தமிழர்கள், பொதுவில் ஏராளமாகப் பிராமணர்களின் மத விஷயங்கள் தெரியாமலே இருந்து வருகிறார்கள்.
பிராமணர்களின் புரோகிதத்தைத் தெரிந்தும் தெரியாமலுமிருக்கிற ஜனங்களின் நம்பிக்கைகளைப்பற்றி, தோழர் சாஸ்திரியார் என்ன சொல்லுகிறார்? இந்துமதமென்பது அர்த்தமற்றது, முடிவு இன்னதென்பதே தெரியாததுமான அன்னிய வார்த்தை. இந்துக்கள் என்ற ஜாதியாருக்குப் பொதுவாகக் கோட்பாடு என்ன என்பதைச் சொல்லுவாரா? புத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள், இன்னும் மலையில் வாசம் செய்யும் கலைஞர்கள் எல்லோரும் வித்தியாசமில்லாமல் இந்துக்கள் என்று சொல்லுகிறார். எல்லோரும், ஒருவரை ஒருவர் ஒத்துக்கொள்ளாமல் இருப்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. புத்தர்களும், ஜைனர்களும், பிராமணர்களுக்குரிய வேதத்தையும் அதன் கிரியைகளையும், கண்டிப்பாக ஒத்துக்கொள்ளுவதில்லை.
பிராமண மதத்திற்கு உறைவிடமாயுள்ள ஜாதி வித்தியாசம், புத்தர்களுக்கும் ஜைனர்களுக்கும் கிடையாது. இப்படி இருந்தும்கூட, இவர்களை இந்து மதஸ்தர்கள் என்று சொல்லுகிறார். இதைவிட உண்மையில்லாததும் யோக்யதை இல்லாததும் அர்த்தமில்லாததுமான வார்த்தை ஏதாவது உண்டா? இதுதானா தென்னிந்தியாவிலுள்ள சகல ஜனங்களின் பொதுமதம் என்று சொல்லும் யோக்யதை?
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக