அக்காலத்தில் பொதுமக்கள், தங்கள் விருப்பம்போல் பல வேறு தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அதனால் அவர்களுக்குள் வேறுபாடோ, வெறுப்போ பிரிவினையோ இல்லாமல், எல்லோரும் ஒரே குடும்பத்தினர்போல ஒரே இனமாக ஒற்றுமையுடனும் சகோதரபாவத்துடனும் ஒழுகி வந்தனர். இது தமிழ் நாகரிகத்தின் மாண்பு. ஆரியர் வந்த பிறகுதான் மேலே குறிப்பிட்டபடி தமிழ்நாட்டில் சாதி வித்தியாசங்களும், மத வேற்றுமைகளும் மதத் துவேஷமும் வளர்ந்து, தற்காலச் சிறுமை நிலை ஏற்பட்டது. இதெல்லாம் ஆரியர் சேர்க்கையால் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள மதத்தான கேடு!
இந்தச் சீர்கேடும், சிறுமை நிலையும் நம் முன்னோர் காலத்தில் உள்ளதல்ல என்பதும், இடைக்காலத்திலே ஆரியர் வரவால் உண்டானதென்பதும், மேற்குறிப்பிட்ட எடுத்துக்காட்டால் தெற்றென விளங்குகிறது.
இதற்கு ஆதாரமாக இதுபோன்ற நூற்றுக்கணக்கான சான்றுகள் சரித்திரத்திலிருந்து எடுத்துக் காட்டலாம். ஆகவே முன்னோர் வழக்கம் என்று தவறாக எண்ணிக் கொண்டு, ஆரியச் சிறுமை நிலைகளுக்கு இடங்கொடுக்க வேண்டிய தில்லை. தமிழ்ப் பெருமக்கள், ஆரியச் சூழ்ச்சியினால் மறந்துபோன, மறைந்து கிடக்கும் பழந்தமிழ் நாகரிகத்தை, அன்றாட வாழ்க்கையில் நடைமுறைக்குக் கொண்டுவர, ஒவ்வொரு வழியிலும் முற்பட வேண்டும்..
நூல் : ஆரியமாயை
ஆசிரியர் “ அறிஞர் அண்ணா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக