செக்ஸ் சாமியார் என்று சாதாரண மக்களால் முச்சந்திகளில் பேசப்படும் சதுர்வேதி என்ற பார்ப்பனர் சென்னை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைச் சாலையில் அவர் அடிக்கும் லூட்டி பற்றி ஏடுகள் சாங்கோ பாங்கமாகத் தெரிவிக்கின்றன.
கைதிகள் மத்தியில் பக்தி வெள்ளத்தை அப்படியே கரைபுரண்டு ஓட விடுவதாகவும், தியாகராய பாகவதர் பாடல்களைக் கம்பீரமாகப் பாடுவதாகவும், பல தந்திர காட்சிகளைச் செய்து காட்டி பார்ப்பவர்களை அசத்துவதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.
இவற்றைப் பார்க்கும்பொழுது சென்னை மத்திய சிறைச்சாலையா, சதுர்வேதி போன்ற காலிகளின் பொழுதுப்போக்கு பூங்காவா என்கிற கேள்வி எழுகிறது.
இவ்வளவெல்லாம் பேசுகிறீர்கள் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டிருக்கலாமா? என்று சகக் கைதிகள் கேட்டனராம்; நான் என்ன செய்யட்டும்; பக்தைகளாகிய பெண்கள்தான் என்னிடம் தானாக வந்து உடலுறவு கொண்டார்கள் என்றெல்லாம் சொன்னதாக ஏடுகள் செய்தி வெளியிடுகின்றன.
அசல் காலியாக இருந்து கொண்டு, பக்தி வேடம் போடுவதாலேயே எதையும் சொல்லலாம் என்கிற நினைப்பில் மிதக்கிறார் போலும்!
இந்த ஆள் தெரிந்து வைத்திருக்கும், பயிற்சி பெற்றிருக்கும் சில மேஜிக் காட்சிகளில் கைதிகள் மயங்கி இருக்கக் கூடும்; புட்டபர்த்தி சாயிபாபாவின் பாணி இது!
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த எத்தனையோ தோழர்கள் இவை மந்திரமல்ல
தந்திரமே என்று செய்முறைகள் மூலம் மக்கள் மத்தியில் தோலுரித்துக் காட்டுகிறார்கள் அவர்கள் நினைத்திருந்தால் மக்களை ஏமாற்றிக் காசு பறித்து விடலாமே! பகுத்தறிவுவாதிகளாகவும், தந்தை பெரியாரைத் தத்துவத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்களாகவும் இருப்பதால், உண்மை நிலையின் அடிப்படையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அயோக்கியர்கள் இதனைத் தங்கள் மோசடிகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
சிறைச்சாலைக்கு அனுப்புவது, குற்றவாளிகள் திருந்தவேண்டும் என்பதற்காகத் தானே தவிர, அவர்களை மேலும் குற்றவாளியாக்குவதற்காக அல்ல!
அந்த வகையில் சதுர்வேதியை மற்ற கைதிகளுடன் கலக்க விடாமல் தனிமைப்படுத்துவது தான் உத்தமம்! இவர் விடயத்தில் சிறை அதிகாரிகள் சிறை விதிகளைத் தளர்த்தாமல் இருப்பது நல்லது முக்கியமும்கூட!
9.12.2004 (விடுதலை ஒற்றைப்பத்தி -
2) நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக