ஞாயிறு, 16 ஜூலை, 2017

பெயர்மாற்றம்




சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறந்து தமிழில் பெயர் சூட்டப்படும் குழந்தைகளுக்கு மாநகராட்சியின் சார்பில் தங்க மோதிரம் அளிக்கப்படும் என்று அறிவித்து, இதுவரை 250 குழந்தைகளுக்கு அவ்வாறு அளிக்கப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது பாராட்டத்தக்கதாகும்.
சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன் அவர்கள் பல புதுமையான திட்டங்களை அரங்கேற்றி வெற்றி பெற்றுள்ளார். மாநகராட்சிப் பள்ளிகள் என்றால் ஏளனமாகப் பார்க்கப்பட்ட காலம் போய், இப்பொழுது தரத்தில் மற்ற கல்வி நிறுவனங்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல என்பது சாதனைகள்மூலம் வலுவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்கம் பல்வேறு மறுமலர்ச்சிகளுக்குக் காரணமாக இருந்து வந்திருக்கிறது. தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்கு  பெயர்கள் தமிழில் இருக்காது. மதச் சிந்தனைகளை தலைதூக்கச் செய்யும் சமஸ்கிருதப் பெயர்களே பெரும்பாலும் சூட்டப்பட்ட நிலை.
அசிங்கமான பொருள் கொண்டவைகளாகக் கூட அவை இருக்கும். எடுத்துக்காட்டாக கேசவன் என்றால் அதன் பொருள் (கேசவன்  மயிர்), சில பேர் இதில் முற்றிப்போய் ஆதிகேசவன் (பழைய .......) என்று பொருள்படும்படி வைத்துக் கொள்வதுண்டு. சவுரிராஜன் என்பதும் இதே தன்மையில் உடையதுதான். பெண்களில் பாலகுஜாம்பாள் என்பதெல்லாம் நாகரிகம் உடையதுதானா?
சிவலிங்கம், பூதலிங்கம், ஜம்புலிங்கம், இராமலிங்கம் என்று வைத்துக் கொள்வதெல்லாம் அருவருப்பு உடையவைதானே!
இந்தக் காலகட்டத்தில்தான் தன்மான இயக்கம் தமிழில் பெயர் சூட்டுவது குறித்து தமிழர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. நாராயணசாமி நெடுஞ்செழியன் ஆனதும், இராமையன் அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் மதியழகன் ஆனதும், அரங்கசாமி அரங்கண்ணல் ஆனதும் இந்த அடிப்படையில்தான்.
ஊர்ப் பெயர்களும் அவ்வாறே சமஸ்கிருத மயமாக்கப்பட்டிருந்தன. திருமுதுகுன்றம் விருத்தாசலமாயிற்று; திருமரைக்காடு  வேதாரண்யம் ஆக்கப்பட்டது; குடமூக்கு  கும்பகோணம் என்று மாற்றப்பட்டது.
குரங்காடுதுறையை  கபிஸ்தலம் என்று சமஸ்கிருத மயமாக்கினர்.
மயிலாடுதுறை மயூரம், மாயவரம் ஆக்கப்பட்டு, சட்டப்பேரவை உறுப்பினர் மறைந்த மானமிகு . கிட்டப்பா அவர்களின் அரிய முயற்சியால் மீண்டும் மயிலாடுதுறையாக ஆயிற்று.
பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புக்குப் பலியான தமிழர்களை, தமிழ் மொழியை, பண்பாட்டை மீட்கும் போரில் சென்னை மாநகர மேயர் மேற்கொண்டிருக்கும் முயற்சி வரலாற்றுக் கண்ணோட்டத்தில் வைர வரிகளாகும்.
அவரது பகுத்தறிவுக் கண்ணோட்டம் நடைபாதைக் கோயில்களின்மீது பாயட்டுமே!
25.7.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)


நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2

ஆசிரியர் : கலி.புங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...