ஞாயிறு, 16 ஜூலை, 2017

ஜப்பான்


ஜப்பான்காரன் பர்மாவைப் பிடித்து கல்கத்தா வரையில் வந்தபோது, சென்னை மயிலாப்பூர், மாம்பலத்தில் உள்ள பார்ப்பனர்கள் அந்த இரண்டு மொழிகளையும் படிக்கவே ஆரம்பித்தனர் என்பது யாருக்குத்தான் தெரியாது? விடுதலை ஆசிரியர் குத்தூசி குருசாமி அவர்களே அரசு ஏடாக அது தொடர்ந்தபோதும் ஆசிரியராகத் தொடர்ந்தார். நமது பட்டுக்கோட்டை சுயமரியாதைத் தளபதி அண்ணன் அழகிரி அவர்கள் எல்லாம் போர்ப் பிரச்சாரகர்களாக (War Propagandists)  நியமனம் பெற்றே பணி புரிந்தார்கள்.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மானிய இட்லர் வெற்றி பெற்று இருந்திருப்பாரேயானால், இந்தியாவுக்கு சுதந்திரம் என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்பதை நடுநிலை வரலாற்று ஆசிரியர்களேகூட இப்போதும் ஒப்புக் கொள்கிறார்கள்.

தனது கொள்கையான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பிலிருந்து திராவிட சமுதாயத்தை நாட்டைக் காப்பாற்ற இது சிறந்த வழி என்பதை, எதையும் முன்னோடியாக சிந்திக்கும் தந்தை பெரியார் அவர்கள் இப்படிச் சிந்தித்துச் செயல்பட்டார்கள்.

பாமர மக்கள் வழியிலே சென்று சிந்திப்பதைவிட அவர்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று அறிவுறுத்தும் வகையிலேயே அவரது அணுகுமுறைகள் எப்போதும் அமையும் என்பதற்கு இரண்டாம் உலகப் போரில் அவர் பிரிட்டிஷ் அரசுக்கு ஒத்துழைத்ததே சிறந்த எடுத்துக்காட்டாகும். அதுதான் உண்மையான நாட்டு நலத்தில், மக்கள் நலத்தில் அக்கறையுள்ள ஒரு செயல்! விடுதலை ஏன் அரசு ஏடாக ஒரு கால கட்டத்தில் வெளிவந்தது என்பதற்கான மூலகாரணம் இப்போது விளங்குகிறதா?

(திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய  விடுதலை போர்ப் பிரச்சார ஏடு ஆனது ஏன்?  - விடுதலை பவள விழா மலர் பக்கம் 84-86)

நூல் : பார்ப்பன புரட்டுக்குப்பதிலடி

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...