ஞாயிறு, 16 ஜூலை, 2017

அந்தக் குழந்தை!


ஹமாம் சோப் விளம்பரம் ஒன்று தொலைக்காட்சிகளில் வருகிறதே கவனித்தீர்களா? கவனித்தாலும் அதில் கேரம் விளையாடும் பார்ப்பனர் உச்சரித்த வார்த்தைகளைக் கேட்டீர்களா?

அப்படியெல்லாம் கூர்மையாக எங்கே கவனிக்கப் போகிறீர்கள்? எதைக் கவனிக்க வேண்டுமோ அதைக் கவனிக்க மாட்டீர்கள்; வேறு ஏதாவது அரைகுறைச் சமாச்சாரங்கள் என்றால் கவனம் வெகு ஜோராக இருக்கும்.

ஒரு பார்ப்பனக் குடும்பம். குடும்பத்துச் சிறுமியின் கையில் சொறி ஏற்படுகிறது என்ன காரணம்? எப்படி வந்தது என்று ஆராய்ச்சி. ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொல்லுகிறார்கள்.

தெரு நாயோடு விளையாடினால் சொறி வரத்தான் செய்யும் என்கிறார் பணிப்பெண்! ஹமாம் சோப் இருக்க ஏன் பயம் என்று சொல்ல வருவது விளம்பரம்.

சரி... அந்தப் பெரிய மனுஷாள் மாமனார் என்ன சொன்னா?

அதுதான் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டியது.

ஆட்டோவில் அந்தக் குழந்தைகளோட ஒட்டிண்டு போறாளே அதுதான் காரணம்! என்று அந்தக் கொலம்பஸ் கண்டுபிடித்துச் சொன்னார்.

அந்தக் குழந்தைகளோடு... அர்த்தம் புரிகிறதா? அக்ரகாரத்துச் சிறுமி அந்தக் குழந்தைகளோட அதாவது சேரிக் குழந்தைகளோடு ஒட்டிண்டு போறாளாம்.

சேரிப் பொண்ணுன்னா அவாள் கண்ணோட்டத்தில் சுகாதாரம் அற்றவள், சொறிபிடித்தவள். அப்படிப்பட்ட அந்தப் பெண்ணோடு ஒட்டிக்கொண்டு போனதாலேதான்  நம்ப ஆத்துப் பொண்ணுக்கு இந்தச் சொறி என்பதைத்தான் சொல்லாமல் சொல்ல வருகிறார்.

இந்த விளம்பரத்தைத் தடை செய்யவேண்டும் என்பது ஒரு பக்கம்; இதற்குக் காரணமானவர்கள்மீது தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கேள்வியை எழுகிறதே! செய்வார்களா?

11.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...