தி.மு.க. ஆட்சியில்- மானமிகு கலைஞர் அவர்களின் சாதனையில் மகுடம் தரித்தவை பல உண்டு. அவற்றில் மகளிர் முன்னேற்றத் திசையில் அவர் பதித்தவைகாலக் கல்வெட்டாகும்.
தன்மான இயக்கத்தின் பாதையை இளமையில் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்டதால், அது அவரை நெறிப்படுத்திச் செழுமையாக்கியிருக்கிறது.
1928 ஆம் ஆண்டிலேயே தந்தை பெரியார் தலைமை வகித்த தென்னிந்திய சீர்திருத் தக்காரர்கள் மாநாட்டிலேயே பெண்களுக்குச் சொத்துரி மையை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்னை நாகம்மையார், அன்னை மணியம்மையார், டாக்டர் தருமாம்பாள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், அஞ்சுகத்தம்மையார், சத்திய வாணிமுத்து முதலிய சுயமரியாதை இயக்கச் சுடரொளிகள் பேரிலும், அன்னைதெரசா பெயரிலும், பெண்களின் முன்னேற்றத்திற்கான புதிய நதிகளைத் திறந்துவிட்டார்.
இந்தியாவிலேயே பெண்களுக்காக சொத்துரிமை முதலில் கொண்டு வந்தவரும் கலைஞரே (6.5.1989). இந்தச் சட்டத்தை தமிழ்நாடு சட்டப் பேரவையில் கலைஞர் அவர்கள் முன்மொழிந்தார். செங்கற்பட்டு முதல் சுயமரியாதை மாநாட் டின் சிறப்புகளையெல்லாம் விரிவாக எடுத்துரைத்து - அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பெண்களுக்கான சொத்துரிமை தீர்மானம் இங்கு நிறைவேறு கிறது என்று பெருமிதமாக எடுத்துக்காட்டி, தந்தை பெரியார் வாழ்க!, அறிஞர் அண்ணா வாழ்க! என்று முழங்கி, சட்டப்பேரவையில் பதிவு செய்துள்ளதானது சாதாரணமானதல்ல - மகத்தானது- மரியாதைக்குரியது- மாண்புக்குரியது!
வெறும் அரசியல்வாதி என்ற நிலையைக் கடந்து, கலைஞரின் உள்ளத்தில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் தன்மான இயக்கத்தின் தகைசான்ற உணர்வு அது.
அந்தக் காரணத்துக்காகத் தான், சென்னையில் கழகம் எடுத்த புரட்சிக்கவிஞர் விழாவில் (29.4.1990) மகளிர் உரிமை ஆட்சி மாண்பாளர் எனும் பட்டத்தைத் தமிழர் தலைவர் மானமிகு கி.
வீரமணி அவர்கள் அளித்தார்.
தைத்திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்படுவதற்கு முக்கிய விதை ஊன்றப்பட்டதும் அந்த விழாவில்தான்.
சட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலும், ஆணைகள் பிறப்பிக்கப்பட்டாலும், அவை நடை முறைக்கு வரும்பொழுது, பல சிக்கல்களை நிருவாகத்தில் உள்ள அலுவலர்கள் ஏற்படுத்துவது என்பது அன்றாடம் பொதுமக்கள் அனுபவிக்கும் இடர்ப்பாடுகள் ஆகும்.
குறிப்பாக அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமணத் திட்டத்தைச் செயல் படுத்தும்பொழுது பல்வேறு சான்றுகள் கேட்கப்படுகின்றன.
பெரும்பாலான ஜாதி மறுப்புத் திருமணங்கள் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறித்தான் நடக்கின்றன. இந்த நிலையில், திருமண அழைப்பிதழ் அச்சிட்டு, உறவினர்களை அழைத்து, திருமணம் நடத்துவது என்பது நடைமுறை சாத்தியமற்ற ஒன்று - எதிர்ப்புகளை மீறி, வெளியூர் சென்று குடும்பம் நடத்தவேண்டிய சூழ்நிலையில் இருப்பிடச் சான்றுகளை அளிப்பதிலும் சிரமம்தான்.
இந்த யதார்த்தமான நிலைகளை உணர்ந்து கலைஞர் அரசு புதிய ஆணை ஒன்றினைப் பிறப்பித்துள்ளது (ந.க. எண்.
26962/ம.ந./(1)
2010 நாள் 2.8. 2010 சமூகநல ஆணையரகம்,சென்னை-5).
இதன்படி திருமணப்பதிவுச் சான்று, ஜாதிச் சான்றிதழ் இந்த இரண்டினையும் அளித்தாலே போதுமானது என்று புதிய ஆணை கூறுகிறது.
வரவேற்கத் தகுந்தது, பாராட்டத்தகுந்தது - நன்றி கூறத் தகுந்தது - தகுந்தது!!
4.9. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
4.9. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
நூல் : ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக