இரண்டாம் உலக யுத்தத்தில் ஜெர்மனியின் ஹிட்லரை முறியடித்த வெற்றியின் 65 ஆம் ஆண்டு விழா சென்னை ருசிய கலாச்சார மற்றும் அறிவியல் மய்யத்தில் 4.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3 மாலை நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு இருந்த திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.
வீரமணி அவர்கள் தமது உரையினூடே ஒரு தகவலைப் பதிவு செய்தார்.
இரண்டாம் உலகப் போரின்போது சென்னையில் மயிலாப்பூர் வாசிகள் ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள் என்பதுதான் அந்தத் தகவலாகும். அது ஏதோ போகிற போக்கில் சொல்லப்பட்ட தகவல் அல்ல.
இரத்த வெறியன் இட்லர் தொடங்கிய இரண்டாம் உலகப் போரில் (1939 45) உயிர் இழந்தோர் எண்ணிக்கை 5 1/2 கோடியாகும். அது போக அவன் சித்திரவதை செய்து அநியாயமாகக் கொன்ற அப்பாவி யூத மக்கள் எண்ணிக்கை 60 லட்சமாகும். இரக்கமென்று ஒரு பொருள் இலாத அத்தகைய கொடியவன் அப்போரின் முற்பகுதியில் பெற்ற வெற்றிகளை வரவேற்று இந்திய நாட்டிற்குள் எப்பொழுது ஜெர்மன் படைகள் நுழையும் என்று நடை பாவாடை விரிக்கத் துடித்துக் கொண்டு இந்தியாவில் ஒரு தேசத் துரோகக் கூட்டம் இருந்திருக்குமா என்று ஆச்சரியப்படுகிறீர்களா? ஆம், இருந்தது! அக்கூட்டத்தினர்தான் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள். இரண்டாவது உலகப் போரின் தொடக்க ஆண்டுகளில் அவர்கள் விழுந்து விழுந்து ஜெர்மன் மொழி படித்ததை தந்தை பெரியார் அவர்கள்அடிக்கடி கூறி வந்துள்ளார். இச் செய்தியை அப்பொழுது இந்திய அரசில் அதிகாரியாகப் பணியாற்றிய பெர்சிவல் ஸ்பீயர் என்பவர் 1981 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள தமது இந்திய நினைவுகள் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
(1940 ஜூன் மாதம்) பிரான்ஸ் வீழ்ந்தபொழுது தென்னாட்டில் சில தந்திரக்காரப் பார்ப்பனர்கள் ஜெர்மானியர்கள் விரைவில் இந்தியாவைப் பிடித்துவிட விருப்பதால், அதற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்வதற்காக (வேறு எதற்கு? ஜெர்மானியருடைய கைக்கூலிகளாக, கங்காணிகளாக இருக்கத்தான்!) ஜெர்மன் மொழியைக் கற்று வருவதாகச் சொல்லப்பட்டது.
பின்னர் 1942 முற்பகுதியில் இட்லரின் கூட்டாளிகளான ஜப்பானியப் போர் வெறியர்கள் சிங்கப்பூர், பர்மா ஆகியவற்றையெல்லாம் பிடித்து முன்னேறி வருகிறார்கள் என்றவுடன் அந்த ஜெர்மன் பார்ப்பனர்கள் ஜப்பானிய மொழியையும் படிக்கத் தொடங்கி விட்டனராம்.2 பாவம் பார்ப்பனர்கள்! அவர்களுடைய கூட்டாளிகளான ஜெர்மானிய ஜப்பானியப் போர் வெறியர்கள் இரண்டாம் உலகப் போரில் தோற்றுப் போய்விட்டனர் கடைசியாக! அவர்கள் சரியாக யக்ஞங்கள் நடத்தவில்லை போலும்!
ஹிட்லர் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தபோது தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழி படிக்கத் தொடங்கினர் என்று கல்கி குறிப்பிட்டுள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும். இந்தப் பார்ப்பனர்கள்தான் நாட்டுப்பற்றைப் பற்றியும், இந்திய தேசியத்துக்காக உயிர் வாழ்வது போலவும் பம்மாத்து அடிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
6.5. 2010 விடுதலை ஒற்றைப்பத்தி - 3
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 3,
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக