தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தாம் - தெரிவித்துள்ளார் அண்ணா திமுக பொதுச் செயலா-ளர் செல்வி ஜெயலலிதா.
உண்மையிலே அண்ணாவின் கொள்கையை ஏற்பவராகவிருந்தால், அண்ணாவின் சிந்தனைகள்பற்றிய அடிப்படை ஞானமிருந்தால், சித்திரையை முதல் நாளாகக் கொண்ட பழைய பத்தாம் பசலித்தனமான பார்ப்பனீய ஆண்டுப் பிறப்புக்கு வாழ்த்துக் கூறுவாரா?
விக்ருதி என்று இந்த ஆண்டுக்குப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளதே இந்த சொல் தமிழ்தானா?
இந்த ஒரு சொல் இருக்கட்டும்; - 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்றே ஒன்று கண்ணே கண்ணென்று தமிழில் சொல்லுவதற்கு தப்பித் தவறி ஒரே ஒரு சொல் உண்டா?
இதற்கென்று ஒரு வரலாற்றுப் பின்னணியாவது உண்டா? துருநாற்றம் பிடித்த
கேவலமான ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்த பிள்ளைகள் என்று பார்ப்பனீயத்துக்கே உரித்தான ஆபாசக் கற்பனையில் உருவகப்படுத்தப்பட்டுள்ள புராணக் குப்பையைக் கோபுரத்தில் தூக்கி வைக்க ஆசைப்படலாமா?
இதைவிட தரம் தாழ்ந்த மூடநம்பிக்கை ஒன்று இருக்க முடியாது என்று சொல்லும் அளவுக்குள்ள ஒன்றுக்காக வாழ்த்துக் கூறுகிறார் முன்னாள் முதல்வர் என்றால் இதன் பொருள் என்ன?
இந்த அம்மையார் அய்யா, அண்ணா பெயரை உச்சரிப்பதே அவசியத்துக்கும் அவசரத்துக்கும், ஊரை ஏமாற்றுவதற்கும்தானே தவிர, மற்றபடி அந்தரங்கத்தில் ஆரிய சொரூபம் தான் அவருக்கானது என்பது அப்பட்டமாக விளங்கிடவில்லையா?
சரியான சந்தர்ப்பத்தில் எல்லாம் சரியாகத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்கிறார் இந்த ஆரியக் குலத் திலகம்!
அண்ணா திமுகவில் உள்ள திராவிட இயக்கக் கொள்கைகளில் நம்பிக்கையுள்ள ஒரே ஒருவராவது அக்கட்சியில் இருப்பாரேயானால், இந்த நிமிடம் முதற்கொண்டே அந்தத் தலைமையை உதறி எறிந்த வெளியில் வந்து தன்மான உணர்வைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டாமா?
அது சரி,
மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் சகோதரர் வைகோவும் அம்மையாருடன் சேர்ந்து புத்தாண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறாரே
எங்கே போய் முட்டிக் கொள்ள? வைகோ அவர்கள் அணிந்திருக்கும் கறுப்புச் சால்வை அவரைக் கேலி பேசாதா?
14.4. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக