வெள்ளைக்கார அதிகாரியான ஆஷ் துரையைச் சுட்டுவிட்டதால் வாஞ்சி தியாகி ஆகிவிட்டாரா? இது போன்ற வன்முறைகளை மற்ற மற்ற விஷயங்களில் இந்தப் பார்ப்பனர்கள் ஆதரிக்கிறார்களா?
ஆஷ் துரையை வாஞ்சிநாதன் எதற்காகச் சுட்டார்? சுட்ட வாஞ்சிநாதனின் சட்டைப் பையில் இருந்த கடிதம் காட்டிக் கொடுத்துவிட்டதே!
ஆங்கில சத்துருக்கள் நமது தேசத்தைப் பிடுங்கிக் கொண்டு அழியாத ஸனாதன தர்மத்தைக் காலால் மிதித்துத் துவம்சம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு இந்தியனும், தற்காலத்தில் தேசச் சத்துருவாகிய ஆங்கிலேயனைத் துரத்தி, தர்மத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட முயற்சி செய்து வருகிறான்.
எங்கள் ராமன், சிவாஜி, கிருஷ்ணன், குரு கோவிந்தர், அர்ஜூனன் முதலியவர் இருந்து தர்மம் செழிக்க அரசாட்சி செய்து வந்த தேசத்தில், கேவலம் கோமாமிசம் தின்னக்கூடிய ஒரு மிலேச்சனாகிய ஜார்ஜ், பஞ்சமனை முடி சூட்ட உத்தேசம் செய்து கொண்டு, பெரு முயற்சி நடந்து வருகிறது. அவன் எங்கள் தேசத்தில் காலை வைத்த உடனேயே அவனைக் கொல்லும் பொருட்டு 3000 மதராசிகள் பிரதிக்கினை செய்து கொண்டிருக்கிறோம். அதைத் தெரிவிக்கும் பொருட்டு அவர்களில் கடையேனாகிய நான் இன்று இச்செய்கை செய்தேன். இதுதான் இந்துஸ்தானத்தில் ஒவ்வொருவனும் செய்ய வேண்டிய கடமை.

இப்படிக்கு,
ஆர்.வாஞ்சி அய்யர்.
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
நூல் : பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.புங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக