ஞாயிறு, 16 ஜூலை, 2017

இராமாயணம்


மொராரி பப்பு இவர் கதாகாலட்சேபக்காரர் அதுவும், இராமாயண உபந்நியாசம் என்பது அவருக்குக் கைவந்த சரக்கு. இந்துத்துவாவின் கட்சிக் கொடி பறக்கும் குஜராத் மாநிலத்தில் இவரது கொடியும் ஓகோ வென்று பறந்து கொண்டிருக்கிறதாம்.

இவருக்கு ஓர் ஆசை. பாகிஸ்தானுக்குச் சென்று அங்கே ராமர் கதையை உபந்நியாசம் செய்ய வேண்டுமாம். அதற்காக அந்த நாட்டு அரசுடன் தொடர்பு கொண்டுள்ளாராம்.

இந்தியா பாகிஸ்தான் மக்களை ஒன்று படுத்தவே இந்த முயற்சியாம்ராமன் கதை பரவினால் மக்கள் மத்தியிலே மதக் கலவரங்கள் மறையுமாம்.

அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்? என்ற வழக்கு மொழி ஒன்று உண்டு. அதுதான் இந்த நேரத்தில் நினைவிற்கு வந்து தொலைக்கிறது.

இராமாயணம் என்பதே நாட்டில் வருண தர்மத்தை, பிறவியிலே, ஜாதி தர்மத்தை வலியுறுத்தும் கதையாகும்.

சம்புகனை ராமன் வாளால் வெட்டிக் கொன்றது எதன் அடிப்படையில்? சூத்திரன் தவம் செய்யக்கூடாது; சூத்திரனுக்குக் கடவுள் பிராமணன்தான். அப்படியிருக்கும்போது சூத்திரன் கடவுளை அடைய எப்படி நேரிடையாகத் தவம் இருக்கலாம் என்பதுதானே இராமாயண தத்துவம்?

ஒரு மதத்துக்குள்ளேயே பிரிவினையை பிளவுகளை ஏற்படுத்தி, சச்சரவுகளை உருவாக்கும் ஒரு கதை பாகிஸ்தான் இந்திய உறவை மேம்படுத்தும் என்று சொல்லுவது எனக்குப் பயித்தியம் தெளிந்து விட்டது; உலக்கையைக் கொண்டு வா கோவணம் கட்டிக் கொள்கிறேன் என்று கூறுவதை ஒத்ததாகும்.

இந்தியாவில் இருக்கக்கூடிய முசுலிம்கள் அல்லாவை வணங்கக்கூடாது. மாறாக இராமனை, கிருஷ்ணனை வணங்கவேண்டும் என்று கூறும் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர், பாகிஸ்தான் சென்று ராமன் கதையை உபந்நியாசம் செய்ய அருகதை உடையவர்தானா?

அமெரிக்காவில் குடியேறிய பார்ப்பனியம் குடியரசுத் தலைவரின் வெள்ளை மாளிகைவரை நுழைந்து வேத மந்திரங்களை ஓத ஆரம்பித்து விட்டது. பார்ப்பனியம் எங்கு நுழைந்தாலும் பிளவைத்தான் ஏற்படுத்தும் என்பதில் எச்சரிக்கை யாகவே இருக்க வேண்டும்.

பாகிஸ்தான் அரசு பார்ப்பனிய விஷயத்தில் ஏமாந்துவிடாது என்றே நினைக்கிறோம்.

11.1. 2010 விடுதலை -3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...