரகனேரியில் பெரியார் நகர் வாயிலைத் திறந்து வைத்துப் பேசியது. (நவசக்தி 11_-4_-1961).
ஒரு பிராமணனோ அல்லது வேறு யாரோ, தாம் உயர்ந்தவர் என்று உரிமை கொண்டாடும்போது, பிரமணரல்லாதார் அதை எதிர்த்துப் போரிட்டால் அதை முழுக்க முழுக்க நான் ஆதரிக்கிறேன். நான் உயர்ந்தவன் என்று உரிமை கொண்டாடுபவன் மனிதன் என்று அழைக்கப்படுவதற்கு உரியவன் அல்லன். ஒரு பிராமணன் பணம் சம்பாதிப்பதில் இறங்கிவிட்டால் அவன் பிராமணன் அல்லன் என்றாரே!
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
உங்கள் நண்பர் ஈ.வெ.ரா.
தேசியக் கொடியைக் கொளுத்தும் போராட்டத்தை நடத்த உள்ளாரே! உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்தக்கூடாதா என்று பிரதமர் நேரு அவர்கள் தமிழ்நாடு முதல் அமைச்சர் காமராசரிடம் கேட்ட நேரத்தில் முதல்வர் காமராசர் சொன்ன பதில் சுவையானது:
ஈ.வெ.ரா.தான் எனக்கு நண்பரே தவிர, இந்திக்கு நண்பர் அல்ல என்றாரே பார்க்கலாம்.
வேறுவழியின்றி பிரதமர் நேரு இந்தியைப் புகுத்த மாட்டோம் என்று கூறிய உறுதி மொழியை முதல் அமைச்சர் காமராசர் வெளியிட்டார். (30-_7_-1955)
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக