ஞாயிறு, 16 ஜூலை, 2017

வாளேந்துவோம்


1948 இல் புல்லேந்தும் கைகளில் வாளேந்துவோம்! என்று பார்ப்பனர்கள் மாநாடு போட்டு அறிவித்த நேரத்தில்கூட தூத்துக்குடி மாநாட்டில் தந்தை பெரியார் என்ன சொன்னார்? விரல் உரல் ஆனால் உரல் என்ன ஆகும்? என்று எச்சரித்து விட்டு, சிறுபிள்ளைத் தனமாக நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறி. உண்மை நிலையை அழ கான உவமானத்தில் எடுத்துரைத்தாரே!

என் அருமைப் பார்ப்பனத் தோழர்களே! நீங்கள் வாழை இலையைப் போல் மென்மையானவர்கள் நாங்கள், நாங்கள் என்றால் திராவிட இனத்தவர்கள், முள்ளுச்செடி போல வன்மையும், கூர்மையும் வாய்ந்தவர்கள் முள் வாழை இலைமீது உராய்ந்தாலும், வாழை இலைதான் கிழியும்; வாழை இலையே வந்து முள்ளுடன் மோதினாலும் வாழை இலைதான் கிழியும். அதுபோல நீங்களாக வந்து எங்கள் இனத்துடன் மல்லுக்கு நின்றாலும் உங்களுக்குத்தான் நஷ்டம். அல்லது நாங்களாக வந்து உங்களிடம் போரிடத்தக்க நிலை நேரிட்டாலும், உங்களுக்குத்தான் நஷ்டம்.

ஆகையால்தான் கூறுகிறேன்; நம் இருவருக்குள்ளும் போரோ, பிணக்கோ, பூசலோ, பகையோ நேரும் விதத்தில் நடந்து கொள்ளாதீர்கள்! அப்படி நடந்து கொண்டால் கஷ்டம் உங்களுக்குத்தான்; எங்களுக்கல்ல 

-_ தந்தை பெரியார்

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...