தஞ்சை மாவட்டத்தில் திருவையாறு அரசினர் கல்லூரி சமஸ்கிருதக் கல்வி நிலையமாக இருந்ததை மாற்றி, தமிழும் சொல்லிக் கொடுக்கப்பட ஆவன செய்தார் ஜில்லா போர்டு தலைவராக இருந்த நீதிக்கட்சித் தலைவர் ஏ.டி.பன்னீர் செல்வம்.
பார்ப்பனர்களுக்கு மட்டும் வடித்துக் கொட்டப்பட்டுக் கொண்டிருந்த ராஜா மடம், உரத்தநாடு விடுதிகளை மற்றவருக்கும் திறந்து விட்ட தகைமையும் அவரையே சாரும்.
இராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராக இருந்த ஊ.பு.அ. சவுந் தரபாண்டியன், பேருந்துகளில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்கா விட்டால் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று ஆணையிட்டார்.
தாழ்த்தப்பட்டவர்களைப் பள்ளிகளில் சேர்க்காத பள்ளிகளுக்கு மானியம் நிறுத்தப்படும் என்று ஆணையிட்டவர் தாலுகா போர்டு தலைவராக இருந்த நீதிக் கட்சி முன்னணித் தலைவர்களுள் ஒருவரான சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனார்.
நீதிக்கட்சியின் நேர்மையும், நீதிநெறியும், தொண்டுள்ளமும், நிர்வாகத் திறனும் வரலாற்றில் விஞ்சி நிற்கக்கூடியவை.
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக