ஞாயிறு, 16 ஜூலை, 2017

சிற்பிகள்




சிற்பத்துக்குப் புகழ் பெற்ற மாமல்லபுரத்தில் எந்நேரமும் கேட்கும் உளிச் சத்தம் சமீப காலமாகக் குறைந்திருக்கிறது. மாமல்லபுரத்தில் சிற்பத் தொழிலில் சுமார் 1500 சிற்பிகள் ஈடுபட்டுள்ளனர். சுமார் 300 விற்பனைக் கூடங்கள் உள்ளன. இப்பொழுது இந்தத் தொழில் முடங்கிப் போயிருக்கிறதாம். அதற்கான காரணங்களுள் ஒன்று கடவுள் விக்கிரகங்கள் செய்து தருமாறு வரும் ஆர்டர்கள் நின்று போய்விட்டதும் ஒன்றாம்.
இத்தகவலை தி சன்டே இந்தியன் (12.7.2009) இதழ் தெரிவித்துள்ளது.
மக்கள் மத்தியிலே பக்தி இறக்கை கட்டி பறக்கிறது என்று தன் முதுகைத் தாங்களே தட்டிக் கொள்ளும் மெய்யன்பர்கள் இந்தத் தகவலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று தெரியவில்லை.
இந்து, தினமணி ஏடுகள் கூட கோயில்களுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைந்துகொண்டு வருகிறது என்ற செய்திகளைப் புள்ளி விவரத்துடன் வெளியிட்டுள்ளன.
அப்படிப் போகிறவர்களில் பலரும் பக்திக்காகப் போவதில்லை. எதற்காகத்தான் போகிறார்களாம்?
வினா: நீங்க முன்ன பார்த்த மாதிரி ஜனங்களிடம் பக்தி இருக்கிறதா இப்போது?
புரோகிதர் விடை: பக்தியாவது, ஒண்ணாவது? கோயிலுக்கு வர்றவன் சாமி தரிசனத்துக்கா வர்றான்? பொம்மனாட்டிகள் மட்டும் என்ன யோக்கியம்? அவாளும் புடவை, நகை, நட்டு இதெல்லாம் போக, நேரம் இருந்தா சுவாமி, அம்பாளை நெனைச்சிக்கிறா. (துக்ளக், 1.6.1981, பக்கம் 32).
ஹிந்து மகா சமுத்திரத்தை உறிஞ்சிக் குடித்துக் கொண்டிருக்கும் துக்ளக் ஏடே தற்காலப் பக்தியைப் பற்றி இவ்வாறு பிரஸ்தாபிக்கிறது.
அப்படியிருக்கும்போது கடவுள் விக்ரகம் கேட்டு யார்தான் ஆர்டர் கொடுப்பார்கள்?
பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி கல்கி இதழுக்கு (11.6.2008) அளித்த பேட்டியில் ஒரு உண்மையைப் போட்டு உடைத்தார்.
ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த் திருக்காங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால் மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா கல்லுல அவரைக் கொண்டுவர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படுறீங்க?
நீங்க அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டு வரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரனும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும்? அந்த உயிரை யாரு கொடுக்கிறாங்க? நாங்கதானே? எங்கிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சுக்க வேண்டாமா? என்று கூறியுள்ளார்.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால், கடவுளை உண்டாக்கியவர்கள் நாங்கள்தான்  சிற்பிகள்தான் என்று கூறிவிட்டாரா இல்லையா?
அந்தக் கடவுளை செய்த சிற்பிகளே வியாபாரம் இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள் என்கிறபோது, மற்றவர்களின் நிலை என்ன? பக்தர்கள் சிந்திக்கவேண்டாமா?
1.7.2009 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...