ஞாயிறு, 16 ஜூலை, 2017

இராஜாஜியின் யதேச்சாதிகாரம்



இராஜாஜி உள்துறை அமைச்சராய் இருந்த காலத்தில் அவரே ஒரு அரக்கன் போன்ற பத்திரிகைச் சட்டத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து மெஜாரிட்டி பலத்தைக் கொண்டு அதை நிறைவேற்றியும் வைத்தார்.

பார்லிமெண்டில் பேசிய பலர் அதை ஒரு கறுப்புச் சட்டம் என்று வருணித்தார்கள். அரசுக்கு யதேச் சாதிகாரத்தைக் கொடுப்பதாகக் கூறினார்கள். அதை ராஜாஜி மறுத்தார். எக்ஸ்பிரஸ் பத்திரிகைக் குழுவின் அதிபரும், அன்று பாராளுமன்ற உறுப்பினருமாயிருந்த ராம்நாத் கோயங்கா சட்டத்தைக் காரசாரமாக எதிர்த்துப் பேசுகையில் ராஜாஜியை எனக்குக் கடந்த 20 ஆண்டுகளாகத் தெரியும். அவர் என்றுமே ஒரு யதேச்சாதிகாரியாகத்தான் இருந்து வருகிறார். அதைத்தான் இந்தச் சட்டமும் காட்டுகின்றது என்றார்.

ஆட்சேபகரமான பிரசுரங்களைத் தடுப்பதற்கான சட்டமென்று வந்த அதையே எல்லாரும் ஆட்சேபகரமான சட்டமெனக் கண்டனம் செய்தனர். நல்ல வேளையாகச் சிறிது காலத்துக்குப்பின் அந்த சட்டத்தின் ஆயுளும் முடிந்தது. அதை மீண்டும் புதுப்பிக்காமல் பிரதமர் நேருஜி ஒதுக்கி விட்டார்

பக்கம் 55-_56 (செய்திக்குப்பின் பத்திரிகை இயல்நூலின் ஆசிரியர் என். வேம்புஸ்வாமி) தகவல் உதவி: . சுப்பிரமணியம்

நூல் : பார்ப்பன புரட்டுக்கு பதிலடி

ஆசிரியர் : கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரைத் திராவிடர் கழகம் தவிர்க்கிறதா?

திராவிடர் கழகத்தை, அதன் நன்மதிப்பை, அதன் பிறப்பொக்கும் கோட்பாட்டை, சமூக நீதி சாதனைகளை மறைக்க இன எதிரிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். அதற்...