பக்தி இலக்கியங்கள் ஆற்றிய பங்கு சமீப காலங் களில் மறுக்கப்பட்டு, மறைக் கப்பட்டு வருகிறது - என்று மூக்கால் அழுதிருக்கிறார் பா.ஜக.வின் முன்னாள் தமிழகத் தலைவர் திருவாளர் இல.கணேசன் அய்யர்வாள்.
முதலில் ஒரு கேள்விக்கு அவர் பதில் சொல்லித் தீர வேண்டும். பக்தி இலக்கி யங்கள் தமிழில் உண்டு என்று பெருமை பேசும் அவர், அந்தப் பக்தி தெய்வத் தமிழ் கோவில் குடமுழுக்குச் செய்யும்போது பயன்படுத்தப் படக்கூடாது என்று சவுண் டிப் பார்ப்பானிலிருந்து சங் கராச்சாரியார் வரை அடம் பிடிக்கிறார்களே - அதற்கு என்ன பதில்?
கரூரையடுத்த திருமுக் கூடலில் உள்ள மணி முத் தீசுவரர் கோவிலில் தமிழில் குடமுழுக்கு செய்தார்கள் என்ற காரணத்துக்காக தோஷமாகி விட்டது என்ற கோவிலை மூன்று நாள் இழுத்துச் சாத்தி, தீட்டுக் கழிக்கும் சடங்குகளைச் சாங்கோ பாங்கமாகச் செய்த பிறகுதானே மீண்டும் கோவிலைத் திறந்தார்கள்? காஞ்சீபுரம் சங்கராச்சாரி யாரும் தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாரே! பக்தி வளர்த்த தமிழைப் பற்றி அப்பொழுது இல.கணேசன் கள் திருவாய் மலராதது ஏனோ?
சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பலத்தில் தேவாரம், திருவாசகம் பாடி னார் ஓதுவார் ஆறுமுகசாமி என்பதற்காக, அவரை தீட் சிதப் பார்ப்பனர்கள் அடித்து உதைத்தார்களே - அப் பொழுது ஏன் சமயம் வளர்த்த தமிழுக்காக வக்காலத்து வாங்கி வஸ்தாத்து செய்ய வில்லை இல.கணேசன்?
சமயம் எனும் சூளையில் தமிழ் நட்டால் முளையாது என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
மதத்திலிருந்து தமிழைப் பிரித்துவிட வேண்டும் என் றார் தந்தை பெரியார். ஆனால் பார்ப்பனர்கள் என்ன சொல்லுகிறார்கள்? தமிழில் தான் பக்தி சொட்டு சொட்டு என்று சொட்டுகிறது - சம யம்தான் தமிழை வளர்த்தது என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டே கோவில்களில் வழிபாட்டுக்குரிய மொழி யாகத் தமிழ் இருக்கக் கூடாது என்பதிலும்- குட முழுக்குகள் தமிழில் நடத் தப்படக்கூடாது என்பதிலும் மிகத் தெளிவாக - உறுதி யாக இருக்கிறார்களே!
சமயம் தமிழை வளர்த் தது என்பதற்கு ஓர் உதா ரணம் ஞானசம்பந்தரின் தேவாரப் பாடல் ஒன்று போதாதா?
மண்ணகத்திலும் வானி லும் எங்குமாய்த்
திண்ணகத் திருவால வாயருள்
பெண்ணகத்தெழில் சாக்கியர் பேயமண்
பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே!
மதுரையில் கோவில் கொண்ட எம்பெருமானே! பவுத்தர், சமணர் வீட்டு அழ கிய பெண்களைக் கற்பழிக்க அருள்புரிவாயாக! என்பது தான் பக்தி வளர்த்த தமிழா? எது தமிழுக்கு நோயோ அதையேதான் பெருமை யாகக் கூறும் பார்ப்பனர் களின் போக்கிரித்தனத் தைக் கவனிக்கவும்.
25.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக