``இந்து என்ற பதத்திற்கு இதுவரை ஆராய்ச்சியாளர்களும், சரித்திரம் எழுதினோரும், அகராதிக்காரர்களும் கொடுத்துள்ள பொருள் என்ன என்று கேட்கிறோம்.
படித்த எவரிடமும் உள்ள ஜெம் அகராதியில் ((Gem
Dictionary)) பார்க்கட்டும். மேதாவிகளுக்குத் தோழன் எனக் கருதப்படும் சேம்பர்ஸ் (Chambers) அகராதியைப் பார்க்கட்டும். பல நாட்டுத் தகவல்களைத் தொகுத்துத் தரும் என்சைக்ளோ பீடியாக்களைப் பார்க்கட்டும். ``இந்து என்பதற்கு என்ன பொருள் தரப்பட்டு இருக்கிறது என்பது விளங்கும்! ஒரு டி.ஏ. சாமிநாதய்யர் என்பவர் வெளியிட்டாரே (Gem ) ஜெம் அகராதி, அதில், `இந்து என்பதற்கு 467-ஆம் பக்கத்தில் பொருள் கூறப்பட்டிருக்கிறது, யாது அப்பொருள்?
இந்து என்றால், சனாதன தர்மானுசாரி! இந்துஸ்தானம் என்பதற்குப் பியர்ஸ் என்சைக்ளோபீடியா தந்துள்ள பொருள், இமயத்துக்கும் விந்தியமலைக்கும் இடையே உள்ள பிரதேசத்தில் ஒரு பகுதி என்பதாகும். இந்து என்பது ஆரியரையும், இந்துஸ்தானம் என்பது ஆரியவர்த்தத்தையும் குறிக்கும், இதைச் சாஸ்திரியார் மறுக்க எந்த ஆதாரத்தையும் - அவரது ஆத்திரத்தைத் தவிர காட்டுவதற்கில்லை.
5-2-1946-இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முக்கியமான தீர்ப்பு
ஜீவனாம்சம்
கலப்புமணம் செல்லாது ஜானகிராமமூர்த்தி என்ற பார்ப்பனர், 16-9-1926-இல் நீலா வெங்கடசுப்பம்மா என்ற
பெண்ணைச் சென்னையில் மணந்தார். இப்பெண் ஓர் ஆரம்பப் பள்ளிக்கூட உபாத்தியாயினி. இவருக்கும் மேற்படி ராமமூர்த்திக்கும்
இரு குழந்தைகள் உண்டு. இவர் இரண்டாவது மனைவி. முதல் மனைவி பார்ப்பன மாது.
ஜானகி ராமமூர்த்தி இறந்தவுடன், அவருடைய
மனைவி இல் நீலா வெங்கடசுப்பம்மா தன் 2 குழந்தைகளுக்கும் தனக்கும் ஜீவனாம்சம் கொடுக்குமாறு, பார்ப்பன மனைவி மீது வழக்குத் தொடர்ந்தாள். ஜில்லா நீதிபதி, இரண்டாவது மனைவிக்கும் அக்குழந்தைகளுக்கும் மாதம் 20 ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்குமாறு தீர்ப்புச் செய்தார். பார்ப்பன மனைவி அத்தீர்ப்பை எதிர்த்து, உயர்தர நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாள். இவ்வழக்கை பாண்டுரங்கராவ், சோமையா ஆகிய இரு பார்ப்பன நீதிபதிகளும் விசாரித்தனர். இறுதியில் இந்தக் கலப்புமணம் செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டனர். இதுபோன்ற ஒரு கலப்புமண வழக்கில், பார்ப்பனரல்லாத நீதிபதி வெங்கடசுப்பாராவ் கூறியுள்ள தீர்ப்பையும் தவறானது என்று குறிப்பிட்டுவிட்டனர்.
(5-2-1946-இல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவர் செய்த ஒரு முக்கியமான தீர்ப்பு)
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக