கல்லூரி முதல்வர்கள் எல்லாம் பார்ப்பனர்களாகவே இருந்த நிலையில் பார்ப்பனர் அல்லாத மாணவர் சேர்க்கைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு இருந்த கால கட்டம் அது;
பனகல் அரசர் என்ன செய்தார்? ஒவ்வொரு கல்லூரியிலும் மாணவர் சேர்க்கைக்குக் குழுக்கள் அமைக்க உத்தரவிட்டார். (ராஜாஜி அவர்கள் 1937 இல் ஆட்சிக்கு வந்த போது இந்த முறையை நீக்கினார் என்பதைக் கவனித்துக் கொள்க!)
மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சூழ்ச்சியைத் தவிடு பொடியாக்கினார் பனகல் அரசர்.
சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதப் பேராசிரியர் குப்புசாமி சாஸ்திரிக்கு மாத சம்பளம் ரூ.
300, தமிழ்ப் பேராசிரியர் கா. நமசிவாயனாருக்கு மாதச் சம்பளம் ரூ.81
- இந்த பேதத்தை நீக்கியது இவ்வாட்சியே!
1923 இல் புதிய பல்கலைக் கழகம் காண சட்டம் இயற்றப்பட்டது. பின்னாளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் உருவாக இது காரணமாயிற்று.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்த மருத்துவத் துறையை இந்திய மயமாக்கிய பெருமையும் நீதிக்கட்சி முதல் அமைச்சர் பனகல் அரசரையே சாரும். அய்ரோப்பிய உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கிடையேதான் இந்தச் சட்டம் நிறைவேறியது.
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக