ஞாயிறு, 16 ஜூலை, 2017

பங்குச் சந்தை

ஜோதிடத்தின் அடிப்படையில் கூறப்படும் ஆலோசனைகளை நம்பி பங்குச் சந்தையில் முதலீடு செய்யவேண்டாம் என்று முதலீட்டாளர்களுக்கு செபி (செக்யூரிட்டிங் அண்ட் எக்சேஞ்ச் போர்டு ஆஃப் இந்தியா) வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஜோதிடத்தின் அடிப்படையில் சிலர் கணிப்புகளை வெளியிடுவதும், அதனை நம்பி முதலீடு செய்பவர்களும், மோசம் போனவர்களும் உண்டு. அதனால்தான், செபி இத்தகைய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் வாங்க விரும்பும் நிறுவனத்தின் நிதி நிலைமை, அதன் எதிர்காலத் திட்டங்கள், அதன் உற்பத்திப் பொருள்கள், விற்பனை நிலைமை, அதன் தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்து தொலைநோக்குக் கண்ணோட்டத்தில்தான் முடிவுக்கு வரவேண்டும்; ஜோதிடத்தை நம்பி ஏமாறவேண்டாம் என்று செபி கூறியுள்ளது.

ஜோதிடம் என்பது அறிவுப்பூர்வமானது அல்ல  விஞ்ஞான அடிப்படையைக் கொண்டதும் அல்ல! வானவியல் (ஹளவசடிடிஅல) என்பது வேறு, ஜோதிடம் (ஹளவசடிடடிபல) என்பது வேறு, இரண்டும் ஒன்றல்ல. ஒன்றோடு ஒன்றை போட்டுக் குழப்பிக் கொள்-ளக்கூடாது.

வானில் நிகழும் மாற்றங்களை வைத்து மனிதவாழ்வின் அன்றாட செயல்பாடுகளைக் கணிப்பது படுமுட்டாள்தனம்.

இவர்கள் கூறும் ஜோதிடத்தில் சூரியனை கிரகத்தின் பட்டியலில் வைத்துள்ளனர்; உள்ளபடியே சூரியன் ஒரு நட்சத்திரமாகும். உண்மையான கிரகமாகிய பூமிக்கு ஜோதிடத்தில் இடமில்லை; அதேநேரத்தில், பூமியின் துணைக் கிரகமான சந்திரனுக்கு முக்கிய பாத்திரம் ஜோதிடத்தில் உண்டு.

அவ்வப்போது புதிய புதிய கிரகங்களைக் கண்டுபிடித்து வருகின்றனர். இவர்களோ இன்னும் நவ (ஒன்பது) கிரகங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு கிடக்கின்றனர்.

புதிய சூரியன் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளிவந்துள்ளது. இனிமேல்தான் அதற்குப் பலனைக் கணிப்பார்களோ!

ஒரு ஜோதிடனிடம் பரிசு சீட்டு எந்த நம்பருக்கு விழும் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம். நாய்க்கு ஒரு பெயரைச் சூட்டி, அதன் பிறந்த நேரத்தைக் கொண்டு போய்க் கொடுத்தால், எந்த ஜோதிடர் இது நாயின் ஜாதகம் என்று சொல்லுவான்? சவால்விட்டே கேட்கிறோம்.

பெரியாருக்கு ஆயுள் 67 என்று வீட்டில் எழுதி வைத்திருந்தனர். ஆனால், அவர் 95 ஆண்டுகாலம் அல்லவா வாழ்ந்தார்.

காந்தியார் பிறந்ததோ சிம்மலக்னம், மக நட்சத்திரம்; விடியற்காலம். மக நட்சத்திரத்தில் ஜனித்தவர்களுக்கு தீர்க்காயுள் உண்டு. எனவே, காந்தியாருக்கு ஆயுள் 120 வயது என்று திருத்தணி பிரபல ஜோதிடர் வி.கே. கிருஷ்ணமாச்சாரியார் பாரத தேவி இதழில் (15.8.1947) எழுதினாரே என்னாயிற்று? கோட்சே என்ற கொடிய பார்ப்பான் சுட்டுக் கொன்றுவிட்டானே! அப்பொழுது காந்தியாருக்கு வயது 78 ஆண்டு 6 மாதங்கள்தானே! மக்கள் நல அரசு என்பது உண்மையானால், மோசடிக் குற்றத்தின்கீழ் ஜோதிடத்தைத் தடை செய்யவேண்டாமா?

25.2. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...