வியாழன், 3 ஆகஸ்ட், 2017

சங்ககரா!



இங்கிலாந்து சென்ற இலங்கை கிரிக்கெட் குழு முதுகொடிய தோல்வியைச் சுமந்து வந்தது.

இலங்கைக் குழுவின் முன்னாள் தலைவரான சங்ககரா லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட்டைத் தாண்டி தமது கிறுக்குப் பிடித்த கீழ்த்தரமான, சீழ்பிடித்த சிங்கள வெறியையும் வெட்கமில்லாமல் வெளிப்படுத்தி, கிரிக்கெட் உலகில் ஒரு அருவருப்பு வில்லனாகி விட்டார் ஒரு சில மணித்துளிகளில்.

கடந்த 30 ஆண்டு காலமாக இருந்த பயங்கர வாதம் இப்பொழுதுதான் இலங்கையில் முடிவுற்று இருக்கிறதாம். முற்றும் அறிந்த மேதாவித்தனமாகப் பேசி இருக்கிறார்.

இலங்கை ராணுவம் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைத் தமிழர்களுக்குச் செய்ததாம். நல்ல வேளை புலி, புள்ளி மானைப் பிடித்து பேன் பார்த்தது என்று சொல்லாமல் விட்டாரே!

சங்ககராவின் உரையைப்பற்றி ராஜபக்சேவின் அருமருந்தன்ன சகோதரர் கோத்தபய ராஜபக்சே ஓகோ என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். இலங்கை ராணுவத்தின் புகழை உயர்த்திவிட்டாராம் இலங்கை கிரிக்கெட் விளையாட்டுக்காரர்.

இலங்கையில் உள்ள ஒரு கிரிக்கெட் விளையாட்டுக்காரர்கூட எத்தனை இனவெறியராகத் துள்ளித் திரிகிறார்.

தமிழ்ப் பெண்களை இலங்கை ராணுவத்தினர் காமப் பொம்மைகளாகக் கருதி சீரழித்தது எல்லாம் இலங்கை ராணுவத்தின் மனிதநேயமான பணி என்று பாடம் சொல்லிக் கொடுக்கிறாரா?

இலங்கை ராணுவம், தமிழின இளைஞர்களை எவ்வளவு கொடூரமாக அணு அணுவாகச் சித்திரவதை செய்து சாகடித்தது என்பதை எந்த லண்டனிலிருந்து சங்ககரா பேட்டி அளித்துள்ளாரோ, அந்த லண்டனில் இருந்துதான் சேனல்-4 என்ற (Channal-4) தொலைக்காட்சி ஒளி பரப்பியது. உலகம் முழுவதும் உள்ள மனசாட்சியும், மனிதப் பண்பும் உள்ளவர்களின் குருதியை செந்நீர் வடிக்கச் செய்தது.

இலங்கைக் கிரிக்கெட் கூட, முத்தையா முரளிதரன் என்கிற ஒரு தமிழரின் திறமையால் உலகில் வலம் வந்துகொண்டிருக்கிறது. விக்கெட்களை வீழ்த்தியதில் உலகில் முதல் இடத்தைப் பெற்றவர் அவர். ஆனால் இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஒரு துணைத் தலைவர் என்கிற அந்தஸ்து கூட அவருக்கு கொடுக்கப்படவில்லை.

இதற்குப் பிறகாவது இலங்கை அணி இந்தியாவில் விளையாட அனுமதிக்கலாமா என்ற கேள்வி எழுவது மிக மிக நியாயமே.



16.7.2011

நூல் :  விடுதலை ஒற்றைப் பத்தி - 4
ஆசிரியர் : கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...