1. ஆச்சாரியார் பதவிக்கு வந்தவுடன், ஸ்தல ஸ்தாபனத் துறை முழுவதிலும் அப்போது அமுலில் இருந்த கம்யூனல் ஜி.ஓ.வைக் கொலை செய்யும் வகையில் தன் இனத்தாருக்கே எல்லாப் பதவிகளையும் தந்தார்.
2. சென்னை சர்க்கார் நியமித்த 25 மிருக வைத்தியர்களில் 19 பேரைப் பார்ப்பனர்களாகவே பொறுக்கி எடுத்துப்போட்டார்.
3. சென்னை கார்ப்பரேஷன் கல்வி அதிகாரியாக வருவதற்கு எல்லாத் தகுதிகளையும் பெற்ற திரு சிவசைலம் பிள்ளை என்ற ஒரே தமிழர் இருந்தும் கூட திரு ரகுநாத அய்யர் என்ற பார்ப்பனரையே நியமித்தார்.
4. கார்ப்பரேஷன் உயர்நிலைப் பள்ளிகளில் காலியான 10 தலைமையாசிரியர்கள் உத்தியோகங்களுக்குப் பார்ப்பனர்களையே போட்டார்.
5. சப்-ரிஜிஸ்தரார் பதவியிலிருந்து ஜில்லா ரிஜிஸ்தரார் பதவிக்கு உயர்த்தும் வேலைகள் 15 காலிகளுக்கு 11 பார்ப்பனர்களுக்கே வேலையளித்தார்.
6. திரு கே.எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார் என்ற பார்ப்பனரைக் காலியான இடத்தில் நிரப்ப, அய்க்கோர்ட் ஜட்ஜாக நியமிக்க ஏற்பாடு செய்தார். ஒரு பார்ப்பனர் அல்லாத நீதிபதி ரிட்டையர்டு ஆன இடம் அது.
7. பப்ளிக் பிராசிக்கியூட்டர்களை வக்கீல்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டார். வக்கீல்கள் 100-க்கு 97 பேர் பார்ப்பனர்களாகவே இருப்பதால், அவர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்ற முறையில் பார்ப்பனர்களைத் தவிர,
மற்றவர்கள் பப்ளிக் பிராசிக்கியூட்டர்களாக வரமுடியாது என்பதைத் தெரிந்துதான் திரு. ஆச்சாரியார் இந்த உத்தரவைப் போட்டார். திருநெல்வேலியில் 4 பப்ளிக் பிராசிக்கியூட்டர்கள் தேவைப்பட்டது. அந்த ஊர் பார்ப்பன வக்கீல்கள் ஒன்று சேர்ந்து கொண்டு, 4 பார்ப்பனர்களைப் பப்ளிக்பிராசிக்கியூட்டர்களாக சிபார்சு செய்தார்கள். இப்படி நடக்கப் போவதை, அறிந்த பார்ப்பனர் அல்லாத வக்கீல்கள் மேற்படிக் கூட்டத்தைப் பகிஷ்கரித்தார்கள்.
8. பிராசிக்கியூஷன் இன்ஸ்பெக்டர்கள், மாஜிஸ்திரேட்டுகள்_ அவர்களையும்கூட வக்கீல்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என உத்தரவு போட்டதன் மூலம் பார்ப்பனர்களே அப்பதவிகளுக்கு வருவதற்கு வசதியாக வழிவகைகளைச் செய்தார்.
9. 1937_இல் பப்ளிக் பிராசிக்கியூட்டர்கள் மொத்தம் 7 பேர் நியமிக்கப் பட்டதில் 3 பேர் பார்ப்பனர்களுக்குத் தந்ததோடு அல்லாமல், அடிஷனல் பப்ளிக் பிராசிகியூட்டர்கள் நியமிக்கப்பட்டதில் 3 பார்ப்பனர்களுக்கே தந்தார்.
10. சர்வீஸ் கமிஷன் ஒரு முஸ்லிமுக்கு எஞ்சினீயர் வேலை கொடுத்தது. அதைத் திரு. ஆச்சாரியார் அப்போது தேவையில்லை என்று சொல்லிவிட்டார். ஆனால், அதற்கப்புறம் அந்த வேலை ஒரு பார்ப்பானுக்குக் கொடுப்பதற்காகத் தேவைப்பட்டு பார்ப்பனர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதுவும், ஒரு பார்ப்பனர், சட்டப்படி தகுதி இல்லாதவருக்குக் கொடுக்கப்பட்டது!
11. வகுப்புவாரி பிரதிநிதித்துவ முறைக்காகக் காயம் செய்யாமல் ஆக்டிங்காய் வைத்திருந்த 80, 90 ஸ்தானங்களை, அந்த வேலை பார்ப்பவர்கள் பெரிதும் பார்ப்பனர் என்பதற்காகவே காயமாக்கினார். இந்தச் சூழ்ச்சிகள் எல்லாம் வகுப்புவாரி முறையை ஒழிப்பதற்குச் செய்யப்பட்டதாகும். 89 பேருக்கு 11 பேர் தான் வகுப்புவாரி முறைப்படி வரமுடியும். ஆனால், மேற்படி 89 பேர்களில் 80 பேர் பார்ப்பனர்களாகவே இருந்ததால்தான் ஆச்சாரியாரின் இந்தக் கெட்டிக்கார ஏற்பாடு.
12. முஸ்லிம் மந்திரி திரு. யாகூப் ஹாசன் மந்திரியானதும் தனக்கொரு முஸ்லிமைப் பர்சனல் கிளார்க்காக ஏற்படுத்திக் கொண்டார். அந்தக் கிளார்க்கும் இரண்டு மூன்று நாள் வேலை பார்த்தார். திரு.ஆச்சாரியார் இந்த விஷயம் அறிந்தவுடன், ஒரு பார்ப்பனரைக் குமாஸ்தாவாக நியமித்து, அனுப்பி அவரை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தார்.
13. சென்னை ஷெரீப் வேலை, பார்ப்பனர் அல்லாதாருக்கு அதாவது, ஒரு அய்ரோப்பியருக்குக் கிடைக்க வேண்டியது முறையாகும். ஆனால் திரு.ஆச்சாரியார் ஒரு பார்ப்பனரையே நியமித்தார். (ஜி.ஏ.நடேச அய்யர்).
14. திரு. ஆச்சாரியார் காலத்தில் செய்யப்பட்ட பதவி நியமனங்கள் எல்லாம் - ஜில்லா கலெக்டர்கள், ஜில்லா போலீஸ் அதிகாரிகள் போன்ற நியமனங்கள் - எல்லாம் பார்ப்பனர்களுக்கே தரப்பட்டன.
15. பார்ப்பனர் அல்லாத பெரும்பாலோர்களாக இருந்த உத்தியோகங்களின் சம்பளங்களை எல்லாம் குறைத்தார்.
16. சென்னை அய்க்கோர்ட்டில் காலியான அபிஷியல் அசைனி (Official
Assignee) என்ற ஒரு பதவிக்கு தமிழருக்குத் தரப்படாமல் திரு.வி.தியாகராஜ அய்யர் என்ற பார்ப்பனருக்கே அளிக்கப்பட்டது.
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக