ஞாயிறு, 16 ஜூலை, 2017

விநாயகனா விபீஷணனா?


இன்று விநாயகர் சதுர்த்தியாம், நடக்கட்டும், நடக்கட்டும்! இந்த விநாயகர் சதுர்த்தியின் கதையைக் கேட்கும்போது இந்து மதத்தின் கடவுள்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளும், குத்துவெட்டும் நல்ல தமாசாகவே இருக்கிறது.

விநாயகன் என்பதற்கு என்ன பொருளாம்? `வி என்றால் இதற்குமேல் எதுவும் இல்லை என்று பொருளாம். நாயகன் என்றால் தலைவர் என்று பொருள். ஆக, விநாயகன் என்றால் இவருக்குமேல் பெரியவர் யாரும் இல்லை என்று பொருளாகிறது.

அப்படியென்றால் இந்த விநாயகனின் அப்பனாகிய சிவன்  அழித்தல் கடவுளாயிற்றேபிர்மாவின் தலையையே கிள்ளி எறிந்தவனாயிற்றே! `தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி! என்ற கதை அளப்புகள் எல்லாம் உண்டேஅவையெல்லாம் என்னாயிற்று? சிவனை முழுமுதல் கடவுள் என்று எழுதி வைத்துள்ள புராணங்கள் குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டியதுதானா?

பார்வதி தேவியின் உடல் அழுக்கில் பிறந்த விநாயகனுக்கே இவ்வளவு சக்தி என்றால், அந்தப் பார்வதி அம்மாவின் சக்தி  ஆற்றல் எத்தனை மடங்கு பெரியதாக இருக்கவேண்டும்? அதுவும் அந்த அம்மாவுக் குச் `சக்தி என்றே பெயர்!

அவன் அவனால் எந்த அளவுக்கு உளறித் தொலைக்க முடியுமோ, அந்த அளவுக்கு உளறி அந்தந்த நேரத்தில் இருந்த போதையின் டிகிரி அளவுக்குக் கிறுக்கி இருக்கிறார்கள் என்றுதானே தோன்றுகிறது!
இந்த முதல் கடவுளான விநாயகன் தலையில் இராவணனின் தம்பியான விபீஷணன் என்பவன் குட்டு வைத்தானாம்; அந்தக் குட்டு விநாயகனின் தலையில் ஆழமாகப் பதிந்துவிட்டதாம்!

உச்சிப் பிள்ளையார் கோயிலில் மலையின் உச்சியில் இருப்பதால் மட்டும் வந்த பெயரல்லவாம்  விநாயகன் உச்சந்தலையில் விபீஷணன் குட்டு வைத்ததாலும் அந்தப் பெயர் வந்துவிட்டதாம்!

ரொம்ப சரிஇவனுக்கு மேல் இன்னொருவன் இல்லை என்கிற அளவுக்குச் சக்தியும், வீரியமும் பெற்ற விநாயகன் தலையிலே ஆழமாகப் பதியும் அளவுக்கு (இன்றும் அந்தக் குட்டுப்பட்ட இடம் புடைத்துத்தான் காணப்படுகிறதாம் உச்சிப் பிள்ளையார் கோயிலில்) குட்டு வைத்தானே விபீஷணன்  அவன் விநாயகனை விட பெரிய ஆள்  சக்தி வாய்ந்தவன் என்று பக்தர்கள் ஒப்புக்கொள்வார்களா?

புராணிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

7.9.2005 (விடுதலை ஒற்றைப்பத்தி - 2)

நூல் : விடுதலை ஒற்றைப்பத்தி - 2,

ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...