ஞாயிறு, 16 ஜூலை, 2017

மனிதநேயம்!


என்னே மனிதநேயம்! நினைத்துப் பார்க்கவே உடல் அணுக்கள் எல்லாம் சிலிர்த்துப் போகின்றன. நெஞ்சில் ஓர் இதமான மெல்லிய காற்று பூவிதழைக் கொண்டு வருடுகிறது.

இந்த நிலையிலும் இப்படியொரு மன நிலையா? நம்புவதுகூட கஷ்டமாகத்தானிருக்கிறது. என்றாலும், நம்பித்தானே ஆகவேண்டும்  நடந்தது உண்மையாக அல்லவா இருக்-கிறது!

திருச்சி திருவானைக்-காவலைச் சேர்ந்த ராஜகோபால் (வயது 35), அன்னபூரணி (வயது 28) இணையருக்கு ஓர் ஆண் மகவு திருச்சி காட்டூர் பகுதி தனியார் மருத்துவமனையில் பிறந்து குடும்பத்தினரைக் குதூகலிக்கச் செய்தது. அந்தக் குதூகலம் குறுகிய காலத்தில் மூச்சை இழந்துவிட்டது

ஆம், மூச்சுத் திணறலால் சிசு மரணத்தைத் தழுவிக் கொண்டது. அந்த அதிர்ச்சியைப் பெற்றோர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. துடியாய்த் துடித்தனர். அழுது புரண்டனர்... அந்த நேரத்திலும் ஒரு மின்னல் வெட்டுப் போன்ற சிந்தனைக் கீற்று அவர்களை மனிதநேய வரலாற்று வானில் மிக உயர்ந்த பெருமைக்குரிய இடத்தில் கொண்டுபோய் நிறுத்திவிட்டதே!

தன் சிசு மண்ணில் புதைந்துபோய்விடக் கூடாது; அல்லது நெருப்பின் நாக்குக்கு இரையாகி-விடக் கூடாது. அதற்கு என்ன செய்யவேண்டும் என விரைந்து முடிவெடுத்து, குழந்தையின் உடல் உறுப்புகளைக் கொடையாகக் கொடுக்க முன்வந்தனராம். கண்களையும் அளித்திருக்கின்-றனர்.

இதல்லவா மனிதநேயம்! அழுது புரண்ட தருணத்திலும் தன் குழந்தையின் உடலுறுப்புகள்மூலம் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் வேறு குழந்தைகளுக்குப் பயன்படட்டுமே என்ற எண்ணம் சாதாரணமானதல்ல.

கொள்கை ரீதியாக தந்தை பெரியாரியலை வரித்துக்கொண்டவர்கள் திராவிடர் கழகத்துக்காரர்கள். இதற்கொரு முனைப்பை மக்கள் மத்தியில் மூட்டி வந்துகொண்டிருக்கின்றனர்.

திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் அசோகன் புஷ்பாஞ்சலி இணையினர், விபத்தில் மரணத்தைத் தழுவிய தன் அருமருந்தன்ன மகன் ஹிதேந்திரனின் உடலுறுப்புகளைத் தானம் செய்ய முன்வந்தபின், இந்தத் திசையில் ஒரு பெரிய பாய்ச்சல் நிகழ்ந்து வருகிறது என்பது பேருண்மையாகும்.
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பெருமக்கள் மரணத்திற்குப் பின் மருத்துவமனைக்கு உடல் கொடை அளிப்பது நாளும் பெருகி வருகிறது.

நெருப்பில் சுடவேண்டும்; அஸ்தியைப் புனித நீரில் கரைக்கவேண்டும் என்ற மூடத்தனங்களும் ஒரு வகையில் புதைகுழிக்குப் போவது வரவேற்கத்தக்கதே!

18.1. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,


ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...