ஞாயிறு, 16 ஜூலை, 2017

பெர்ட்ரண்ட் ரஸல்


உலகப் புகழ்பெற்ற நாத்திகரான பெர்ட்ரண்ட் ரஸல் அவர்களின் பிறந்த நாள் இன்று (18.5.1872). 98 ஆண்டுகள் வாழ்ந்து காட்டி மத நம்பிக்கையாளர்களை பிரமிக்கச் செய்தவர்.

சிறுவயதில் ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டு இருந்தவர்தான். இதுபற்றி ரஸல் கூறுகிறார்:

இளம் பருவத்தில் இருந்தபோது நான் ஆழ்ந்த மத உணர்ச்சி கொண்டவனாக இருந்தேன். கணிதம் நீங்கலாகவோ என்னவோ மற்ற எந்த ஒரு துயைக் காட்டிலும் அதிகமாகவே மத விஷயத்தில் ஆர்வமுள்ளவனாகவே இருந்தேன். அப்படிப்பட்ட ஆர்வமே அதை நம்புவதற்குக் காரணம் உண்டா என்ற கேள்வியை ஆராயச் செய்தது. அதனால் அந்த ஆர்வம்  அடிக்கடி அப்படித் தூண்டுவதில்லை. கடவுள், மரணமற்ற தன்மை பற்றி ஆய்ந்தேன். ஒவ்வொன்றையும் ஆய்வு செய்ததில் இவற்றை நம்புவதற்குக் காரணம் ஏதுமில்லை என்று உணர்ந்தேன் என்று குறிப்பிடுகிறார்.

மரணத்திற்குப் பிறகு நம் நிலை என்ன? மோட்சத்துக்கா, நரகத்துக்கா? என்ற கேள்வி மனிதனை சஞ்சலப்படுத்துகிறது. இது குறித்து ரஸல் கூறுகிறார்:

மரணத்திற்குப் பிறகு உடல் சிதைகிறது என்பதை நான் அறிந்துள்ளேன். அவ்வாறு உடல் சிதைந்து அழிந்த பிறகும் மனம் மட்டுமே செயல்படுகிறது என்று எண்ணுவதற்குக் காரணம் இல்லை என்று கறாராகக் கூறுகிறார் ரஸல்.

நான் ஏன் கிறிஸ்தவன் அல்ல? (Why I am not a Chiristian)என்ற நூல் உலகப் புகழ் பெற்றது. கிறித்துவ உலகத்தில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

இந்நூலை தமிழில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கிறிஸ்துவுக்குப் பசியாக இருந்ததாம். அத்தி மரம் ஒன்று தூரத்தில் தெரிந்ததாம். தின்பதற்கு ஏதாவது பழங்கள் இருக்கும் என்று அதன் அருகில் போனாராம். ஆனால் இலைகளைத் தவிர அதில் ஒன்றும் இல்லையாம். உடனே ஏசு என்ன செய்தார் தெரியுமா? உன்னுடைய பழத்தை ஒருவருமே இனிமேல் சாப்பிடாமல் போகக் கடவது... என்று சாபமிட்டார். அந்த அத்தி மரமும் உடனே பட்டுப் போய்விட்டதாம்! எவ்வளவு வேடிக்கைக் கதை பார்த்தீர்களா? பழம் பழுக்கும் பருவ காலம் வராமல் இருந்ததற்காக மரத்தின்மீது கோபித்துக் கொள்வது நியாயமா? இதிலிருந்து ஏசுவானவர் புத்தியிலாகட்டும், நற்குணத்தில் ஆகட்டும், சரித்திரத்தில் கூறப்பட்ட சில மனிதர்களை விட எவ்விதத்திலும் மேம்பட்டவர் அல்லர் என்று அந்நூலில் கூறுகிறார் ரஸல்.

வளமான சிந்தனை உள்ளவர்கள்தான் இப்படிப் பலமாக சிந்திக்க முடியும் அப்படித்தானே!

18.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3

நூல் : ஒற்றைப்பத்தி - 3

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...