ஆச்சாரியாரைப் பெரும் தியாகி என்பார்கள். 1942ஆம் ஆண்டு போராட்டத்தின் போது காங்கிரசைக் காட்டிக் கொடுத்தவர். ஆகஸ்டு துரோகி என்று காங்கிரஸ்காரர்களே தூற்றினர்.
அப்படிப்பட்ட ராஜாஜிதான் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல். அவர் பேராசைக்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு: 1973-74ஆம் ஆண்டில் ஆச்சாரியாரின் பென்ஷன் முதலியன குறித்த கோப்புகளை கண்ணுறும் வாய்ப்புள்ள ஒருவர் கூறியது: ராஜாஜி அவர்கள் கவர்னர் ஜெனரலாக இருந்து ஓய்வு பெற்றார். தான் நெடுங்காலம் வாழப் போவதாகவும் அக்காலம் முழுதும் தனக்கு வரவேண்டிய பணி ஓய்வுக்காலத் தொகைகளை கணக்கிட்டால் கிண்டி ராஜ்பவனத்தின் மதிப்பை விடக் கூடுதலாக வரும் என்றும்; எனவே அரசு கிண்டி ராஜ்பவன் நிலம் முழுதும் தனக்குக் கொடுத்துவிட வேண்டும் எனக் கேட்டிருந்தார். இந்தக் கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டது. எப்படி இருக்கிறது?
(குங்குமம் 7.4.2000)
நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி
ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக