திங்கள், 17 ஜூலை, 2017

யாகம்


யாகம்  என்ற கலாச்சாரம் பார்ப்பனர்களுக்குச் சொந்தமானது. திராவிடர்களுக்கு எதிரானது. அதனால்தான் திராவிட வீரன் இரணியன், எங்கெங்கெல்லாம் யாகங்களை ஆரியர்கள் நடத்துகிறார்களோ அங்கங்கெல்லாம் சென்று அவற்றை அழிக்குமாறு தமது வீரர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி யாகங்கள் நடத்தப்படும் கோயில்கள் உள்பட தீயிட்டுக் கொளுத்தினார்கள்.
(பாகவதம் 7 ஆவது ஸ்கந்தம் 2 ஆவது அத்தியாயம்)

கவுதம புத்தரும் யாகத்தை எதிர்த்தார்  யாகம் என்ற பெயரால் உயிர்களைப் பலியிடுவதைக் கண்டித்தார்.
யாகத்தில் உயிர்களைக் கொன்று சொர்க்கத்திற்கு அனுப்புவது உண்மை யென்றால், உங்கள் தந்தைமார்களை யாகத் தீயில் போட்டு அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்புவதுதானே? என்கிற அறிவார்ந்த வினாவை எழுப்பினார்.

ஆனாலும் பார்ப்பனர்கள் இடையிடையே அந்த யாகக் கலாச்சாரத்தை விடுவதாக இல்லை.

உலக சேமத்துக்காக யாகம் என்று நடத்துவார்கள்; மழை வேண்டி யாகம் என்று நடத்துவார்கள். இவர்கள் யாகம் நடத்தி எதுவும் நல்லது நடந்ததில்லை என்பது வெளிப்படை.

கருநாடக மாநிலத்தில் ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். அதிகாரத்தைப் பயன்படுத்தி சுரங்கத் தொழிலில் கொள்ளை அடிக்கிறார்கள் என்கிற குற்றச்சாற்று நாலாதிசைகளிலும் இடியாக இறங்கிக் கொண்டு இருக்கிறது.

இதிலிருந்து தப்பித்துக் கொள்ள குற்றாலத்தில் யாகம் நடத்தி இருக்கிறார்கள்.

அந்த யாகத்தில் நேரிடையாகக் கலந்துகொள்ள ஜனார்த்தன ரெட்டியின் மனைவி வந்திருக்கிறார். ஹெலிகாப்டர் இறங்க முடியாததால் திரும்பிப் போயிருக்கிறார்.

இதுபோல்தான் ஆந்திராவில் சத்யம் கம்ப்யூட்டர் மோசடியில் சிக்கிக் கொண்ட ஆசாமி, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள பெரிய யாகம் நடத்தினார். விளக்கெண்ணெய்க்குக் கேடே தவிர, பிள்ளை பிழைக்கவில்லை!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று பெரிய யாகம் ஒன்றை சென்னை அண்ணா நகரில் நடத்தினார்கள். என்ன நடந்தது என்று எல்லோருக்குமே தெரியும்.

மோசடிக் குற்றங்களிலிருந்து தப்பிக்க, யாகம் நடத்துவதிலிருந்தே யாகத்தின் யோக்கியதை விளங்குகிறதா  இல்லையா?

20.7. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...