ஞாயிறு, 16 ஜூலை, 2017

கைது செய்!




காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் உலக நன்மைக்காக சகஸ்ஹர சண்டி ஹோமம் நடை பெற்றதாம். அதில் பா... வின் அகில இந்தியத் துணைத் தலைவரும், மனித வள மேம்பாட்டுத் துறை முன்னாள் அமைச்சருமான முரளிமனோகர் ஜோஷியும் பங்கு கொண்டு வேத மந்திரங்களை பயபக்தியுடன் படித்தாராம்.

இப்படி அடிக்கடி உலக நன்மைக்காக பூஜைகளையும், ஹோமங்களையும் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால், கண்ட பயன் பூச்சியமே! உணவுப் பொருள்களையும், பட்டாடைகளையும் நெருப்பில் போட்டு நாசப்படுத்தியதுதான் மிச்சம்.

உணவுப் பொருள்களின் விலை உச்சத்தில் இருக்கிறது; இரவு சாப்பாடு இல்லாமல் படுப்ப வர்கள் இந்திய மக்களில் நான்கில் ஒருவர் என்று கூறப்படுகிறது.

77 விழுக்காடு மக்களின் நாள் வருமானம் ரூ.20க்கும் கீழாக இருக் கிறது.

2004-05 ஆம் ஆண்டுக்கான தேசிய சுகாதாரத்துறை ஆய்வின்படி 57.8 விழுக்காடு கர்ப்பிணிப் பெண்களும், 56.1 விழுக்காடு திருமணமான பெண்களும், 79.1 விழுக் காடு குழந்தைகளும் ரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். சத்துணவு இல்லாமையால் ஏற்பட்டுள்ள கொடிய விளைவு இது.

இந்த நிலையில்  யாகம், ஹோமம், தீபம் என்ற பெயரால் சத்துள்ள உணவுப் பொருள்களை, கொஞ்சம்கூட நெஞ்சில் ஈரமின்றி நெருப்பில் கொட்டி பாழ்படுத்துகிறார்களே - இதற்குப் பெயர்தான் பக்தியா? இப்படி நாசப்படுத்தினால் தான் கடவுள் கருணை காட்டுவாரா?

இவ்வளவுக்கும் பவுதீகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்ற பெரிய படிப்பாளி இந்த ஜோஷி  என்றாலும் அவரைப் பிடித்து ஆட்டும் பார்ப்பனத்தனம், இந்த மூடத்தனமான காரியங் களைச் செய்விக்கிறது.

உணவுப் பொருள்களை பாழ்படுத்துபவர்களை  உணவுப் பொருள் நாசம் தடுப்புச் சட்டத்தின்கீழ்  (Essential Commodities  சட்டத்தின்படி கைது செய்யவேண்டாமா?

பட்டினி கிடக்கும் மக்கள் இந்தப் பார்ப்பனீயத்தை எதிர்த்துப் போராட முன்வரவேண்டாமா?

11.7.2008 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...