திங்கள், 17 ஜூலை, 2017

கார்ட்டூன்


கருமாதி பத்திரிகை என்று மக்கள் மத்தியில் அழைக்கப்படும் தினமலர் கார்ட்டூன் ஒன்றை (10.12. 2010 வெளியிட்டுள்ளது.

ராஜா வீட்டுல சி.பி.அய். ரெய்டு பண்ணியதைக் கண்டிச்சு முதல்வருக்கு முன்னாடி உங்களோட அறிக்கை வருமே. ஏன் இன்னும் வரலைன்னு பிரஸ்காரங்க கேக்குறாங்கய்யா! என்று திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களிடம் தொலைப்பேசியில் கேட்பது போன்ற கார்ட்டூன் இது.

. இராசா மீது விசாரணை நடத்துவது பற்றியோ, அவர் உண்மையில் தவறு செய்திருந்தால் தண்டிப்பது பற்றியோ தங்களுக்கு எந்தவித ஆட்சேபணை ஏதும் இல்லை என்று முதல் அமைச்சர் கலைஞர் அவர்களும் சரி, திராவிடர் கழகத் தலைவரும் சரி மிக வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார்கள். இதனை அறிந்திருந்தும் தினமலர் இப்படி கார்ட்டூன் போடுவது பார்ப்பனர்களுக்கே உரித்தான கீழ்த் தரமும் - கோமாளித்தனமும் - விஷமப் புத்தியுமாகும்.

தினமலரின் பார்ப்பனப் புத்திக்கு எத்தனையோ எடுத்துக் காட்டுகளைக் கூறமுடியும்.
ஒரு பானை சோற்றுக்கு இதோ ஒரே ஒரு சோறு பதம்!

புகுந்தது சி.பி.அய்.
மாஜி மந்திரி ராஜா
உயர் அதிகாரிகள் வீடு களில் ரெய்டு
டில்லி, சென்னை, பெரம் பலூர் ஒரே நேரத்தில் அதிரடி
ராஜாவின் ஊட்டி ஆபீஸ் வெறிச்
இப்படியாகத் தலைப்புகள் (9.12. 2010 )

அதே நாள் கருமாதிப் பத்திரிகையில் 15 ஆம் பக்கத்தில் ஒரு செய்தி.

காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோயில் கருவறைக்குள் பக்தைகளிடம் சல்லாபமாடி, காமலீலைகள் புரிந்து, உட லுறவு கொண்டு, செல்போன் படமும் எடுத்து, அதனை அடிக்கடி காட்டி மிரட்டி, மீண்டும் மீண்டும் கோயில் கருவறைக்குள் காமவெறிக் கடலில் குதித்தகயவாளி - மனித மிருகம் தேவநாதன் பற்றி தினமலர் அதேநாளில் எப்படி செய்தி வெளியிட்டிருக்கிறது தெரியுமா?

என்மீது போடப்பட்ட வழக்கு அனைத்தும் பொய் யானவை

- நீதிபதி கேள்விக்கு அர்ச்சகர் தேவநாதன் பதில்.

அவ்வளவுதான்!

இராசா மீது குற்றம் என் பது வெறும்யூகம்தேவ நாதன் மீது குற்றம் என்பது ஊர் சிரித்த கதை - செல்போனே சாட்சி!

ஆனால் .இராசா பற்றிய செய்தியை வெளியிடும்போது வெறிச்சிடுகிறது. கருவறையில் கருவை உருவாக்கிய தேவநாதன் பற்றி செய்தி வெளியிடும் போது 15 ஆம் பக்கத்தில் ஒப்புக்காக- அதுவும் தான் குற்றமற்றவன் என்ற பாணியில் செய்தி வெளியிடுகிறது என்றால், இதற்குப் பெயர் தான் பார்ப்பனத் தனம் என்பது. இராசா தலித் என்பதால் இந்த விஷமம் என்பது - என்ன புரிகிறதோ!

11.12. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3


ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...