ஜெர்மனியில் போர் துவக்கி நடத்தி வெகுவேகமாக முன்னேறிய ஜெர்மனி சர்வாதிகாரி அடால்ஃப் இட்லர், தான் ஜெர்மானியன் என்பதைவிட ஆரிய இனத்தின் பெருமைமிக்க பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதோடு, ஆரிய இனத்தின் மேன்மைக்குப் பாடுபட்ட அவர்களை உலகின் முதல் நம்பர் குடிமக்களாக்குவதே தமது நாடு பிடிக்கும் நோக்கம் என்று ஆணவத்துடன் பிரகடனப்படுத்தினார். ஜெர்மனியில் சமஸ்கிருதத்தினை கட்டாயப் பாடமாக்கி அரசு ஆணைகள் பிறப்பித்தார் இட்லர். நாசிசத்தின் உயிர்நிலையே அதில்தான் உள்ளதாகப் பிரகடனம் செய்தார் இட்லர்! ஆரிய இனம் கலப்பின்றி பாதுகாக்கப்பட்டாக வேண்டும். ஆகவே, வேறு இனக் கலப்புள்ள திருமணங்கள் நடைபெறவே கூடாது என்ற அவைகளுக்குத் தடை விதித்தார். (அவரது சுவஸ்திக் சின்னம்தான் இன்றைய இனவெறி ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் சின்னம் ஆரிய வர்த்தம், சமஸ்கிருத கலாச்சாரம் இவைதான் ஆர்.எஸ்.எஸ்.
இந்து முன்னணி இவைகளுடைய லட்சியமும்கூட)
பிரிட்டிஷ் அரசு கல்வி மற்றும் ஜாதி ஒழிந்த பல சீர்த்திருத்தங்கள், சதி என்ற உடன்கட்டை ஏறுதலை ஒழித்தல் போன்றவைகளைச் செய்து ஆரிய
(மனு)
தத்துவங்களுக்கு விரோதமான வகையில் செயல்பட்டதால், பார்ப்பனர்கள் தேச பக்தி என்ற பெயரால் மனுபக்தி, பார்ப்பன மேலாண்மையை பாதுகாக்கச் செய்தனர்!
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக