கோவில்களில் அர்ச்சகப் பார்ப்பனர்கள் கொள்ளை அடித்ததை மத்திய அரசால் 1960இல் நியமிக்கப்பட்ட சர்.சி.பி. இராமசாமி அய்யர் தலைமையிலான ஒரு கமிஷனே வண்டி வண்டியாக அம்பலப்படுத்தியதே!
பக்த சிரோன்மணியான முதல் அமைச்சர் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரே சட்டமன்றத்தில் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றைப் போட்டு உடைக்கவில்லையா?
விசாகப்பட்டினம் தொடங்கி திருநெல்வேலி வரை உள்ள கோயில்களில் நடைபெற்ற 65 மோசடிகளுக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என்று சொன்னாரே!
ஓமந்தூர் ராமசாமியார் என்ன பெரியார் ராமசாமியின் சீடரா?
ஏன் வெகுதூரம் போவானேன். திருப்பதி நாமதாரி கடவுளான ஏழுமலையான் கோவிலின் நகைகள் களவு போயின. மன்னர் கிருஷ்ண தேவராயர் அளித்த வைர நகைகள் எல்லாம் காணவே காணோமாம். இது பற்றி உயர்நீதிமன்றம் வரை சென்று சிரிப்பாய் சிரிக்கவில்லையா? காலக்கெடு அளித்து கணக்கை ஒப்படைக்க வேண்டும் என்றதே உயர்நீதிமன்றம்.
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக